இணையத்தின் எட்டு திக்கிலும் எங்கெங்கு நோக்கினும் சமூகத்தை பற்றிய புலம்பல்களும் அரசியல் குறித்த அரற்றல்களும் அறச்சீற்றம் குறித்த அறிவுரைகளுமாக.. அப்பப்பா! ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள்? ஏன் ஊழலுக்கு எதிராக லஞ்சத்துக்கு எதிராக அரசியல்வாதிக்கு எதிராக அவனின் சுரண்டலுக்கு எதிராக ஜாதீயத்துக்கு எதிராக எவனும் தெருவில் இறங்கி போராட மாட்டேன் என்கிறார்கள்? அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி? — என்று கேட்பவனெல்லாம் வெளிநாட்டில் வெள்ளை காலர் வேலையில் இருக்கிறான். அவனுக்கு குறைந்தது அடுத்த பத்தாண்டுகளுக்கு பணத்தைப் பற்றிய பிரச்னை...
கண்டக்டர்களும் மனிதர்களே!
மனிதர்கள் ஏறும் போதும், இறங்கும் போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏய் ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் இறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லைபல நாட்களாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பஸ்ஸில் பயணம் செய்த அனுபவத்தில் சொல்கிறேன்: கண்டக்டர் வேலை அப்படி ஒன்றும் எளிமையானது...
ஆங்கிலம் மட்டும்தான் அமைச்சருக்கு தகுதியா?
அழகிரி நாடாளுமன்றத்தில் துரை விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது குறித்த விவாதத்தில்:அழகிரியை முதலில் தமிழில் பேச அனுமதியுங்கள். பிறகு ஏன் பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று கேளுங்கள். அதுவரை வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று கோஷமேயன்றி வேறல்ல.நமது அரசியல் சட்டம் அனுமதித்துள்ள தகுதிகளின் படியே அழகிரி அமைச்சராகி இருக்கிறார். இருந்தும் ஆங்கிலம் தெரியாது என்னும் ஒரு காரணத்தினால் மட்டுமே அவரால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற முடியாமல் இருப்பது, நமது நிர்வாக அமைப்பியலுக்குத்தான் இழுக்கு. அழகிரிக்கு அல்ல.அவர் விமானத்தில் அதிகமுறை...
கண்ணதாசனின் ஆளுமை விதந்தோதத் தக்கதா?
கடவுளர்களின் லீலா விநோதங்களின் முன்னால் கண்ணதாசனின் காதல் கதைகளெல்லாம் சாதாரணம். அதனால் தன்னை இறைவன் என்று அவர் சொல்லிக் கொண்டதினால் மட்டுமே இழுக்கு நேர்ந்து விட்டதாக கருத வேண்டியதில்லை. மேலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி அவருடைய குடும்பத்தாரிடமிருந்தோ அல்லது அவர் பெருந்தலைவராக இருந்த காதல் பெண்களிடமிருந்தோ(நான் காதல் பெண்களின் பெருந்தலைவன்!) எந்த புகாரும் இல்லாத நிலையில், அதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவது அநாவசியம். அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறை, சிலர் வகுத்துக் கொண்டிருக்கும் வாழ்வியல் ஒழுக்க கோட்பாடுகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம்....
தற்கால தமிழ்வழிக் கல்வி - சில எண்ணங்கள்
அகத்தியர் - யாஹூ குழுமத்தில் எழுதியது:மதிப்பிற்குரிய திரு.இராமகி அய்யா குறிப்பிடுவது போல அதை எழுதியவர் ஒரு தமிழ்நாட்டு தமிழராய் இருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இங்கே தமிழ்நாட்டில் எல்லோரும் தத்தம் குழந்தைகளை LKG -ல் சேர்க்க எந்த மெட்ரிகுலேசன் பள்ளி உகந்தது என்றுதான் பரிசீலிக்கிறார்களே தவிர, தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அப்படி தமிழ்ப் பற்று என்று சொல்லிக்கொண்டு தப்பித்தவறி தன் குழந்தையை கொண்டுபோய் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கும் ஓரிருவரும் கேலிப் பொருள் ஆகிறார்கள். அவர்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை அவர்களே வீணடிப்பதாக...
மொழியால் மட்டும் ஒற்றுமை சாத்தியமா?
நாம் தமிழர் இயக்கம் ஏன் என்னும் சீமானின் உரையை முன்வைத்து:சீமானின் இந்த உரையை மிக ஆர்வமுடன் கேட்டேன். மீண்டும் பெருத்த ஏமாற்றம். ஈழம்.. ஈழம்.. ஈழம்..! என் அண்ணன் பிரபாகரன்.. பிரபாகரன்.. பிரபாகரன்..! இதைத் தவிர தமிழ்நாட்டு தமிழர்களின் அவலநிலை குறித்து இவர் வாய் ஒரு வார்த்தை கூட உதிர்ப்பதில்லை. இன்று இவர் பேசும் பிரிவினைவாதமெல்லாம், இவரை விட இளைஞர்களை அதிகம் கவர்ந்து வைத்திருந்த அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மேடைக்கு மேடை பேசி சலித்ததுதான். இவராவது ஈழத்தை மையப்படுத்தி பேசுகிறார். ஆனால் அண்ணா தமிழ்நாட்டை மையப்படுத்தி ‘திராவிட நாடு திராவிடருக்கே’...
சுட்டெரிக்கும் வெம்மையிலும்..
