மகாவம்சத்தின்படியான இலங்கையின் வரலாற்றை மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். காப்பியங்கள் என்றாலே காதில் பூச்சுற்றும் வேலை தானே. இதுவும் அப்படித்தான்.
மகாவம்சத்தின்படி சிங்களவர்களின் பிறப்பே incest ஆக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு எப்படி உயர்குடி என்று சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அது ஒரு புறமிருக்க, என்ன தைரியத்தில் விஜய் ‘வங்கக் கடல் எல்லை நான் சிங்கம் பெத்த பிள்ளை’ என்று பாடினார்? இந்த ஈழ விரோத வரிகளை எப்படி சீமான்கள் கவனிக்காமல் விட்டார்கள...
தமிழின காவலர் விஜய்!
நண்பர்: //இங்ஙனம் வருங்கால தமிழனக் காவலரை நீ அவமதிக்கிறாய்//யாரு விஜய்யா? அடப்பாவி இதை சொல்ல உன்னால் முடிந்தது.அதுவும் நன்றாக தமிழ் அறிவு,கவிதை,கதை,இப்படி பல தமிழ்பற்றிய விசயம் தெரிந்த நீ இப்படி சொல்வது கண்டனத்திற்க்குறியது.இதை நான் இரும்புககரம் கொண்டு வன்மையாக கண்டிக்கிறேன்.அவர் மேடையில் ஒரு பக்கம் தடுமாறாமல் தமிழில் பேசட்டும் அப்புறம் நாம் உயிரோடு இருந்தால் பார்ப்போம்....(தமிழனக் காவலரை) அப்படி ஒரு நிலை வந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.சத்தியம்
இதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? தமிழறிவுக்கும் தமிழினக் காவலர்...
பழைய பாடல்களும் நானும்
கேள்வி: அந்த பழைய பாடல்கள் எல்லாம் இப்போது தான் ( ஒரு குறுப்பிட வயதுக்கு பின்) உன்னால் ரசிக்க முடிகிறது என்பதை ஒப்புகொள்வாயா? இல்லை. சிறு வயது முதலே விரும்பி கேட்கிறேன். அதற்கு நான் என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவருடைய இசை ரசனைதான் எனக்கும் தொற்றிக் கொண்டது. எங்கள் வீட்டில் எப்போதும் ஏதாவது பாடல், கேஸட்டுகளிலோ ரேடியோவிலோ ஒலித்தபடியே இருக்கும். எல்லா காலைகளும் ஆல் இண்டிய ரேடியோ திருச்சியின் வர்த்தக ஒலிபரப்புடன் தான் விடியும். அதனால் இயல்பாகவே நல்ல பாடல்கள் என்னால் உள்வாங்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன.
பின்னர்...
சிலைகளின் தேவை என்ன?
சிலைகளால் என்ன பயன்? தலைவர்களின் சிலைகளை விட அவர்கள் விட்டு சென்ற சித்தாந்தங்களே இன்றைய தேவை. இந்தியாவை பொருத்தவரை சிலைகளின் அரசியல் பிற்கால கலவரத்துக்கு போடப்படும் அச்சாரம். காரணம் இங்கே மறைந்து விட்ட எல்லா தலைவர்களையும் ஜாதிக்கட்சிகள் சுவீகாரம் செய்து கொண்டுள்ளன. பெரியாரும் காமராஜரும் நாயக்கரும் நாடாருமாக முழங்கப்படுவது காலக் கொடும...
வளைகுடா நாடுகளின் கொத்தடிமைத்தனம்
அரபு நாடுகளில் கொத்தடிமைகளாக வாழும் இந்தியர்களை பற்றிய விவாதத்தில் என் கருத்து:நம் அரசாங்கத்துக்கும் சௌதி அரேபியாவின் கொத்தடிமைத்தனத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இது அவரவராக விரும்பி ஏற்றுக்கொள்ளும் பாடு. நம் அரசாங்கம் செய்ய வேண்டியது தன் குடிமக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது. சும்மா பெயரளவில் இல்லாமல் அதன் பயன் கடைமட்டம் வரை சென்று சேரும்படியான ஒரு திட்டம். அல்லது அதை நோக்கிய நடவடிக்கைகள். அவ்வளவு துன்பங்களைச் சுமந்து சம்பாதிக்கும் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய், இங்கேயே கிடைக்கும் என்றால் யாரும் போக மாட்டார்கள்....
