விபத்து வழக்கு ஒன்றின் பொருட்டு நேற்று அரைநாள் கோர்ட்டில் கழிக்கும்படியானது. வாதி நான் தான் என்பதால் தவிர்க்க இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு வகையில் நல்ல அனுபவமாகவே அமைந்தது. என்ன மாதிரி அனுபவம் என்றால் இனியும் ஒருமுறை எக்காரணம் கொண்டும் வம்பு வழக்கில் மட்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் அது.இரண்டு அடிதடி வழக்குகள், ஒரு கற்பழிப்பு வழக்கு — அவற்றின் விசாரணைகள், கை விலங்குடன் ஆஜரான கைதிகள்; அவர்களுடன் இரண்டு வார்த்தை பேச கால்கடுக்க நின்றிருந்த குடும்பத்தினர்; அவர்களிடம் பணத்துக்கு பல்லைக்காட்டும் காக்கி, கருப்பு உடை சிப்பந்திகள் என்று அச்சூழலே...
கொங்கு முன்னேற்ற பேரவை — ஒரு பார்வை
கொங்கு முன்னேற்ற பேரவை கட்சி குறித்தான ஒரு நண்பரின் மின்னஞ்சலுக்கு நான் ஆற்றிய எதிர்வினையை இங்கே சேமிக்கிறேன்.-0- -0-பொதுவாக ஆதிக்க ஜாதிகளின் பலவீனமே ஒற்றுமையின்மை தான். பதவி போட்டி என்று வரும்போது கொமுபேரவையிலும் விரைவில் இது தலைகாட்டும். (ஏற்கெனவே இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கிறது. தனியரசு என்பவர் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கும் போஸ்டரும் கொடியும் கூட்டமும் அல்லோகல்லல் படுகிறது).தலித்கள் போன்ற ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு இருக்கும் சமுதாய தேவைகள் எதுவும் கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு கிடையாது. கள் இறக்க அனுமதி, விவசாய இடுபொருள்...
Subscribe to:
Posts (Atom)