இன்று மோனிகா பெல்லூசியைப் பற்றி தேடப் போய் அவர் கணவருக்கு பிடித்தமான 'Capoeira' பற்றி அறிந்து கொண்டேன். அதுமுதல் அது என்னை உள்ளிழுத்துக் கொண்டது. Capoeira இசை, நடனம், சண்டை அனைத்தும் உள்ளடங்கிய ஒரு ஆப்பிரிக்க-பிரேசிலிய கலை வடிவம். பிரேசிலுக்கு விற்கப்பட்ட கறுப்பின அடிமைகளிடையே உருவானதாக தெரிகிறது. அதைப்பற்றிய மேலதிக விவரங்களுக்கு மேற்கண்ட விக்கிபீடியா தளத்தை நாடலாம்.
Capoeira இன் பல வீடியோக்களை யூடியூபில் கண்டு கொண்டிருக்கிறேன். உடலையே கருவியாக்கி செய்யும் வித்தை அற்புதமாக இருக்கிறது. கடுமையான பயிற்சி முறைகளுக்கு பிறகே இத்தகைய நேர்த்தி சாத்தியம். இத்துடன் N'golo போன்ற வேறு சில fight dance கலை வடிவங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது. இத்திசையில் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் என்பதை மனதில் குறித்துக் கொள்கிறேன்.
இது போன்ற fight dance வகை கலை வடிவங்கள் தமிழில் உண்டா? சிலம்பாட்டம் இதற்கு பொருந்தாது. அதில் நடனத்துக்குரிய நளினம் கிடையாது. விக்கிபீடியா வகைப்படுத்தும் மற்ற martial art தற்போது வழக்கத்தில் இல்லை. நம்மிடையே உருவான கலை வடிவங்களை நாமே வளர்த்தெடுக்க தவறிவிட்டோம். நம்முடைய கலை ஆர்வங்கள் முடமாகி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இவற்றை அழித்ததில் சினிமாவுக்கு முக்கியமான பங்குண்டு.
ஆப்பிரிக்க-பிரேசிலிய கலை 'Capoeira'
Posted:
Friday, July 3, 2009 |
Posted by
no-nononsense
|
Labels:
கலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment