இன்றைய வெகுஜன இதழ்களின் போக்கை முன்வைத்துஎஸ்.ஏ.பியுடன் குமுதமும் பாலசுப்ரமணியனுடன் விகடனும் அவை எதற்காக விரும்பப்பட்டனவோ அத்தனித்தன்மையை இழந்து விட்டன. இது தலைமுறை மாற்றம்; நிர்வாகத்தில் மாத்திரமல்ல, வாசகர்களின் ரசனையிலும்கூட. சினிமாவும் பிரபலங்களின் அந்தரங்கம் பற்றிய கிசுகிசுவும் இல்லாத ஒன்றை புரட்டியும் பார்க்கவும் தயாரில்லாத சமூகம் இது. இவை மட்டுமே விற்கும்போது அவை மட்டுமே அச்சில் கிடைக்கும்.நல்ல சினிமா அதிகம் வருவதில்லை என்று சினிமாவுக்குச் சொல்லப்படும் தகுமானம் போல பத்திரிக்கைகளுக்குச் சொல்லி தப்பிவிட முடியாது. உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா,...
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - தொடரும் உரையாடல்
இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தை முன்வைத்த விவாதத்தில் என் சில கருத்துகள்:தமிழ்ப்படங்களை விமர்சிக்கும்போது அதனை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுச் செய்வது தமிழ்ச் சினிமா சூழலுக்கு பொருத்தமாக இருக்காது. அவை மலைகள்; இவை மண் மேடு. வேண்டுமானால் குயிக் கன் முருகனையும் இ.கோ.மு.சி.ஐயும் ஒப்பிடலாம் :-) இவைகளின் தரம் அவ்வளவுதான். மற்றபடி படம் சுமார்தான் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.அதேசமயம் இதைத்தாண்டி ஒரு திரைக்கதையை தமிழ் சினிமா ரசிகனுக்கு ஏற்றபடி எழுதிவிட முடியுமா என்பதும் சிந்தனைக்குரியது. கொஞ்சம் நுணுக்கமாக எடுத்து விட்டால் ‘புரியலை’ என்றும்,...
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் மீட்டெடுத்த காமிக்ஸ் நினைவுகள்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தை இன்று மாட்னி ஷோ பார்த்தேன். படம் பற்றி நான் படித்தனவற்றுள் இந்த பதிவரின் விமர்சனம் (http://digs.by/boFQGX ) எனக்கு வரிக்கு வரி உடன்பாடாக இருப்பதால், தனியாக நானும் ஒன்றை எழுத வேண்டிய அவசியமில்லை என்று விட்டு விடுகிறேன்.இருந்தாலும் சுருக்கமாக: சிம்புதேவனிடம் அதிகம் எதிர்பார்த்து செல்பவர்களுக்கும், மெக்கனாஸ் கோல்டு புதையல் வேட்டை வகையறாக்களை ஏற்கெனவே பார்த்து விட்டவர்களுக்கும் இப்படம் சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு தமிழில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இம்சை அரசன் அளவிற்கு நான் ஸ்டாப்பாக இல்லையெனினும் அவ்வப்போது...
Subscribe to:
Posts (Atom)