இளையராஜா, தும்பி வா தும்பக்குடத்தின், சங்கத்தில் பாடாத கவிதை மற்றும் அகத்தூண்டல் பற்றி ஒரு பார்வை

Posted: Friday, June 18, 2010 | Posted by no-nononsense | Labels:
சங்கத்தில் பாடாத கவிதையின் ஒரிஜினல் வெர்சனோட லிரிக்:

தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்

படம்: ஓலங்கள்

http://www.youtube.com/watch?v=l1lBbkWx0Dk

ஓலங்கள், பாலுமகேந்திரா, இளையராஜா கூட்டணியில் உருவான மலையாளப் படம். இதே டியூனை சமீபத்தில் இந்தி ‘பா’ படத்தில் கூட இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். கேட்கும் யாரையும் வசீகரிக்கும் ஓர் இன்னிசை அது.

ஆனால் அந்த அற்புதமான டியூனை எங்கே இருந்து ராஜா எடுத்திருக்கிறார் என்றால்: http://www.youtube.com/watch?v=vankaSlfSr0
(Song: Istanbul, Not Constantinople)

இருந்தாலும், வருத்தப்பட வேண்டியதில்லை. இதை இளையராஜவுக்கு கிடைத்த inspiration என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

காரணம், Copy - inspiration-க்கு இடையே என்ன வேறுபாடு என்றால், ஒரு கலை படைப்பின் மூலத்தை அப்படியே எடுத்து பயன்படுத்தி அதில் தன் பெயரை போட்டுக்கொள்வது copycat வேலை. ஆனால் அதையே அதன் மூலத்திலிருந்து 10 மடங்கு சிறப்பாக வெளிப்படும்படி தன் திறமையை காட்டி இழைத்து, முன்னிலும் ஒரு ஆகச்சிறந்த படைப்பை உருவாக்குவது நிச்சயம் copycat வேலை கிடையாது. அதுதான் inspiration (அகத்தூண்டல்).

இளையராஜாவின் ’தும்பி வா தும்பக்குடத்தின்’ அதன் மேற்கத்திய மூலப் பாடலில் இருந்து முற்றிலும் மேம்பட்ட ஒரு படைப்பு என்பதை அதை கேட்கும், அதன் இசை ஆக்கிரமிக்கும் இசையின் நுட்பங்களில் நுண்ணறிவில் பரிட்சயம் இல்லாத எந்த ஒரு சாதாரண ரசிகனாலும் சொல்லமுடியும்.

தமிழில் இந்த மாதிரி மேம்பட்ட மறுஆக்கங்களுக்கு எப்போதும் ஒரு பெரும் தேவை இருந்துவருகிறது. அதை கமல், இளையராஜா மாதிரி ‘கலைஞர்களின் கலைஞர்கள்’ தான் நிறைவு செய்து வருகிறார்கள். Planes, Trains and Automobiles - படத்திலிருந்து பிறந்ததாகவே இருக்கட்டுமே - அன்பே சிவம். அதை தமிழ்ச்சூழலுக்கு ஏற்ற வகையில் கமல் கையாண்ட விதத்தில் இன்று அது எத்தனை தமிழர்களின் ஆதர்சமாக இருக்கிறது. அப்படம் ஒருவேளை தமிழில் வராமலே போயிருந்தால் இன்று அதன் இடம் எவ்வளவு பெரிய வெற்றிடம் என்பதை நம்மால் உணர முடியும். கலைஞர்களின் கலைஞர்கள் அதை எடுத்தாள்வதற்கு முன்பே உணர்ந்து விடுகிறார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

2 comments:

  1. SENTHILKUMARAN said...
  2. தாங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. The Four Lads க்கான Notation க்கும் தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம் பாடலுக்கான Notation க்கும் பாரிய வேறுபாடு உண்டு.
    இது தொடர்பாக Western Music expert ஒருவரிடம் கேட்கவும். உங்களுக்கு தும்பி வா பாடலின் Notation தேவை என்றால் என்னால் அனுப்பி வைக்க முடியும்.
    இது inpiration என்ற வகைக்குள்ளும் அடங்காது.

  3. no-nononsense said...
  4. என்னுடைய கருத்துகள் முழுக்க முழுக்க ஒரு சாதாரண ரசிகனின் பார்வையில் அமைந்தவை. நுணுக்கமான இசையறிவோ நுட்பமான புரிதல்களோ இசையை பொருத்தவரை எனக்கு கிடையாது. அதனால் எனக்கு notation எல்லாம் கொண்டு பாடல்களை தரம் பிரித்தறிதல் இயலாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் உங்களால் மறுக்க முடியாது என்று நம்புகிறேன். அது, இரு பாடல்களின் டியூனும் அடிப்படையில் ஒன்றே என்பது. கேட்கும் காதுகள் உரைப்பது அப்படித்தான். நீங்கள் notation-களை ஒரு அளவுகோலாகக் கொண்டு இதை மறுதலித்தால் மற்ற எந்த copycat-ஐயும் கூட குற்றம்சாட்ட முடியாது என்று எனக்கு தோன்றுகிறது. மாற்று கருத்து இருப்பின், விளங்க உரைக்கலாம்.

Post a Comment