ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது. கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது...
எல்லே இளம்கிளியே
எல்லே இளம்கிளியேமார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே. எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்....
அதிதி தேவோ பவ
எல்லா மலேசிய தமிழர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். என்றாவது ஒரு நாள் தமிழக மண்ணை மிதித்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் ஆசைதான் அது. தங்களுடைய மூதாதையர்களின் பூமி என்பதுடன் இதுவரை சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டும் கண்டு களித்து வரும் இடங்களை நேரிலும் பார்க்கும் ஒரு ஆர்வம் என்றும் சொல்லலாம். காலக்கிரமத்தில் இந்த ஆசை என்னுடைய மலேசிய தோழி ஒருவருக்கும் வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குணநலன்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியொட்டிய சிந்தனைகளை கொண்டவர்....
கமல் பற்றி மேலும் ...
தான் ஒரு சகலகலா வல்லவன் என்று மற்றவர்கள் புகழ்வதை நம்பி கமல் எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைக்கிறார். நடிக்க மட்டும் செய்தால் நல்லது.எந்த மாதிரி வேண்டுமானாலும் நவரசங்களை வெளிப்படுத்தி நடிக்கட்டும். ஆனால் சமீபமாக ”இதோ, கமல்ஹாசன் நடிக்கிறேன், பார்” எனும்படி கன்னக்கதுப்புகளில் வித்தக கர்வத்தை தேக்கி வைத்துக்கொண்டு நடிக்கும் நடிப்பு வேண்டாம். இது கமல்ஹாசனின் இயல்பு அல்ல. எல்லோரும் அவரை ஒரேடியாக புகழ்ந்து புகழ்ந்து அவரும் முகஸ்துதிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாக உள்ளது. 70-களில்...
அவலை நினைத்து உரலை
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்" (ஆண்டாள் திருப்பாவை) நீராடப் போதுவீர்.... ! ஹ்ம்ம்ம்....., இன்று எந்த கன்னிமார் அறிவார் அந்த பாவை நோன்பு?! திருப்பாவை போடு; திருப்பள்ளியெழுச்சி பாடு; ஈரம் சொட்ட சொட்ட மாரியம்மன் கோவிலுக்கு ஓடு. என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் என்ன கவலை. அந்தக் கவலை வந்து விட்டால் கோவில் குளம் பக்கமெல்லாம் பிறகென்ன வேலை? பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள். இன்னோசண்ட் ஃபெல்லோஸ். ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்! (மார்கழி...
தேகம்
Posted:
|
Posted by
no-nononsense
|
0
comments

இரண்டு நூல்களை தற்சமயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று முன்பே சொன்னது போல பல்லவி ஐயரின் சீனா-விலகும் திரை. அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் என் முயற்சி ஜெயமாகவில்லை. என் நேரம் என்னுடையதாக மட்டும் இல்லாமல் இருப்பதுதான் காரணம். மற்றொன்று என்னுடைய சென்னை நண்பன் எனக்கு படிக்க கொடுத்திருக்கும் ‘தேகம்’. இந்த தேகம் நாவல் தான் சாருநிவேதிதா அண்மையில் எழுதி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை நாவலை சுற்றி அல்ல, அந்த வெளியீட்டு விழாவைப் பற்றி என்பதுதான் வேடிக்கை. வேடிக்கை சாருவுக்கு...
2010 இல் பிடித்தப் படங்கள்
2010-ல் நான் பார்த்த படங்கள் குறைவு. படம் நன்றாக இருக்கிறது என்று கிடைக்கும் செய்திகளை அடியொட்டியே என் படத் தேர்வுகள் அமைந்தன. அவற்றில் எனக்கு பிடித்திருந்தவை:களவாணிஆயிரத்தில் ஒருவன் நான் மகான் அல்லஎந்திரன்பாஸ் எ பாஸ்கரன்மைனா, மதராசாபட்டினம் - நல்ல படங்கள் என்று கேள்வி. ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.பார்த்ததில் சுமாரான படங்கள்தமிழ்ப் படம்இரும்புகோட்டை முரட்டு சிங்கம் நந்தலாலாஅங்காடித்தெருசிங்கம்பார்த்து நொந்தவைகோவாராவணன்சுறாமாஞ்சா வேலுஜக்குப...
