’தமிழ்ப் படம்’ - விமர்சனம் & தியேட்டரில் IPL போட்டிகள்

Posted: Saturday, January 30, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
’தமிழ்ப் படம்’ பார்த்துவிட்டேன். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாமலே படம் நெடுக சிரித்துக்கொண்டிருந்தோம். என்னதான் படம் கிச்சு கிச்சு மூட்டினாலும் கதை என்று ஒன்றும் இல்லாததால் இரண்டாம் பாதியில் திகட்டி நெளிய வைக்கிறது. ஒரு பத்து லொள்ளு சபா எபிஸோடுகளை ஒருசேர பார்த்த உணர்வு. அவ்வளவுதான்.*வரும் IPL போட்டிகளை தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக இடைவேளையில் விளம்பரம் காட்டினார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது. வீட்டில் சின்னத் திரையில் தனிமையில் பார்ப்பதைவிட தியேட்டரில்...
மேலும்...

ஒற்றைப் பரிமாண நகைச்சுவை ரசனை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கோவா படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதைவிட ’தமிழ்ப்படம்’ நல்ல நகைச்சுவைப் படம் என்று இணைய விமர்சனங்கள் சொல்கின்றன. அதிலும் ஒருவர் “தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது” என்று ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியிருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. இன்று அதைப் பார்த்துவிட உத்தேசம். சமீபமாக காமெடிப் படங்களை பார்க்க எத்தனிக்கும் ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வரும் ஒரு கசப்பான அனுபவம் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ சார்ந்தது. கனடாவைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பராகிய இலங்கை தமிழ்ப் பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டுக்கு...
மேலும்...

கேரள பாரம்பரிய ஆடை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
Reply to my friend's comment on Kasavu mundu: yenakum கசவு முண்டும் yendral theriyumபுத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி கேட்டால் அதன் உறையை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளிக்கும் உன் நுண்ணறிவைக் கண்டு பிரமித்து நின்றேன். நான் குறிப்பிட்டது வேறு ஒன்றைப் பற்றி.. 1. கசவு முண்டு என்பது உண்மையில் இப்போது இருக்கும் ஆடை வடிவம் அல்ல. பழசிராஜாவில் கனிகா உடுத்தியிருப்பதுதான் நிஜமான கசவு முண்டு. மேலும் அது இப்போது கேரள பெண்கள் உடுத்துவது போல சேலை வடிவத்தில் இருக்காது (இப்போதையதை செட்-சாரி என்பார்கள்). வேஷ்டி மாதிரி...
மேலும்...

மாற்றங்களை மறுக்கும் தமிழ்த் திரை ரசனை

Posted: Sunday, January 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Reply to my friends question on reasoning the mystic scenes in AO:அப்பனே..! மேஜிக் என்ற பிறகும் அதன் மாயையான காட்சிகளுக்கு எல்லாம் லாஜிக் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றுகிறது. ஆனால் எதுவுமே உண்மையில்லை. எனக்கு தெரிந்த எளிமையான மொழியில் சொன்னால் அவ்வளவுதான். ஏவி விடப்பட்ட மாந்த்ரீகம் உண்டாக்கும் மன மயக்கங்களை காட்சிப்படுத்தும்போது, அதை அப்பாத்திரங்களின் கண்ணோட்டத்தில்தான் சொல்ல முடியும். வேறு மாதிரி கோணத்தில் சொன்னால் அது நாடக பாணியில் இருக்குமே தவிர, நவீனத்துவ சினிமாவுக்கான முயற்சி அங்கே அடிபட்டு...
மேலும்...

சோழர்கள், இலங்கை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் - சில எண்ணங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
இலங்கையின் பூர்வகுடி திராவிடர்களாக (தமிழர்கள்) இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது அங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் கிடைத்த பழங்கால ஆயுதங்கள், நாணயங்கள் தென்னிந்தியாவின் திராவிட நாகரிகத்துடன்தான் ஒத்துப் போகிறதே தவிர, தங்களை ஆரியர்களாக அடையாளப்படுத்தி வரலாற்றை திரித்து வைத்திருக்கும் சிங்களவர்களின் புரட்டுடன் பொருந்திப் போகவில்லை. அங்கே கிடைத்த முதுமக்கள் தாழியில் இங்கே போலவே தமிழ் எழுத்துக்கள் காணப்படுப்படுவதே இதற்கு அத்தாட்சி.சிங்களவர்களின் வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் கூட சிங்களவர்களின்...
மேலும்...

