இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! --> http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.htmlமுரளிதரன் இப்படித்தான் பேச முடியும். மாற்றிப் பேசினால் தான் அது செய்தி.முரளிதரன் ஈழத்தமிழன் கிடையாது. மலையகத் தமிழன். அதாவது இந்திய வம்சாவழித் தமிழன். இன்னும் சொல்லப் போனால் இந்தியத் தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முரளிதரனிடம் இந்திய குடியுரிமையும் உண்டு.இலங்கையை பொறுத்தவரை தமிழர்களிடையே மூன்று பெரும் பிரிவுகள் நிலவுகிறது. ஈழத்தமிழர்கள்,...
பழைய பாடல் X புதிய பாடல்

பழைய பாடல் இனிதா, புதிய பாடல் இனிதா என்பது மாதிரியான ஒரு தலைப்பில் இன்று இரு கிளைமண்டுகள் சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் அரசியல் பேசுவதில்லை, எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை, எதிலும் அபிப்ராயம் தெரிவிப்பதில்லை என்பதை சிரமப்பட்டு கடைபிடித்து வருகிறேன். அதனால் கண்டுகொள்ளவில்லை. பழைய பாடலை ஏன் இவ்வளவு சிலாக்கிக்கிறோம்? சில புதிய பாடல்களும் நன்றாகத் தானே இருக்கின்றன? இப்படி பல கேள்விகள் எழுவதுண்டு. உண்மையில் பழைய பாடல், புதிய பாடல் என்று ஒரு வித்தியாசமே இல்லை. இருப்பதெல்லாம்...
தன் காசே தனக்குதவி
நாமக்கல்லைச் சுற்றி கடிகாரச் சுற்றில் சேலம், திருச்சி, கரூர் என்று சுற்றி விட்டு தற்சமயம் தாற்காலிகமாக இராசிபுரத்தில் பஸ் இறங்கி ஏறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேறு எங்கும் அதிகம் கண்டிராத ஒரு விஷயத்தை இந்த சிற்றூரில் அவதானிக்க முடிகிறது. ஆண்டகளூர் கேட்டில் டவுன் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் சரி, ஊருக்குள் பழைய பஸ் ஸ்டாண்ட், கோர்ட், பொது மருத்துவமனைகளின் பக்கம் சுற்றும் போதும் சரி, ரத்தம் சுண்டிப் போய் நடக்க திராணியிழந்த வயோதிகர்கள் மிகப் பரிதாபமாக நம் முன்னால் வந்து பிச்சை கேட்கிறார்கள். பார்த்தாலே...
சமூகம்
http://thatstamil.oneindia.in/news/2011/07/13/murder-recorded-in-cctv-camera-coimbatore-aid0128.htmlயார் அடிபட்டாலும், மிதி பட்டாலும், கொலை பட்டாலும் அவனவனுக்கு அவனவன் வேலைதான் முக்கியம். இங்கே சமூக வாழ்க்கை முறை என்பதே மாயை. உண்மையைச் சொன்னால் மனிதம் செத்த மனிதர்கள் நாம்.இந்த நாம் என்பது எப்போதும் பெரும்பான்மையை குறிக்கிறது. ஆகவே, நாம் என்றால் எல்லோருமா.. நல்லவர் சிலர் இன்னும் உளரே என்று நைச்சியம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நம் வேலைதான் அதி முக்கியம். எவன் கண்ணெதிரே நாசமாய் போனாலும் நாம் போய் மாட்டிக்கொள்ள கூடாது. கையிலுள்ள பீஸா பார்சல்...
குடிபோதையில் குற்றம்
ம். துப்பாக்கி இருந்தால் மனித மனம் குரங்கு போல என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம். அதுவும் குடி போதையில் --> http://thatstamil.oneindia.in/news/2011/07/10/i-shot-dilshan-his-repeated-trespassing-army-officer-aid0136.html உண்மை.குடிபோதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் ஒரு டாக்டர் - வயதில் பெரியவர், “குடிபோதைல தப்பு நடந்து போச்சின்னு சொல்றானுங்களே.. எவனையாவது குடிபோதையில பீய தின்னச் சொல்லேன் பாப்போம்.. அப்ப மட்டும் எப்படி சரியாக தின்னக்கூடாதுன்னு புத்தி வேலை செய்யுது.. எல்லாம் வெறும் சாக்கு, என்ன பண்றோம்னு தெரிஞ்சிதான் பண்ணுறானுங்க....
