நெடுமாறன்: ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான்...
வேதகால பிராமணர் திராவிடரா?
வேதங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். இப்போது அவ்வாறாக சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.
முதலில் வேதம்தான் ultimacy என்று நினைப்பதும், அவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயலுவதுமே தவறான அணுகுமுறை. இங்கே குறிப்பிட்டுள்ளதை போல அவை ஒன்றும் 6000 ஆண்டுகள் எல்லாம் பழமையானவை அல்ல. அப்படியெல்லாம் ஒரு ஆதாரமும் கிடையாது. வேதங்களில் பழமையானதுவான ரிக் வேதம் கி.மு.1200 - 1500 ஆண்டுகளில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தீவிர இந்துத்துவ நூல்களே அவ்வாறுதான் குறிக்கின்றன. அப்படியானல் மற்ற வேதங்களெல்லாம்...
கல்சா
சீக்கிய மதகுருமார்களுக்கும் முகலாய அரசர்களுக்கும் இடையே நிலவி வந்த நட்பையும் பூசலையும் பற்றிய வரலாற்று குறிப்புகளை இன்று காலை வாசித்துக் கொண்டிருந்தேன். சுவாரசியமாக இருந்தது.
இந்திய வரலாற்றில் சீக்கிய மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முகலாய ஆட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் சமகாலத்தியவை. முகலாய சாம்ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், அதாவது அக்பர் காலம் வரை ஒரு சுமூகமான நல்லுறவில் இருவரும் இருந்து வந்திருக்கின்றனர். ஜகாங்கீர் காலத்தில்தான் மோதல் வந்திருக்கிறது. அது ஔரங்கசீப் காலத்தில் சீக்கியர்கள்...
இக்கரைக்கு அக்கரை பச்சை
வாரமலர், குடும்பமலர், வாரக்கதிர் போன்றவற்றில் சினிமா செய்திகளுக்கு பிறகு நான் விரும்பிப் படிப்பது திண்ணை போன்ற தொடர்களைத்தான். நாம் பல நூல்களை தேடிப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்களையெல்லாம் பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த வாரம் வாரக்கதிரில் இடம்பெற்றுள்ள கண்ணதாசனின் கீழ்காணும் பாடல் வரிகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. “இக்கரைக்கு அக்கரை பச்சைஅக்கரைக்கு இக்கரை பச்சைகடல் மீது விழுந்தவர்கள் நீந்துங்கள்கனி மீது விழுந்தவர்கள் உண்ணுங்கள்வழிச்சாலை கண்டவர்கள் செல்லுங்கள்போகவழி தவறியவர்கள்...
நிகழ்த்து கலைகள்: தேவராட்டம் ஒயிலாட்டம்
// http://www.youtube.com/watch?v=QsVJFQEXS2k இது ஒயிலாட்டம் என நினைக்கிறேன். சரியா//
இல்லை. இதுவும் தேவராட்டம் தான். ஒயில்லாட்டம் என்றால் பின்னணியில் பாடல் இருக்கும்.
தேவராட்டத்திற்கும் ஒயிலாட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் தேவராட்டத்தில் தேவதுந்துபி அல்லது ஏதேனும் தோலிசைக்கருவி இசைக்கப்பட அதன் ரிதத்துக்கு ஏற்ப ஆட்டம் மெதுவாக ஆரம்பித்து உச்சக்கட்டத்தில் வேகம் சூடுபிடிக்க முடிவடையும். இசை மட்டுமே; பாடல் இருக்காது.
ஆனால் ஒயிலாட்டத்தில் பாட்டும் அதற்கு பின்பாட்டும் இருக்கும். ஒயிலாட்டி(இவர் தான் ஆட்டத்திற்கு ஆசிரியர்) பாடும் பாட்டிற்கு...
திரைக்கதையின் துணிபு, இது நம்ம ஆளு!
‘அம்மாடி இதுதான் காதலா
அட ராமா இது என்ன வேதமோ’
பேருந்தில் கேட்டதிலிருந்து இப்பாடல் வாயில் ஒட்டிக் கொண்டு விட்டது. கேட்டதிலிருந்து என்பதை விட பார்த்ததிலிருந்து என்றுச் சொல்லவேண்டும். வழக்கமான பாடாவதி படங்களுக்கு பதிலாக இன்று ‘இது நம்ம ஆளு’ ஓடிக் கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்த ரசித்து பார்த்தபடி பயணித்து வந்தேன்.