எதிர்மறை பதிவர்களை எதிர்கொள்வது எப்படி?

Posted: Tuesday, January 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
My reply on the topic of taking up the bloggers who are characterized by habitual skepticism: நண்பர்களே.. இங்கே பிரச்னை பகலவன் பகிர்ந்து கொள்ளும் செய்திகள் என்பதை விட அதை அவர் வழங்கும்விதம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவர் சின்னதாக ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்லக்கூடியதைக்கூட இரண்டு மூன்று பாராக்களுக்கு இழுக்கிறார். அதற்காக அதை ஊதி பெரிதாக்க வேண்டியிருக்கிறது. இந்த அவரின் எழுத்து நடைதான் அச்செய்தியை உள்வாங்கிக்கொள்வதில் இடைஞ்சலாக இருக்கிறது. உதாரணமாக காவிரி ஆற்றின் மழை நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி பல அணைகளின் படங்களுடன் ஒரு பதிவு போட்டிருந்தார்....
மேலும்...

ஆயிரத்தில் ஒருவன் - மேலும் சில கருத்துக்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 1 comments
ஆயிரத்தில் ஒருவன் பல மட்டங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதை இணையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகிறது. வசூல் நிலவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கும்போது என்னைப் பொருத்தவரை இப்படம் ஏற்படுத்தியுள்ள இத்தகைய தாக்கம்தான் அந்த படத்தின் உண்மையான வெற்றி என்று சொல்வேன். இது தமிழ் திரைச்சூழலில் மிகவும் தேவையான ஒன்று. இங்கே மாற்று சினிமா என்பதே கிட்டத்தட்ட கிடையாது என்று சொல்லலாம். அப்படியே எடுத்தாலும் காஞ்சிவரம் போல அவார்டுக்காகவே எடுக்கப்பட்டு அது குறுகிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டிக்குள் சென்றுவிடுகிறது.மக்கள் தங்களின் ஒற்றைப்...
மேலும்...

இந்திய தேசியம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளல் மற்றும் தமிழ் தேசியம்

Posted: Saturday, January 16, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
My reply to my friend's comment on criticizing Indian social political happenings:பாலா, எப்போது பார்த்தாலும் குற்றம் குறை ’மட்டும்’ சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏற்படும் அலுப்புதான் உன் கருத்துக்கு காரணம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால் அப்படி சொல்லும் விஷயத்தில் பொய்யும், திரிபும் இல்லாதவரை அதில் பிரச்னை இல்லை என்பதை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், அலட்சியங்கள் தொடர்ந்து யாராலாவது கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியம். எங்கேயாவது ஒரு மூலையில் இருந்தாவது ஒரு கலக குரலாவது தொடர்ந்து ஒலித்துக்கொண்டே...
மேலும்...

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து நண்பர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுக்கொண்டிருந்த நிலையில் என்னை படம் பார்க்க தூண்டியது பவித்ரா ஸ்ரீநிவாசனின் இந்த ரிடீஃப் விமர்சனம். பவித்ரா எனக்கு பொன்னியின் செல்வன் மின் மடல் குழுவில் பழக்கம் என்பதால் வரலாற்று துறையில் அவருடைய ஈடுபாடு மற்றும் களப்பணிகள் குறித்து எனக்கு கொஞ்சம் அறிதல் உண்டு. சோழ, பாண்டிய வரலாற்று பின்னணி கொண்ட இப்படத்தின் கதைக்கு அவர் விமர்சனம் எழுதியது மிகப் பொருத்தமானது என்பதால் எதிர்மறை விமர்சனங்களை மீறி பவித்ராவின் சிலாக்கியமான விமர்சனம் காரணமாக இப்படத்தை பார்க்க துணிந்தேன்....
மேலும்...

நாமக்கல் ஓசை

Posted: Thursday, January 14, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நேற்று நாமக்கல் ச.பே.புதூர் முனையில் ‘நாமக்கல் ஓசை’ எனும் விளம்பரத்தையும், இது சம்மந்தமான சில போஸ்டர்களையும் கண்டேன். பொங்கலை முன்னிட்டு சென்னையில் 17 இடங்களில் வெகு ஜோராக நடந்துவரும் 'சென்னை சங்கமம்" கலை நிகழ்ச்சிகளைப் போல இங்கேயும் "நாமக்கல் ஓசை" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிகிறது. நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவு. இதேமாதிரி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டால் அது மெல்ல மறைந்துவரும் தமிழ் மரபுசார் கலை வடிவங்களை மீட்டெடுப்பதாக இருக்கும். மதிய நாய் கண்காட்சி மற்றும் மாலை நேர கலை நிகழ்ச்சிகளுக்கு...
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED - தொடரும் உரையாடல்