இந்தியா என்னும் குப்பைக் கூடை
ஜெமோவின் கீழ்கண்ட பதிவை முன்வைத்து:ஜெமோவின் கருத்துக்கள் முக்கியமானவை. இது ஊடகங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை. அணு ஆயுத கழிவுகள், கனரக தொழிற்சாலை கழிவு பொருட்கள், கைவிடப்பட்ட கப்பல்கள் ஆகியவைகளுடன் எங்கேயோ, எவனோ தின்று போட்ட எச்சக்கழிவு பிளாஸ்டிக் குப்பைகளும் இன்று இங்கே ‘இறக்குமதி’ செய்யப்பட்டு வாழ்நிலம் குப்பை காடாக்கப்படுகிறது என்னும் செய்தி உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.இந்த மாதிரி வாழ்வாதார பிரச்னைகளை விட்டு விட்டு ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டவில்லை என்று இங்கே மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்....
குழலும் யாழும் குரலினில் தொனிக்க
இன்று மாலை பேருந்தில் ஏறியமர்ந்ததும் மூளையின் ஏதோ ஒரு நியூரானில் சேமிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலின் ஞாபகத்திற்கு உயிர் வந்துவிட்டது. அப்போதிருந்து முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறேன். யேசுதாஸின் குரல் ஒரு அமானுஷ்யம் போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வீடு வந்து அடங்கியதும் இணையத்தில் கிடைக்கிறதா என தேடிப்பார்தேன். இந்த இணையத் தொடர்புதான் எத்தனை அற்புதமான சாதனம்! யாரோ ஓர் அன்பர் வலையேற்றி வைத்திருந்த பாடல் கேட்கக் கிடைத்தது. இதோ கேட்டுக்கொண்டிருக்கிறேன். “குழலும் யாழும் குரலினில் தொனிக்ககும்பிடும் வேளையிலேமழலை யேசுவை மடியில் சுமந்துமாதா...
சாரு பாலியல் சர்ச்சையை முன்வைத்து
உண்மையில் வினவு என்ன எழுதியுள்ளார்கள் என்பதை முழுமையாக நான் படிக்கவில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடியோ விளக்கமோ அவசியமில்லை. சாரு ஒரு ஸ்த்ரீலோலன் என்பது பலமுறை சந்தி சிரித்த விஷயம். அது இன்று அவரின் விடலை ரசிகர்களுக்கு வேண்டுமானால் புது செய்தியாகவும், கசப்பான உண்மையாகவும் இருக்கலாம். அவரை பல காலமாக அறிந்தவர்களுக்கோ, இலக்கியம் பற்றிய உண்மையான பரிச்சயம் கொண்டவர்களுக்கோ அல்ல. அதனால் சாரு தான் சாட் செய்தாரா என்ற கேள்வியே வலுவற்றது. ’108 குட்டிக் கதைகள்’ என்று சாரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். வழக்கம் போல அதன் கருபொருள்...
என்னுடைய ஆதர்சம்
நான் எனக்கு ஆதர்சமாக கொண்டிருப்பவரைப் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவர் கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.ஜெயபாரதி. 2002 முதல் அவர் எழுத்துக்களை இணையத்தில் படித்து வருகிறேன். எனக்கு தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட அவர் எழுத்துக்கள் தாம் காரணம். அகத்தியர் என்னும் இணைய குழுமத்தை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். 50,000 மடல்களை கொண்ட குழுமம் அது. அதில் திரு.ஜேபி மட்டும் 20,000 மடல்கள் எழுதியுள்ளார். அத்தனையும் அறிவுக் களஞ்சியம். டாக்டர் என்றால் அவர்...
தமிழ் இணையம்
தமிழ் இணையம். தமிழில் இண்டர்நெட் பிறந்த 1996-2000 கால கட்டங்களில் நான் இணையத்தில் இல்லை. ஆனால், அது தவழ்ந்து இன்று மீசை அரும்ப தொடங்கியுள்ள கடந்த பத்தாண்டு காலங்களில் அதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நடந்துள்ள ஒவ்வொரு நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஈழம், இலக்கியம், நட்பு, வக்கிரம், ஆபாசம், காதல், காமம், குழு அரசியல்... என்று இக்குறுகிய கால கட்டத்தில் பல நிகழ்வுகள் கடந்து சென்றுவிட்டன. அவைகளின் வீச்சும், விளைவுகளும் நமக்கு வெளியுலக அனுபவத்தில் கிடைத்திட சாத்தியமே இல்லாதவை. சொல்லி விளங்க வைக்க முடியாதவை....
