அது காலை நேரத்தின் வழக்கமான பீக் அவர்ஸ் கூட்ட நெரிசல். பிதுங்கியபடி வந்து நின்ற பேருந்தை காணவே அலுப்பாக இருந்தது. படிகளில் தொங்கிவரும் கூட்டத்தில் கலந்து முன்னேறி உள்ளே செல்வது அனுதினமும் ஒரு சாகசச் செயல்.கரூருக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த இரண்டு வருட அனுபவத்தில் இதெல்லாம் இப்போது கைவந்த கலையாகிவிட்டது. கால்விரல்களில் பேலன்ஸ் செய்து கைகளை லாவகமாக கண்ணில் படும் இடங்களில் நுழைத்து முன்னாலிருக்கும் மனிதர்களுக்கு முகம் இடிபட போவது போல பாவனை செய்தால் உள்ளே செல்ல தானாக இடைவெளி கிடைக்கும்.அந்த சாகசக் கலையை பயன்படுத்தி படிக்கட்டிலிருந்து மேலே...
தாய்மொழியும் ஆன்மிகமும் - ஜெமோவுக்கு ஓர் எதிர்வினை
மொழிக்கான தேவை என்பது அக்குழந்தைகளின் இயல்பான ஆன்மீக வல்லமை சார்ந்த விஷயம்.வெறுமே உலகியலார்வம் மட்டும் உள்ள குழந்ததைகளுக்கு ஒருவேளை தாய்மொழி தாய்நாடெல்லாம் பொருட்டாகத் தெரியாது. ஆனால் கணிசமான குழந்தைகள் அப்படி அல்ல. அவற்றுக்குள் ஆன்மீகமான ஒரு நாட்டம் உள்ளது. அவைதான் கலைகளையும் சிந்தனைகளையும் நோக்கிச் செல்கின்றன. - ஜெயமோகன் ஜெயமோகனின் அரசியலை எளிமைப்படுத்திச் சொல்லி விடலாம். அது எந்த கருமாந்திரம் குறித்த உரையாடாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கான பதிலில் ஆன்மிகத்தையும், தேசிய இன உணர்வையும் கோட்டிங் வேலை செய்துவிட வேண்டும். உடனே கூட்டம்...
Encounter with comrades
ஏறத்தாழ இரண்டு வருடங்களாக கரூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போதும் கரூர் பேருந்து நிலையம் சென்று இறங்குவது எனக்கு வழக்கமல்ல. அதற்கு முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி விடுவேன். மிக நெரிசலான தினங்களில் நடுப் பேருந்தில் மாட்டிக்கொண்ட நாள்களில் மட்டும் பஸ் நிலையம் சென்று இறங்கி அங்கேயிருந்து அலுவலகம் நோக்கி பின்னோக்கி வருவேன்.என்றாவது நடக்கும் இந்த சம்பவம் எனக்கு ஒரு விதத்தில் பிடிக்கும். பஸ் நிலையத்திலிருந்து அலுவலகம் வரும் வரை சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும், துண்டு பிரசுரங்களையும்,...
ராஜராஜன் ஆட்சி காலம் பொற்காலமா?
//ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். //நிலவரி, கிராமசபை, குடவோலை, சமுதாய முன்னேற்றம் --- இதிலெல்லாம் பயனடைந்தவர்கள் குப்பனோ, சுப்பனோ, விவசாயியோ, வியாபாரியோ அல்ல. மேற்சொன்ன எதிலும் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால் ராஜராஜன் காலம் பொற்காலம் என்றால், அது யாருக்கு பொற்காலம் என்பது முக்கியமான கேள்வியாகிறது. இன்னும் முழுமையான வரலாறுகள் எழுதப்படவேயில்லை. எழுதப்பட்டுள்ளவை எல்லாம் ஒருசார்பானவைகளாகவே...
மரபு சுற்றுலாக்கள்
வருடம் ஒருமுறை நடக்கும் சந்திப்புகளை கொஞ்சம் திட்டமிட்டால் இந்த மாதிரி புராதன இடங்களை சென்று பார்க்கும் heritage tour-களாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் அதற்கெல்லாம் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பத்து பேருக்கும் ஒருவர் தேறினால் பெரிய விஷயம்.தஞ்சை பெரியகோவில் என்றால் பொதுவில் நந்தி சிலையும், கோவிலும், கற்கோபுரமும் தான் அதன் சிறப்பு என்று நினைக்கிறோம். ஆனால் ராஜராஜ சோழனின் ஆட்சியில் அது ஒரு கருவூலமாக, ஜமீனாக, வங்கியாக, வரி வசூல் மையமாக, ஆடல் மகளிரின் இருப்பிடமாக ... இன்னும் பலவாறான செயல்பாடுகளுடன் தனித்துவமாக விளங்கியது....
காவலன்
காவலன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ட்விட்டியதும்தான் எத்தனை கெக்கலிப்புகள்! புருவம் சுருக்கல்கள்! பரிதாப பார்வைகள்! விஜய் பாவமா அல்லது நான் பாவமா என்று புரியாமலே படம் பார்க்க ஆரம்பித்தேன்.காவலன், முதல் பாதியில் எனக்கு பிடித்த விஜய் படமான வசீகராவை நினைவூட்டினான். எவ்வித அதீதங்களும் அலட்டல்களும் இல்லாத கதைப்போக்கில் விஜயின் underplay-வை ரசித்தபடியும், சித்திக்கின் நகைச்சுவை காட்சியில் மீண்டும் பரிமளித்த வடிவேலை கண்டு சிரித்தபடியும் இடைவேளை வரை படம் நன்றாகவே சென்றது. அதற்கு பிறகு திரைக்கதை soap opera ஆகி சொதப்பலாக மாறி எப்போது...
போலி கலாச்சார மதிப்பீடுகள்
கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.இந்த தற்கொலை சாவுக்கும் இந்த வரிகளுக்கும் என்ன சம்மந்தம் என்று வினவுக்கு மட்டுமே வெளிச்சம். இந்தப் பெண்ணுக்கு ‘திருடி’ பட்டம் கிடைத்து எள்ளி நகையாடப்பட்டு, அதன் அவமானம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதே. அதுதான் உண்மை என்றால் இதற்கு மேல் நான் எழுதுவதற்குள் செல்ல வேண்டியதில்லை. ஆனால் நிர்வாணமாக சோதனை செய்தார்கள் என்பதற்காக...
Subscribe to:
Posts (Atom)