மணிரத்னம் பற்றிய ஒரு குழு உரையாடலின் மீதான என் கருத்துகள்:மணிரத்னம் படங்களை ரோஜாவுக்கு முன், ரோஜாவுக்கு பின் என்று பிரித்து பேச வேண்டும். இன்னும் எத்தனை நாளுக்கு நாயகன், மௌனராகம், தளபதி என்று சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? அதனால்தான் அன்று கேட்டேன், 2000-க்கு பிறகு வந்த மணிரத்னம் படங்களில் சிறந்த படமாக ஒன்றை கூறமுடியுமா என்று. அலைபாயுதே படம் ஒன்று மட்டும் தேறுகிறது. ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் 'அன்னகிளி’ ஆர்.செல்வராஜின் கதை வசனமும் ரஹ்மானின் இசையும்தான்.ரோஜாவுக்கு பிறகு மணிரத்னத்தின் கண்ணெல்லாம் அகில இந்திய சினிமா மார்க்கெட் மீதுதான். ஹிந்திக்கும்...
இளையராஜா, தும்பி வா தும்பக்குடத்தின், சங்கத்தில் பாடாத கவிதை மற்றும் அகத்தூண்டல் பற்றி ஒரு பார்வை
சங்கத்தில் பாடாத கவிதையின் ஒரிஜினல் வெர்சனோட லிரிக்:தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்படம்: ஓலங்கள்http://www.youtube.com/watch?v=l1lBbkWx0Dkஓலங்கள், பாலுமகேந்திரா, இளையராஜா கூட்டணியில் உருவான மலையாளப் படம். இதே டியூனை சமீபத்தில் இந்தி ‘பா’ படத்தில் கூட இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். கேட்கும் யாரையும் வசீகரிக்கும் ஓர் இன்னிசை அது. ஆனால் அந்த அற்புதமான டியூனை எங்கே இருந்து ராஜா எடுத்திருக்கிறார் என்றால்: http://www.youtube.com/watch?v=vankaSlfSr0(Song: Istanbul, Not Constantinople)இருந்தாலும்,...
பழசு என்றும் புதுசு: தேடினேன் வந்தது
யாருக்கும் மனதில் நினைத்ததை அடைந்து விட்டால் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த ஆடிப் பாடுவதை விடவும் களிப்பு தரும் வேறு ஒரு வழி உண்டோ இவ்வுலகில்?அதிலும் ஆடுவது அழகு நங்கையாக இருந்து, ஆட்டமும் அற்புதமாக அமைந்து விடும் போது, அதைக் காணும் கண்களுக்கு பரவசம் விருந்துதான்...!--சும்மா, FM ரேடியோ ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன்.டைரக்டர் ஸ்ரீதர், சிவாஜியுன் இணைந்து எடுத்த காமெடி படம்: ஊட்டி வரை உறவு. விஸ்வநாதன் இசை!இப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட், என்றாலும், எனக்கு அவற்றில் ’தேடினேன் வந்தது’ முக்காலத்து விருப்பப் பாடல். இப்பாடலின் நடன அசைவுகள் அக்காலத்தில்...
Gulf Oil Spill பற்றிய இருட்டடிப்பு மற்றும் இந்திய ஏமாளித்தனம்
இதை எழுதுவதற்கு முன்புகூட ஒருமுறை தினமலரை கடைசிப் பக்கம் வரை புரட்டிப் பார்த்தேன், ம்ம் ஹூம்..! இதைப்பற்றி ஓபாமா டிவியில் தோன்றி சிறப்பு உரையாற்றிய பின்னரும்கூட இங்கே அது பேப்பரில் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆளும்கட்சி பற்றிய செய்தியாக இருந்தால்கூட புரிந்துகொள்ள முடியும். ஆனால் அமெரிக்க செய்தி ஒன்றுக்கு ஏன் இந்த இருட்டடிப்பு என்பதுதான் புரியவில்லை. அப்படி இதை அமெரிக்க செய்தி என்று மட்டுமே ஒதுக்கி விட்டு விட முடியுமா என்ன? சூழியலுக்கே எவ்வளவு பெரிய சீர்கேடு இது. Oil spill, எண்ணை முழுதும் தீர்ந்தால்தான் நிற்கும் போலிருக்கிறது. BP-யே திவால்...
பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து
பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து:பழ.கருப்பையாவின் அனல் தெறிக்கும் இன்னொரு அருமையான கட்டுரை. அத்தனையும் சத்தியம். ‘பேய்கள் அரசாளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று ஒரு கூற்று உண்டு. பேய்கள் என்னும் வார்த்தைக்கு பதில் ஜனநாயகம் என்று போட்டாலும்கூட பொருத்தமாகவே இருக்கும். இது தோல்வியடைந்த ஜனநாயகம். சுற்றுப்புற சூழல் சீர்கேடுகளில் இருந்து இந்த உலகம் தப்பிப் பிழைத்து கிடந்தால், நம் மக்கள் ஏதாவது ஒரு நூற்றாண்டில் முழுமையாக நாகரிகம், கல்வி, சுயமரியாதை, அரசியல் தெளிவு பெறக்கூடும். அன்று இதையெல்லாம் எதிர்க்கும்/கண்டிக்கும்/கழுத்தை...
ஞாநி - என் நோக்கில்
சமகாலத்தின் சமூக கோபங்களின் அடையாளம்; பக்க சாய்வற்ற விமர்சனத்தின் சின்னம் - ஞாநி. இவருடய பல கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. அதற்காக அவருடைய விமர்சனத்தின் நேர்மையை சந்தேகிக்க முடியாது. தமிழ்நாட்டில் கருணாநிதியை இவர் அளவுக்கு கறாராக விமர்சித்தவர் யாரும் கிடையாது. அதனாலேயே விகடனில் இருந்து துரத்தப்பட்டார். அதனால் மட்டுமே இவர் பேனாவின் கூர்முனை மழுங்கியதில்லை. எங்கே எழுதினாலும் ஒரே டெசிபலிலான குரல்தான். ஞாநியின் ‘தீம்தரிகிட’ தான் எனக்கு சமூகத்தின் மீதான மாற்று பார்வையை கற்றுத் தந்தது. அச்சிறுபத்திரிக்கை சில வருடங்கள் முன்பு நின்று விட்டது. அதற்கு...
பழசு என்றும் புதுசு: ஓடும் மேகங்களே
பழைய பாடல் ரசிகர்கள் என்னையும் தவிர்த்து வேறு யாராவது ஒருவராவது இருப்பார் என்னும் நம்பிக்கையில் weekend list-ல் பழைய பாடல்களையும் இனி சேர்க்க இருக்கிறேன்.http://www.youtube.com/watch?v=DAleVIM18Cw நாடாளும் வண்ணமயில்காவியத்தில் நான் தலைவன்நாட்டிலுள்ள அடிமைகளில்ஆயிரத்தில் நான் ஒருவன்மாளிகையே அவள் வீடுமரக்கிளையில் என் கூடுவாடுவதே என் பாடு இதில் நான்அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறுமேட்டுக்குடி காதலை மறுப்பதைக்கூட இவ்வளவு கவிநயத்துடன் செய்யமுடியுமா? விசுவநாதன் ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் இணைந்து அதை செய்து காட்டும் ஜாலம் வார்த்தைகளால்...
உள்வாங்கிக்கொள்வதா, அழிய விடுவதா, எது globalization?
பாரம்பரிய இசையை அழிய விடுவது குறித்த இளையராஜாவின் வருத்தத்தின் மீதான இணைய குழும விவாதம் ஒன்றில் என் கருத்து:ஹிந்தி படங்களுக்கு இசையமைப்பது என்ன பெரிய குற்றமா? அதற்கு ஏன் அவர் காரணம் தேடி அலையப் போகிறார்? இளையராஜா, ஹிந்தியில் அவ்வளவு பிஸியாகவா இருக்கிறார்?2007-ல் சீனி கும், 2009-ல் பா, சல் சலே என்று இந்த மூன்று வருடங்களில் மொத்தமே மூன்று படங்களுக்குதான் ஹிந்தியில் இசையமைத்திருக்கிறார். அதனால் உன் கருத்து ஏற்புடையது அல்ல. இளையராஜா மேடையில் மைக் பிடித்தால் பொதுவாக ஆன்மா, ஜீவன், இசை, கடவுள் என்று அவருக்குமே மட்டுமே புரிந்த மொழிநடையில் உளறிக்கொட்டுவது...
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
June
(8)
- மணிரத்னம் - முன்முடிவான சில மதிப்பீடுகள்
- இளையராஜா, தும்பி வா தும்பக்குடத்தின், சங்கத்தில் ப...
- பழசு என்றும் புதுசு: தேடினேன் வந்தது
- Gulf Oil Spill பற்றிய இருட்டடிப்பு மற்றும் இந்திய ...
- பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா...
- ஞாநி - என் நோக்கில்
- பழசு என்றும் புதுசு: ஓடும் மேகங்களே
- உள்வாங்கிக்கொள்வதா, அழிய விடுவதா, எது globalization?
-
▼
June
(8)