அப்பா டக்கர்!
சமீப காலமாக பலரும் ‘அப்பா டக்கர்’ என்பதை ரொம்ப மகிழ்ச்சியுடன் விரும்பி பயன்படுத்துவதை கவனிக்கிறேன். ‘இவரு பெரிய அப்பா டக்கரு’, ‘நீ பெரிய அப்பா டக்கர் டா.. உன்கிட்டயெல்லாம் மோத முடியுமா’.. ரீதியில் அவற்றின் பயன்பாடு உள்ளது. அதாவது ”பெரிய பு...ங்கி” என்னும் அர்த்தத்தில். ஆனால் அதுதானா, அதன் சரியான அர்த்தம்? டக்கர் தெரியும். டாப் டக்கர்-ம் தெரியும். இதென்ன அப்பா டக்கர்? ஒரிஜினல் சென்னைவாசி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன். மெட்ராஸ் தமிழில் அவர் வித்தகர். அந்த உச்சரிப்பை கேட்கவே அவரிடம் விரும்பி உரையாடுவதுண்டு. அவர்...
அவன் இவனும் உவனும்

எச்சரிக்கை: இந்த விமர்சனத்தை படிப்பதால் படத்தில் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை. ‘அவன் இவன்’ திரைப்படத்தை நேற்று சேலம் கீர்த்தனாவில் நானும் சுரேஷும் பார்த்தோம். நல்ல கூட்டம். காட்சிகள் ரிசர்வேசனில் போய்க்கொண்டிருந்தன. ஷங்கர் போல பிரம்மாண்டம், கலர்ஃபுல் ஃபாண்டஸி, நூறு கோடி பட்ஜெட் எல்லாம் இல்லாமலே ஒரு இயக்குநரால் இவ்வளவு மக்களை தியேட்டருக்கு கவர்ந்திழுக்க முடிவது தற்கால திரைச்சூழலில் அரிதான ஒன்று. கதாப்பாத்திர உருவாக்கத்தை (characterization) பொறுத்தவரை வழக்கம் போல பாலா ஒவ்வொரு பாத்திரத்தையும்...
சம்மந்தமில்லாத சங்கடங்கள்
குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, ஃபோன் டாப்-அப் செய்வதற்காக பரமத்தி ரோட்டில் ஒரு கடை முன்னால் வண்டியில் சென்று இறங்கினேன். உள்ளே நாலைந்து பேர் அடைத்துக்கொண்டு நின்றிருந்தனர். கும்பல் குறையட்டும் என்று அதை ஒட்டியிருந்த படிக்கட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினேன். இது போன்ற கடைகளில் எப்போதும் அப்பி கிடக்கும் கூட்டத்தை காணும்போது, பேசாமல் நாமும் இப்படி ஒரு டாப் அப் கடை வைத்தாலென்ன என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு. அப்போது பின்னால் படிக்கட்டில் இறங்கி வந்தவர் ‘கொஞ்சம் வழி..’ என்றுச் சொல்ல, பதறி விலகி நின்று, கடந்து சென்றவரின் முகம் பார்த்தேன். இருவரின்...
முதுமை
சில முதியவர்களின் அந்திம கால வாழ்க்கை நிலையை காணும் போது நம் இறுதி காலம் எந்த விதமான கஷ்ட காலத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்று அச்சமாக உள்ளது. எங்கள் தெருவின் இறுதியில் ஒரு ஆயாம்மா தன்னந்தனியாக வசிக்கிறார். வீடு என்ற பெயரில் இருக்கும் ஒரே ஒரு அறையில்தான் அவர் வாசம். துணைக்கு யாருமில்லை. இவருக்கும் 70+ வயது. முதுமையில் பீடிக்கும் நோய்களை எதிர்கொண்டு, தனக்கான உணவுகளை தானே சமைத்து அவர் வாழும் கோலத்தை பார்த்தபடியே தினமும் கடந்து செல்வது முதுமை காலத்தைப் பற்றி நினைவூட்டியபடியே இருக்கிறது. இவர் ஒரு காலத்தில் அதே இடத்தில் பண்ணையம் பார்த்து பெரிய...
