நண்பர்: காசு கொடுத்து விட்டு தோற்று விட்டால் அடுத்த பார்ட்டி நிறைய கொடுத்திருக்கான்னு அர்த்தம். காசு வாங்கிய மக்களை மிரட்டுதல் நடந்து கிட்டு தான் இருக்கு. இவங்க aim பண்றது மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற மக்களை ...
நிச்சயமாக அதுவும் நடக்கத்தான் போகிறது. இப்போதே கவுன்சிலர் எலக்சன் முடிவுகளின் போது அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. ஓட்டு, வியாபாரம் ஆகும்போது பணம் கொடுத்தவன் சண்டைக்கு வராமலா போவான்?
பொதுப் பணத்த எவ்வளவோ கொள்ளையடிக்கிறானுங்க, அதுல நமக்கும்தான் கொஞ்சம் செலவு பண்ணட்டுமே - என்று ஓட்டுக்கு பணம் வாங்குவதைப்பற்றி பொதுவில் மக்கள் ஒரு சமாதானம் சொல்கின்றனர். வாக்களிப்பதுதான் ஒரு ஜனநாயக ஆட்சிமுறையின் பிரம்மாஸ்திரம்; கடைசி அஸ்திரமும்கூட, அதைத்தான் விலைபேசிக் கொண்டிருக்கின்றோம் என்னும் பிரக்ஞை சிறிதும் இன்றி. வருத்தமாக இருக்கிறது.
திங்கட்கிழமை அன்று பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து பாரத் பந்த் நடைபெற்றது. அது தங்களின் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது என்னும் உணர்வின்றி அதை ஒரு விடுமுறை நாளாக பலரும் கொண்டாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். சிலர் எதிர்கட்சிகளை திட்டிக்கொண்டும் இருந்தனர். அவர்களுக்கு தெரியாது, பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுகமான வரிவிதிப்புகளின் மூலமாக மட்டும் தாங்கள் எந்தளவு கொள்ளையடிக்கப்படுகிறோம் என்று. இந்திய பெட்ரோலிய சந்தையில் தனியாரை(அம்பானி, எஸ்ஸார், ஷெல்) அனுமதித்த பிறகே பெட்ரோல் விலை அடிக்கடி விலை உயர்வு காண்கிறது என்பதை.
மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக சுரணை - அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இருப்பதைப்போல - என்று வருமோ தெரியவில்லை. ஆனால் அதனை நோக்கிய செயல்பாடுகள் அறிவுதளத்தில் மிக அவசியம். அதில் சோர்ந்துவிடக் கூடாது.
0 comments:
Post a Comment