இன்றைய இளைஞர்கள் மற்றும் சீமானின் அரசியலை முன்வைத்து

Posted: Sunday, November 29, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
My reply to my friend's support for Seeman and his view on today's youths: நண்பா, சீமான் விஷயத்தில் நிச்சயம் நீ என்னை எதிர்கொள்வாய் என்று எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது. விவாதிக்க முன்வந்ததற்கு முதலில் நன்றி. விவாதிப்பதன் மூலம்தான் சிந்தனையை கூர் தீட்டிக்கொள்ள முடியும். மாற்று கருத்துக்களை எதிர்கொண்டால்தான் தெளிவு கிடைக்கும். இன்றைய இளைஞர்களை யாரும் தவறாக வழிநடத்திவிட முடியாது என்கிறாய். நமது இளைஞர்கள் அவ்வளவு பக்குவப்பட்டு விட்டார்கள் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நாட்டு நடப்பு அப்படியிருப்பதாகத் தெரியவில்லை. ஜாதி, இனம், மொழியின் பெயரால்...
மேலும்...

சிதறலாய் சில குறிப்புகள்

பங்கு வர்த்தக தொழிலில் இருக்க நேர்வது ஒரு வகையில் புலி வாலைப் பிடித்த நாயர் கதைக்குச் சமம். இதிலுள்ள ஸ்ட்ரெஸ்ஸை நினைத்தால் விட்டு ஓடிவிடலாம் என்று தோன்றும். அதே நேரம் இதர சலுகைகளையும், விடுமுறைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, கை வாலை இன்னும் கொஞ்சம் இறுக பிடித்துக் கொள்ளச் செய்யும். பலரும் நினைப்பதுபோல் இதில் பிரச்சினை மார்க்கெட்டால் வருவதே இல்லை. கிளையண்ட் என்கிற மஹானுபாவர்கள் தான் நம்முடைய பி.பி அளவை நிதமும் உயர வைத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக டே டிரேடர்ஸ்! அவர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். இப்பொழுது நான் சொல்ல வருவது, வெள்ளி கிழமை...
மேலும்...

மாவீரர் நாள் 2009 - ஒரு பார்வை

Posted: Friday, November 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
பலரும் பலநாளும் எதிர்பார்த்திருந்த முக்கியமான மாவீரர் நாள் நேற்று கடந்து சென்றிருக்கிறது. மாவீரர் நாளில் உரையாற்றுவதன் மூலம் ஈழப் போராட்டத்தை யார் அடுத்து முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்று பலரின் மனதிலும் தொக்கி நின்ற கேள்விக்குத் தெளிவான பதிலைத் தராமலே இந்த நாள் சென்றுவிட்டது. சிலர் பொட்டு அம்மன் வருவார் என்றனர்; இன்னும் சிலர் பிரபாகரனே தன்னை வெளிபடுத்திக் கொள்வார் என்றனர். இரண்டுமே நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் ’மாவீரர் தின உரை’ என்ற பெயரில் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரபாகரனின் இடத்திலிருந்து தமிழீழ...
மேலும்...

2012

Posted: Tuesday, November 24, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
எனக்கு இப்படத்தை பார்ப்பதைப் பற்றி இறுதி வரை இருமனதாகவே இருந்தது. காரணம் இப்படத்தை எடுத்த டைரக்டர்தான் “இண்டிபெண்டென்ஸ் டே”, “டே ஆஃப்டர் டுமாரோ” போன்ற மொக்கைகளையும் எடுத்தவர் என்கிற பயம் ஒருபுறம்; பதிவுலகம் முதல் பத்திரிக்கையுலகம் வரை இப்படத்துக்கு கொடுத்து வரும் பில்டப்புகள் (viral marketing) மறுபுறம் என குழப்பமாக இருந்தது. எதற்கும் ‘நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா’ நம்ம டிபிஎன். சுரேஷ்குமாரை கேட்கலாமேயென்றால், அவனோ ’கந்தசாமி ஜூப்பர் அப்பு’ என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டு, பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டதிலிருந்து இனி எந்த படம் பார்த்தாலும்...
மேலும்...

கும்பல் வன்முறை கருத்தும், நிபுணரின் விளக்கமும் உரையாடலும்

Posted: Saturday, November 14, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My comments about a blog post shared by my friend and explanation on vandalism by my friend Dr.Singaravelu, psychiatrist :>> இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே <<வரலாற்றிலிருந்து தமக்கு வசதியான ஒன்றை மட்டும் உருவி பரபரப்பாக ‘ப்ளாக்’ எழுதுவது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். உரிமை கேட்டு ஊர்வலமாக வந்ததற்காக அவர்கள் தாக்கப்படவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கும் நடந்த இந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நடந்தது இதுதான்.இங்கேயிருந்து தமிழர்கள் எப்படி...
மேலும்...

வாழ்க்கையின் தேட்டமும் தேடலும்

Posted: Sunday, November 8, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒரு சராசரி மனித வாழ்க்கையின் தேடல் என்னவாக இருக்கும்?பணமும் புகழும் சம்பாதிப்பதுஅதை அடைந்த பிறகு?மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பதுஅதற்கும் பிறகு?மேலும் மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பதுஇப்போது அவை இரண்டிலும் உங்களை விஞ்ச ஆளில்லை. அதற்கும் பிறகு உங்களின் தேடல் என்னவாக இருக்கும்??இக்கேள்விக்கான தேடலில்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.இன்று மாலை நாமக்கல்லின் பிரபல மருத்துவரும் செல்வந்தருமான ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலையிலிருந்து தன் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைந்திருப்பவர்....
மேலும்...

விசிலடிச்சான் குஞ்சுகள்

Posted: Thursday, November 5, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
1) முதலில் விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றி,எனக்கு அப்படியிருப்பதைப் பற்றி பெரிய விமர்சனம் கிடையாது. ஒரு music concert சென்றால் எப்படி ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்கிறோமோ அதைபோல் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை கொண்டாடி மகிழ்வதில் பிரச்சினையில்லை. ஆனால் திரை நாயகனை நிஜத்திலும் நாயகனாக வரித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைப்பது தான் உள்ளபடியே பரிதாபம். விஜய் போன்ற நடிகர்களின் பின்னால் கூடும் கூட்டங்களைப் பார்க்கும்போது இது குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. தமிழனுக்கு யாரையாவது துதி பாடிக்கொண்டே இருக்க வேண்டும்....
மேலும்...