தலையாடி
காத்திருந்து புலர்ந்தப் பொழுதில் பதமான தேங்காயாக தேடிப் பிடித்து,நாரை தேய்த்து தலையை சிரைத்து, மொழுமொழுவென்ற வழுக்கையில்அதன் முக்கண்ணை துளைத்து, இனிப்பை திணித்து, சருகுகள் குவித்து நெருப்பை எரித்து - அதில் கருமை மிகாமல் எட்டி நின்றபடி எட்டி நீட்டி வேகவைத்து, மகளை அழைத்து கையில் கொடுத்து, அவள் விளையாட்டு தோழர்களுடன் ஊர்வலம் சென்று, பிள்ளையார் தரிசித்து, பெருத்த அவர் தொந்தியில் அவர் பாகம் படைத்து, எட்டுமேல் எட்டு வைத்து வீடு வந்து எம்பாகம் உடைத்து, எச்சிலூறிய நாக்கில் சுவைத்து, ஒருவழியாக...
தட்டிக் கேட்பதை தட்டிக் கழிப்பார்
இந்தப் பதிவை முன்வைத்து:
வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?உலகாள உனது தாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்;உதவாதினி ஒரு தாமதம் உடனேவிழி தமிழா!
இப்படி பாரதிதாசனை போல எனக்கும் சில நேரங்களில் ரத்தம் கொதிக்கிறது. அடுத்த கணமே என் குடும்பம் மொத்தமும் கண்முன் வந்து கொதிப்பை அடக்குகிறது. குடும்ப பந்தங்களை உதறி வெளியே வந்தால் மட்டுமே தவறுகளை தட்டிக் கேட்பது நடைமுறையில் சாத்தியம். இல்லையென்றால் அந்த போலீஸ்காரனோ, அரசியல்வாதியோ போகிற போக்கில் ஒரு கேஸை போட்டு விட்டு போய் விட்டால் என் குடும்பம் தான் தெருவில் நிற்கும். தெருவில்...
உள்மன சித்திரம் ஒன்றின் குறிப்பு
அப்போது நான் சேலத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை நாளில் ஒரு அலுவலாக வெளியே கிளம்பும்போது ஓரிடத்தில் அவரை காண்கிறேன். அவர் என் பால்ய கால சிநேகிதர். என்னை விட வயதில் மூத்தவர். பெயர், பாலு. அவ்வளவு அந்நியோன்யமாக சிறு வயதில் சேர்ந்து சுற்றியிருக்கிறோம். மீசை முளை விட்ட பருவத்தில் சில லௌகீக விஷயங்களின் உட்பொருள்களை அவர் வாயிலாகவே அறிந்து கொண்டிருந்தேன். பிறகு காலம் வேறு வேறு திசைகளில் இருவரையும் கரை சேர்த்து விட்டது. நீண்ட நாள் கழித்து கண்டதும் மகிழ்ச்சியுடன் பல விஷயங்களை இருவரும் பேசிக் கொள்கிறோம். இத்தனை ஆண்டுகளில் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம்...
அரசியல் சீர்கேடுகள் - தொடரும் உரையாடல்

நண்பர்: காசு கொடுத்து விட்டு தோற்று விட்டால் அடுத்த பார்ட்டி நிறைய கொடுத்திருக்கான்னு அர்த்தம். காசு வாங்கிய மக்களை மிரட்டுதல் நடந்து கிட்டு தான் இருக்கு. இவங்க aim பண்றது மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற மக்களை ...
நிச்சயமாக அதுவும் நடக்கத்தான் போகிறது. இப்போதே கவுன்சிலர் எலக்சன் முடிவுகளின் போது அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. ஓட்டு, வியாபாரம் ஆகும்போது பணம் கொடுத்தவன் சண்டைக்கு வராமலா போவான்?
பொதுப் பணத்த எவ்வளவோ கொள்ளையடிக்கிறானுங்க, அதுல நமக்கும்தான் கொஞ்சம் செலவு...
அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடியது என்ன?