Posted: Tuesday, January 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
மாது: எனக்கு தெரிந்தவரை மாரியம்மன் கோவிலுக்கு அருகே ஒரு ஈஸ்வரன் கோவில் உள்ளது அது காமட்சியம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்,மலையின் பெயரே நாமகிரி தாயார் என்று வந்துள்ளது. திருத்தம் ராஜா தியேட்டர் இப்பொழுது MGM என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது புஷ்பராஜ்:வள்ளிபுரத்தில் சில வருடங்களாக செழித்தோங்கும் ஈஸ்வரன் கோவிலையும் உன் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் மிக சமீபமாக கட்டப்பட்டவை. இவற்றின் பின்னால் ஒரு நூறு, வேண்டாம், ஒரு ஐம்பது வருட வரலாறு கூட கிடையாது. அதனால் பழம்பெருமையில்லாத இவற்றை சைவ சமயத்தின் தாக்கத்தால் எழும்பியவை என்று சொல்ல முடியாது....
மேலும்...

பொதுபுத்தியின் எஸ்கேபிஸம் - தொடரும் வாதங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
தொடரும் விவாதத்தில் என்னை எதிர்கொண்ட நண்பனின் கருத்துக்கான என் பதில்:மன்னிக்கவும் பரந்தாமா, நான் எழுதியவற்றில் எங்கேயும் நடந்த அச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவில்லை. ஒரு பரபரப்பான சம்பவத்தை மீடியாக்கள் எப்படி மிகைப்படுத்தி செய்தியாக தருகின்றன என்பதைத்தான் என் கருத்தின் ஆரம்பத்தில் கோடிட்டு காட்டியிருந்தேன். செய்தியை செய்தியாக மட்டும் தராமல் அதனுடன் மிகை கற்பனை மசாலாவையும் சேர்த்து தடவி தரும் டேபிள் ஜர்னலிஸத்தை நான் தொடர்ந்து கண்டித்து எழுதிவருகிறேன். இந்த இடம் புதுசு என்பதால் அதன் subversive meaning -ற்கு எதிராக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.மக்களின்...
மேலும்...

International Poultry Expo & Conference - சில குறிப்புகள்

Posted: Sunday, January 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அண்மையில் டெல்லியில் நடந்த Auto Expo 2010 -ஐ நான் இரண்டு காரணங்களுக்காக பின்தொடர்ந்து வந்தேன். முதல் காரணம் ஆனந்த் மகிந்த்ரா. எக்ஸ்போ நடப்புகளை தொடர்ந்து ட்விட்டி வந்தார். அதற்கேற்ப ஆட்டோ செக்டார் பங்குகளில் அந்த குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாக வர்த்தகம் செய்ய முடிந்தது. (கொஞ்சம் லாபம் பார்க்கவும் முடிந்தது. Thanks to that 140 word phenomenon, called Twitter!). இரண்டாவது காரணம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் அதில் கலந்து கொண்டிருந்ததுடன் அதுபற்றி அடிக்கடி என்னுடன்...
மேலும்...

பொதுபுத்தியின் எஸ்கேபிஸம்

Posted: Saturday, January 9, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இச்செய்தியை முன்வைத்து நடந்த உரையாடலில் என் கருத்து:கொஞ்சம் புகைமூட்டம் அடங்கட்டும் கருத்துக்கூறலாம் என்று நினைத்தேன். பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி பிறகு அச்சம்பவத்தின் பின்னுள்ள உண்மை வேறாக இருக்க கண்டிருக்கிறேன். இதிலும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். முதலில் அரை மணி நேரம் வேடிக்கைப் பார்த்தார்கள் என்றார்கள். பிறகு 20 நிமிடம்; இன்றைய செய்தியில் 10 நிமிடம் என்று சம்பவத்தை நிமிட வாரியாக தினமலரில் விளக்கியிருக்கிறார்கள்.வெடிகுண்டு வீசப்பட்டதால் அருகில் செல்ல பயந்ததாகச் சொல்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள். பயந்தவர்கள் காவல்துறையினர் என்பதுதான்...
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED

Posted: Friday, January 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசும்போது “சென்னை மறுகண்டுபிடிப்பு” என்னும் புத்தகம் பற்றி சில மாறுபாடான கருத்துகளை கூறியிருந்தார். அதன் தொடர்ச்சி இந்த வார துகளக் வரை சர்ச்சையை கிளப்பிய வண்ணம் உள்ளது. நாம் அதனுள் நுழைய வேண்டாம். அப்புத்தகம் எஸ். முத்தையா எழுதிய "Madras rediscovered" என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் பதிப்பு. அதன் ஆங்கில மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு கண்டு வருகிறது. இன்றைய சென்னையின் முற்கால மெட்ராஸ் ராஜ்தானி வரலாற்றை தெளிவான ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்ட அந்த நூலைப்பற்றி படிக்கும்...
மேலும்...