கிடா விருந்து
விருந்து என்றதும் இன்னொரு விஷயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. யாராவது அசைவத்தை விட்டு விலக்கி முழு சைவனாக மாற விரும்பினால், தொடர்ந்து சில கிடாவெட்டுக்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டால் போதுமென தோன்றுகிறது. கறி வெந்தால் போதுமென்று ஒரு சமையல் செய்து, குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை ஊற்றி வெறுக்கடிக்கிறார்கள். அதிலும், சிலர் போடும் பிரியாணிக்கு அந்தக் கால கதம்ப சோறு தேவலாம் என்று இருக்கிறது. இதில் குடல் கறியை, விருந்தினர்களின் கண்ணில் காட்டாமல் தனக்கென மறைத்து வைத்துக்கொண்டு ஆடும் அழுகுணி அழிச்சாட்டியம் வேறு! கிடாவிருந்து நடைபெறும் இடமான...
கல்யாண சமையல் சாதம்
எத்தனையோ விஷேசங்களும், அதன் விருந்து வகையறாக்களும் நம்மை கடந்துச் செல்கின்றன. ஆனால், சிலது மட்டும் நம் நினைவில் தங்கி விடுகின்றன. அப்படி இரு கல்யாண விருந்துகளை சமீபத்தில் உண்டேன். முதலில் உண்டது ஒரு ரெட்டியார் வீட்டு கல்யாணத்தில். மிடில் கிளாஸ்தான் அந்த குடும்பம். ஆனால் விருந்தில் ராஜ உபச்சாரமாக அத்தனை வகை தொகையான வெரைட்டி பதார்த்தங்கள். மூன்று வேளைகளும் வித விதமான கலவை சுவையில் நாக்கு திண்டாடிப் போனது. சமைலுக்கு ஆள் ஸ்ரீரங்கத்தில் இருந்து அழைத்து வந்து செய்திருக்கிறார்கள் என்று பின்னர் அறிந்தேன். மேலும், அவர்கள் சாதி கல்யாண விருந்துகள்...
என்னை தெரியலையா?
ஒரு அலுவலாக கடைவீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வாத்சல்யமாக ஒரு கை கண்ணை பொத்தியது. ‘அட, இன்னும் என்னுடன் கண்ணை பொத்தி விளையாடவும் ஆளுண்டா’ என்று எண்ணியபடி கையை விலக்கிப் பார்த்தால் தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் பெயர் சட்டென ஞாபகம் வரவில்லை. ‘தெரியலைங்களே..’ என்ற அசடு வழிதலுக்குப் பிறகு அவன் வெங்கட்ராமன் - சௌத் ஸ்கூல் கிளாஸ்மேட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘அட பயலே, இப்போது ஞாபகம் வந்துவிட்டது’ என்று பிறகு ஷேமநலன்கலை விசாரித்து பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த...
அவசியம் வாங்கோ!
எவ்வித பத்தியமும் அவசியமின்றி மருந்து உட்கொள்வதன் மூலம் மட்டுமே, உடல் எடையை குறைத்து விடலாம் என்பது இப்போது புதிதாக பரவி வரக்கூடிய வியாபாரம். அப்படிப்பட்ட கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு இன்று காலை சென்றிருந்தேன். ஸ்வீட், காரம், காபி விருந்துபச்சாரங்கள் முடிந்து விடை பெறும் போது, ‘அண்ணா, நீங்க அவசியம் மீண்டும் வரணும்’ என்று அந்தக் கடைக்கார பெண்மணி ஒருமுறைக்கு இருமுறை வலியுறுத்திச் சொன்னதன் உள்நோக்கம் கோபத்தைத் தூண்ட, உடனடியாக வெளிநடப்பு செய்துவிட்டேன் — மேலண்ணத்தில் ஒட்டியிருந்த மிக்ஸரை கடவாய்க்கு நகர்த்தியப...
அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள் (தொடர்ச்சி...)
(தொடர்கிறேன் ...)இளையராஜாவை பிடிக்காதவர்களும் தமிழகத்தில் உண்டா? இசையை பொறுத்தவரை அவருடைய அருமை பெருமைகளை விளக்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையில் செவியுள்ளோர் இல்லை. அவரை கேட்டு லயிக்காத ஆளுமில்லை; நாளுமில்லை. அவரும்கூட இதுவரை எந்த விதமான தமிழகப் பிரச்னையிலும் கருத்துச் சொன்னதில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் தமிழ் திரை உலகமே குவிந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மேடையில் கூட அவர் பாதம் பதியவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையிலும் கூட ஒரு கருத்தை கூட உதிர்த்ததில்லை....
Subscribe to:
Posts (Atom)