தமிழின் சிறந்த படங்கள் என்று ஆளுக்கொரு பட்டியல் வைத்திருப்பார்கள். ஆனால் இது நம்ம ஆளு யாருடைய பட்டியலிலும் இருக்காது. உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்த ஆக்கங்களில் மிக முக்கியமானவைகளில்...
யாகாவாராயினும் நாகாக்க
நண்பர் பேச பேச எனக்குள் நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தன.
மானசீகமாக மனதிற்குள் எத்தனையோவாவது முறையாக அதே சபதத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருந்தேன்.
இந்தமுறை கண்டிப்பாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று ஒரு வெறி மனதிற்குள் குடி கொண்டது.
அதே எண்ணத்துடன் தூங்கப் போனவன், அதிகாலை அலாரம் வைத்து எழுந்து விறுவிறுவென தகுந்த உடைகளை உடுத்திக் கொண்டு பள்ளி மைதானம் நோக்கி விரைந்தேன்.
மனதிற்குள் எப்போதோ படித்த உதயமூர்த்தி வந்து ‘தம்பி! உன்னால் முடியும் தம்பி!’ என்று உச்சஸ்தாயில் உரக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார்’. உந்துதல் கூடி நாடி கூடுதலாக துடிக்கத் தொடங்கியது....
பயத்தால் விழையும் ஒழுக்கம்
எரியும் வீடு
இந்தியில்ராஜ்கமல் சௌத்ரி,
தமிழில்:சொ. பிரபாகரன்
(http://www.nisaptham.com/2005/05/blog-post.html)
என்னுடைய இன்றைய நாளை சிறப்பு செய்தது இந்த சிறுகதை. it made my day என்பார்களே அப்படி.
எயிட்ஸ் என்னும் பெருநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிடில் இதுபோன்ற தேவடியாகுடிகளில் நாம் தொலைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு இருக்கும்? இப்போது எப்போதாவது மோதிக்கொள்ளும் கண்ணாடி கோப்பைகளின் ‘க்ளிங்’ சத்தத்தின் பின்னால் மறைந்துள்ள போதையில் மீது கொண்டிருக்கும் பிரேமை போல, சில பேதைகளின் மீது பிரேமை கொண்டு நாடி கிடந்திருப்போம். பீர் பாட்டில்களில் என்...
உடற்பயிற்‘சீ’
மேற்கத்திய நாகரிகத்திடமிருந்து எதைக் கற்றுக்கொண்டாலும் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மட்டும் கற்க மறுக்கிறோம். வேலை செய்யும் கம்பெனியிலேயே காசு கொடுத்து போகச் சொன்னாலும் வாய் காரணத்தை முணுமுணுக்கிறதே தவிர, உடம்பு வளைவதில்லை. நம் பிள்ளைகளுக்காவது அந்தப் பழக்கம் வாய்ப்பதாக.
மேலும், நமக்கு பாடிபில்டிங்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஜிம்முக்கு போவது உடம்பை தேத்த என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் பள்ளிகளில் இருந்து பழக்கமாக வேண்டும். அங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் பிடி பீரியடில்...
சிற்சில குறிப்புகள் (7)
துரோகி என்று ஒரு படத்தின் டிவிடியை அண்டை வீட்டுக்காரர் வலிய வந்து பார்க்க கொடுத்து சென்றிருக்கிறார். இப்படி இவர் கொடுத்தே அநேகமாக அண்மை காலத்தில் வந்த எல்லா படங்களையும் பார்க்க வைத்துவிட்டார். இதன் பின்னாலுள்ளது நல்நோக்கமா அல்லது யாம் பெற்ற இன்ப உள்நோக்கமா என்பது பற்றி ஒரு சம்சயம்!
*
ஹோமோசெக்ஸ், ஓரல்செக்ஸ் மாதிரி அதென்ன பெயர் வைத்திருக்கிறான் சென்செக்ஸ் என்று — என்று இன்று ஒருவர் சீரியஸாக கேட்டார். ரொம்ப 'சிரி'யஸ் ஆகிவிட்டேன். :D
*
தம் இஷ்டப்படி நள்ளிரவில் தொழில்முறை பணிகளை வைத்துக்கொள்ள முடிபவர்கள் பூர்வஜென்ம புண்ணியாத்மாக்கள்! ஓசைகளற்ற அமைதியும்...
Subscribe to:
Posts (Atom)