கொல்லிமலை - தொடரும் விவாதம்

Posted: Thursday, January 7, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
(கொல்லிமலை குறித்து நண்பர்களுடன் மின்மடலில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி) மாது மஹா ப்ரபோ! ஒரு வேலை செய்வீராக! நேரே கூகுள் சென்று kolli hills tour / trip / road trip / trekking என்பது போன்ற குறிச்சொற்கள் கொண்டு தேடுவீராக! அப்போது தெரியும் நாலா திசைகளிலும் இருந்து எத்தனைப் பேர் கொல்லிமலைக்கு வந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் அதை எந்தளவு அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் என்று. சென்ற வருடத்தில் ஒருநாள் அதிகாலையிலேயே கிளம்பி திருச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். முசிறி தாண்டியுள்ள மணமேடு அருகே பஸ் பழுதாகி நின்றுவிட்டது. அந்த தடத்தில் ஒரு பிரச்னை...
மேலும்...

ஹரி மாமியின் ஹரிகதா & சாஹித்ய சங்கீதம்

Posted: Monday, January 4, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சென்னையின் சபாக்களில் சங்கீத சீசன் கன ஜோராக நடந்துவருகிறது. அதையொட்டி பத்திரிக்கைகளின் பக்கங்களும் வண்ணமயமான படங்களுடன் படபடக்கின்றன. மாமாக்களும் மாமிக்களும் தொடைத் தட்டி ரசிக்கும் கர்நாடக சங்கீதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நெஞ்சம் மேலிட்ட ஆர்வத்தில் உடன் பணிபுரிந்த சங்கீதம் கற்றிருந்த ஸ்ரீரங்க நண்பர் ஒருவரை படுத்தி எடுத்ததில், அடிப்படையான சில விஷயங்களை புரியவைத்து ராகங்களை பகுத்தறியும் பயிற்சியும் சொல்லிக் கொடுத்தார். பிறகு வழக்கம் போல வேறுவேறு விஷயங்களில் ஆர்வம் சென்று மற்ற...
மேலும்...

தமிழகத்தின் எல்லை தாவாக்கள் & கொல்லிமலை ஒரு சிறு பார்வை

Posted: Sunday, January 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
கொல்லிமலையை ஒட்டி வேறு எந்த மாநிலத்தின் எல்லையாவது இருந்திருந்தால் இப்போது நாம் கற்பனையாக பேசிக் கொண்டிருப்பது நிஜமான விவாதப் பொருள் ஆகியிருக்கும். குமரியை கேரளாவும், கோவையை கர்நாடகாவும், கிருஷ்ணகிரியை ஆந்திராவும் உரிமை கொண்டாடுவது போல தமிழ்நாடு அக்கம் பக்கம் மாநிலத்தின் ஏதாவது இடத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பி இருக்கிறதா? அவ்வப்போது திருப்பதி போச்சே என்று பெருமூச்சு விடுவதோடு சரி. ஆனால் இது தகப்பன் வீடு மாதிரி. மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பாகப் பிரிவினை செய்து கொண்டுபோன பிள்ளைமார்கள்தான் நம் அண்டை மாநிலங்கள் எல்லாம். எனக்கு கொடுத்த பாகம் மறு கண்...
மேலும்...

காப்பி-பேஸ்ட் கலைப் படைப்புகள்

Posted: Friday, January 1, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரமது. அவர் ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரி. பெயர் வாஸ்கோவ். ஊரிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் கானகத்தை ஒட்டிய பகுதியில் ஐந்து இளம்பெண்களைக் கொண்ட குழுவுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாத சுட்டிப் பெண்கள். அவர்களை கட்டி மேய்ப்பதற்குள் அவருக்கு போதுமென்றாகிறது.பயிற்சியின் போது ஒருநாள் அவர்கள் தாங்கள் இருக்கும் காட்டுப்பகுதியில் இரு ஜெர்மானிய நாஜி படைவீரர்களின்...
மேலும்...