டி.ஆர் பற்றி
”இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலை கேட்டு விட்டு இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கண்ணதாசன் பெரிதும் பாராட்டினாராம். அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிக்கு சமம். ஒரு பாடலாசிரியராக டி.ஆருக்கு நான் மிகப் பெரிய ரசிகன். நாம் என்னதான் எள்ளி நகையாடினாலும் ராஜேந்தர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். எடுத்துக்கொண்ட துறையில் அவர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு தாயின் சபதம் படத்திற்கு கிடைத்த ஓபனிங் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தான் மட்டுமல்ல திட்டமிட்டு அடித்தளமிட்டு தன் மகனையும் வெற்றி பெற வைத்தவர். அதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க...
ராகுல் காந்தியின் அரசியல்
ராகுலை விமர்சிக்க என்ன இருக்கிறது இவர்களுக்கு? வெறும் அர்த்தமற்ற பிதற்றல்கள். அவர் இளைஞர் காங்கிரஸூக்கு அடித்தளமிடும் பாணி, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் ஒருமுறைகூட கருணாநிதியை சந்தித்து மரியாதை நிமித்தம் முதுகு சொறியாத குணம் இதெல்லாம் அவருக்கென்று அரசியலில் ஒரு தனிப்பாதை இருப்பதையே காட்டுகிறது. அண்மையில் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசியுள்ளதை காணும்போது பொதுபுத்திக்கு தன்னை அவர் ஒப்புக்கொடுத்துவிட வில்லை என்பதையும் உணர முடிகிறது. இதே போக்கில் அவர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டால் பிற்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாக வாய்ப்புண்டு....
இது பணக்காரர்களுக்கான தேசம்
நடப்பை நிர்தாட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை. இதில் முதல் குற்றவாளி நம்மை ஆளும் அரசுகளே. இந்த மாதிரி அலட்சிய போக்குகளையெல்லாம் படிக்க படிக்க இந்தியனாக பிறக்க மாபாவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கம். கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களும் ஓட்டுக்களை குறிவைத்து மட்டுமே. எல்லாவற்றிலும் ஊழல்கள். ஆனால் அவற்றை கண்டித்து ஒரு பொதுநல கிளர்ச்சியும் இங்கே கிடையாது. பொதுவாகவே காலம் காலமாக இந்தியர்களிடையே ஒற்றுமை கிடையாது. அதனால்தான் வியாபாரம் செய்யவந்த கம்பெனியார் நாட்டை கைப்பற்றிக்கொள்ள...
கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்
கமல் யாருடைய கட்டாயத்தின் காரணமாக நீக்கியிருந்தாலும் அது நல்ல முடிவு. இனி மக்களின் கவனம் படத்தின் மீது மட்டும் இருக்கும். அநாவசிய சர்ச்சைகளின் மீது இருக்காது. வாய் நாற்றம், காமக் கழிவு போன்ற வார்த்தைகள் வெகுசனவெளியில் பயன்படுத்தத் தக்கன அல்ல. இதையே கமல் ஒரு நூலாக வெளியிட்டு அதில் தன் கருத்துகளை கவிதைகளாக்கி இருந்தால், அங்கே வார்த்தைகளைப்பற்றிய வாதங்களுக்கு இடமில்லாமல் கருத்துக்களை மட்டும் முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் சினிமா என்பது U சான்றிதழ் பார்த்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் இடம். கொஞ்சம் கவனம் தேவைதான். செக்ஸ் கல்வி அவசியம்தான்...
Subscribe to:
Posts (Atom)