My Comment on Lord Muruga and the corporate guruji's:
ம்ம்ம்.. அயல்நாட்டு கோவில்களெல்லாம் பள பளவென்று சுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன. அதிகமாக விஷ்ணு கோவில்கள்தான் இருக்கின்றன போலும். இதேபோல் சிவன் கோவில் எங்கேயாவது இருக்கிறதா? I meant abroad
சிட்னி, சிங்கப்பூர், லண்டன் மூன்றும் தமிழர் வாழும் இடங்கள். அங்கேயெல்லாம் முருகன் கோவில் இருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழர் அல்லாத ஏனைய ஹிந்துக்கள் வசிக்கும் எந்த இடத்திலாவது முருகன் வழிபாடு நடந்து பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு ஏன்.. வட இந்தியாவில் ஒரே ஒரு முருகன் கோவிலாவது இருக்கிறதா? இத்தனைக்கும் முருகனை பரமசிவனின் மகன், தகப்பனுக்கே பிரணவ மந்திரம் ஓதிய தகப்பன்சாமி என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நிஜம் என்னவென்றால், நாம் தான் சொல்லிக்கொள்கிறோமே தவிர வடக்கே எவனும் கண்டுகொள்வதில்லை. வட புராணங்களில் குறிப்பிடப்படும் கார்த்திகேயனும்(சரவணன்), இங்கே குறிஞ்சி நில தெய்வமாகிய முருகனும் ஒன்று அல்ல; இரண்டையும் ஆரிய திராவிட கலப்பின்போது மெர்ஜ் பண்ணி விட்டார்கள் என்கிறார்கள் அறிஞர்கள்.
சுவாமி நாராயண் கோவில்களைப் போலவே இன்னும் நூறு வருடங்கள் கழித்து இங்கே தமிழ்நாட்டிலும் சுவாமி சத்குரு, சுவாமி நித்தியானந்தா, சுவாமி பூஜ்யஸ்ரீ ஆலயங்களை காண முடியும் என்று அடித்துச் சொல்கிறேன். சுவாமி நாராயணும் ஆரம்பத்தில் இவர்களைப் போன்ற ஒரு இன்னோவேடிவ் சாமியாராகத்தான் இருந்தார். இவர்களையெல்லாம் கூட ஒரு கணக்கில் வைக்கலாம்.. நான் ஸ்டாப்பாக நாலு மணி நேரம் கூட இவர்களால் கூட்டத்தை கட்டிவைத்து பேச முடிகிறது.. Considerably good counselors! ஆனால் பங்காரு அடிகளார் என்று ஒருவர் இருக்கிறாரே.. அவருக்கு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது?! வேப்பிலையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து கூட்டத்தை பார்த்து கும்பிடு போட்டபடி சென்றதைத் தவிர இத்தனை பெண்களை கவரும்படி என்ன செய்துவிட்டார் என்பதுதான் இன்று வரை எனக்குப் புரியவில்லை. அன்றைக்கு ஒருநாள் டிவியில் பார்க்கிறேன், அவருடைய திருமதியையும் பக்தர்கள் பூஜித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள்.. இன்னொரு அம்மா பகவான்?? கிழிஞ்சது லம்பாடி லுங்கி!!
0 comments:
Post a Comment