காத்திருந்து புலர்ந்தப் பொழுதில் பதமான
தேங்காயாக தேடிப் பிடித்து,
நாரை தேய்த்து தலையை சிரைத்து,
மொழுமொழுவென்ற வழுக்கையில்
அதன் முக்கண்ணை துளைத்து,
இனிப்பை திணித்து, சருகுகள் குவித்து
நெருப்பை எரித்து - அதில்
கருமை மிகாமல் எட்டி நின்றபடி
எட்டி நீட்டி வேகவைத்து,
மகளை அழைத்து கையில் கொடுத்து,
அவள் விளையாட்டு தோழர்களுடன்
ஊர்வலம் சென்று, பிள்ளையார் தரிசித்து,
பெருத்த அவர் தொந்தியில் அவர் பாகம் படைத்து,
எட்டுமேல் எட்டு வைத்து வீடு வந்து
எம்பாகம் உடைத்து, எச்சிலூறிய நாக்கில் சுவைத்து,
ஒருவழியாக முடிந்தது தலை ஆடி;
தேங்காய் சுடும் நோம்பி!!
நண்பர்காள், இப்போது சொல்லுமீர்,
சுட்ட தேங்காய் வேண்டுமா?
சுடாத தேங்காய் வேண்டுமா?
0 comments:
Post a Comment