விளிம்புநிலை மனிதர்கள் என்னும் இலக்கிய முலாம் பூசின வார்த்தைகளை விட ‘அன்றாடங் காய்ச்சிகள்’ என்றால் சிலருக்கு சட்டென்று புரியக்கூடும். அதைவிடவும் ஒரு புகைப்படம் இன்னும் அர்த்தப்பூர்வமாக விளங்க வைக்கும்.மண்டையை பிளக்கும் உச்சி வெயிலுக்கு பயந்துகொண்டு இருக்கும் இடங்களை விட்டு வெளியே வராமல் இருந்துகொள்ள, எல்லோருக்கும் சௌகரியப்படுவதில்லை. வெயிலை தவிர்க்க முடியாத ஓர் உலகமும் வெளியே இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.அலுவலகத்தின் வாசலில் இருந்து கண் பார்வையை வீசினால் எதிரே கரூர் பஸ் நிலையம் தொட்டு விடும் தொலைவில் தெரியும்....
சிவசங்கரியின் “புதிய கோணங்கள்” நூலை முன்வைத்து
சிலர் சில விஷயங்களுக்காக பொதுவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களின் மற்றொரு முகம் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவல்கள் பிரபலமடைந்த அளவிற்கு அவருடைய கட்டுரைகள் பிரபலமில்லை. ஆனால் அவைதான் என்னைப் பொருத்தவரை அதிக சுவாரஸ்யமானவை. குறிப்பாக அவருடைய “மூன்று மாத கடுங்காவல்” மற்றும் “ஏட்டிக்கு போட்டி” ஆகிய இரண்டும் அளிக்கும் எழுத்து விருந்துக்கு இணையான ஒரு சுவையை இன்று வரை நான் கடக்கவில்லை. அதேபோல்தான் எழுத்தாளர் சிவசங்கரியின் பயணக் கட்டுரைகள். புரிந்துகொள்ள மிக எளிமையான நடையில், செல்லும்...
தமிழ் தேசியம் - சில கருத்துக்கள்
தமிழ் தேசியத்தை ஆதரித்த நண்பனின் கருத்துக்கு பதிலாக:தமிழ் தேசியம் என்பது ஒரு கானல் நீர்; மாயை; அக்கரை பச்சை. இப்போது இருக்கும் unity in diversity -க்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. ஒரு பேச்சுக்கு தமிழ்நாடு என்று ஒரு தனிநாடு உதயமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது மட்டும் பிராந்திய பேதம் இருக்காது என்று உன்னால் உறுதியாகச் சொல்லமுடியுமா? இப்போது வட இந்தியா, தென்னிந்தியா என்று பேதம் இருந்தால், அப்போது வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இருக்கும். சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களும் தான் வளர்ச்சியடைகின்றன. தென் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது...
பிளடி இண்டியன்ஸ்
“சார்.. ப்ளீஸ் என்ன ஸ்டேட்டஸ்னு மட்டும் சொன்னா போரும். நேக்கு மெட்ராஸ் யாரும் இல்ல சார்”“ஏன் எங்களை தொந்தரவு பண்றீங்க. உங்க ஆபீஸை கேட்டுக்க வேண்டியதுதானே. உங்கள மாதிரி இங்க எத்தன அப்ளிகேஷன் தெரியுமா”“சார் அப்படி சொல்லக் கூடாது. ஆபீஸ்ல கேட்டா உங்க ஆபீஸதான் காண்டக்ட் பண்ண சொல்றா. PRO நம்பர்க்கு போன் பண்ணா சரியா ரெஸ்பான்ஸ் இல்ல. அதான்..”“இப்ப என்னதான் உங்களுக்கு வேணும்””சார்.. அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் சொன்னா போரும். இங்கே நாமக்கல்ல இருந்துகிட்டு யாரை காண்டக்ட் பண்றதுன்னு தெரியல. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”“நீங்க நம்பர் மட்டும் சொல்லுங்கோ”“199524/45”சொன்ன...
Some guys just can't handle Vegas
ஒருவழியாக மார்ச் 31 தலைவலிகள் முடிந்து கைகளை நெட்டி முறித்துக்கொண்டு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறேன். புது நிதியாண்டு; புதிய இலக்குகள். அதைமுன்னிட்டு என் சக ஊழியர்களுக்கு நான் அனுப்பிய குறும்பு குறுஞ்செய்தி: இந்த வருடமாவது குறைவான வாடிக்கையாளர்களின் குடிகெடுவதாக! இதென்ன அமங்கலமான பேச்சு என்று தோன்றலாம். உள்ளிருந்து உழலுபவர்களுக்கே அவ்வாழ்த்திலுள்ள மங்கலம் விளங்கும். 'The Hangover' படத்தில் லாஸ்வேகாஸ் பற்றி ஒரு நல்ல quote உண்டு: “Some guys just can't handle Vegas” என்று. அதைப்போல்தான் பங்குச்சந்தையும். இங்கே முதலீடு செய்பவர்கள் வளமுடன்...
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
April
(11)
- வெள்ளை காலர் புரட்சிவாதிகள்!
- கண்டக்டர்களும் மனிதர்களே!
- ஆங்கிலம் மட்டும்தான் அமைச்சருக்கு தகுதியா?
- கண்ணதாசனின் ஆளுமை விதந்தோதத் தக்கதா?
- தற்கால தமிழ்வழிக் கல்வி - சில எண்ணங்கள்
- மொழியால் மட்டும் ஒற்றுமை சாத்தியமா?
- சுட்டெரிக்கும் வெம்மையிலும்..
- சிவசங்கரியின் “புதிய கோணங்கள்” நூலை முன்வைத்து
- தமிழ் தேசியம் - சில கருத்துக்கள்
- பிளடி இண்டியன்ஸ்
- Some guys just can't handle Vegas
-
▼
April
(11)