//எத்தனை உதாரணங்கள் கொடுத்தும் எவ்வளவு அப்பட்டமாகவும், மறைமுகமாகவும், நக்கலாகவும், நகைச்சுவையாகவும் திரும்ப திரும்ப எழுதினாலும் அடிப்படை செய்தி என்னவென்றால் நம்மை ஆளுகிற மற்றும் அதற்கு மாற்றாயிருக்கிற யாருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும், தொலை நோக்கு பார்வையும் இல்லை என்பதே. இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம் அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி//
இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம்
உடனடியாக...
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!
“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு?கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள்...
அம்பேத்கர் திரைப்படம்
ஜூவி கட்டுரையை முன்வைத்து:
அவசியம் படிக்கப்பட வேண்டிய, ஆனால் அதிகம் புறக்கணிக்கப்பட்ட எழுத்துக்கள்/ஆளுமை அம்பேத்கருடயவை. பெரியாரும், அம்பேத்கரும் படிக்காமல் தேசியமும், சமூக நீதியும் பேசவரும் யாரும் கூரை ஏறியே வைகுண்டம் பார்த்து விட்டதாக கூச்சலிடுபவர்கள் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
அம்பேத்கர் படம் வெளியிட விடாமல் முடக்கி வைத்துள்ளதன் பின்னுள்ள அரசியல் குறித்து நீண்ட நாட்களாக பொதுவுடமை சிந்தனையாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இப்போதுதான் அதை ஒரு மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையில் கேட்கிறேன்.
பிற்சேர்க்கை: டிசம்பரில் இப்படம் வெளியாவதாக...
சாரு நிவேதிதாவின் விகடன் தொடர்
சாரு நிவேதிதா மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார். இம்முறையாவது பாதியில் கதவை காட்டும்படி எழுதாமல் தப்பிக்கிறாரா என்று பார்க்கலாம். இம்முறை எழுதுவார். காரணம், 10 வருடங்களுக்கு முன்பு கேட்ட சாருவின் கலகக்குரல், கானகத்தின் ஏதோ ஒரு மூலையில் பெரும் குரலெடுத்து ஒலித்து தேய்ந்து மறைந்தே போய் விட்ட கர்ஜனையாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. இன்று மிஞ்சி இருப்பதெல்லாம் ஆபாசமும், பிழைப்புவாதமும் மட்டுமே.
ஆனாலும்,
இன்னும் தவிர்க்க முடியாத எழுத்து அவருடையது என்பதில் மாற்றமில்லை. பரிசுத்த வேதாகாம வேதாந்திகளாக வேஷம் கட்டுபவர்கள் அவரை திட்டிக்கொண்டே விடாமல்...
ஒத்த இசையமைவு பாடல்கள்
பாடல்களில் சில ஒரே மாதிரி ஒலிப்பதால் மட்டுமே அவைகளை காப்பியடிக்கப்பட்டவை என்று கூறிவிட முடியாது. தென்னிந்திய சினிமா இசையமைப்பு பெரும்பாலும் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் ஒரே ராகத்தை பயன்படுத்தி போடப்பட்ட பாடல்களெல்லாம் ஒரே மாதிரிதான் ஒலிக்கும்.
உதாரணமாக,
ஆச அதிகம் வச்சி மனச
தென்றல் வந்து தீண்டும்போது
கல்யாண மாலை கொண்டாடும்
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
இவையெல்லாமே சிந்துபைரவி ராகத்தைக் கொண்டு மெட்டமைக்கப்பட்டவை. ஆரோகணம், அவுரோகணத்திற்கேற்ப சுதிகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாமே தவிர, அடிப்படையில் ஒரே ஓசை நயங்களைக் கொண்டவை. மேலும்,...
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
July
(14)
- மகாவம்சம்
- தமிழின காவலர் விஜய்!
- பழைய பாடல்களும் நானும்
- சிலைகளின் தேவை என்ன?
- வளைகுடா நாடுகளின் கொத்தடிமைத்தனம்
- தலையாடி
- தட்டிக் கேட்பதை தட்டிக் கழிப்பார்
- உள்மன சித்திரம் ஒன்றின் குறிப்பு
- அரசியல் சீர்கேடுகள் - தொடரும் உரையாடல்
- அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடியது...
- அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!
- அம்பேத்கர் திரைப்படம்
- சாரு நிவேதிதாவின் விகடன் தொடர்
- ஒத்த இசையமைவு பாடல்கள்
-
▼
July
(14)