சுயநிவாரண முயற்சியும் யோகமும்

Posted: Monday, January 31, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தலைவலி வந்தால் எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிலர் போர்த்தி படுத்துவிடுகிறார்கள். சிலர் ஜண்டு பாம், விக்ஸ், டைகர் பாம் என்று வித விதமாக தைலம் தேய்த்துக்கொள்கிறார்கள். நானறிந்த சிலருக்கு தலைவலியே வந்ததில்லையோ என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஒருநாளும் தலைவலிப்பதாக குறைபட்டு நான் கண்டதில்லை. ஆனால் எனக்கு சில காலமாக அடிக்கடி வருகிறது. கண்களை சுற்றிய ஓரங்களிலும் பொட்டிலும்தான் அதிகம் உணர்வேன். கணினி முன்னால் தவம் கிடப்பதால் தான் இப்படி என்று வீட்டில் குறைபடுவார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். என்னைவிட ஐ.டி மக்கள் தான்...
மேலும்...

அரசியலா ஆளை விடு

Posted: Wednesday, January 19, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
1996ஐயகோ..ஊழல்.. அராஜகம், பெண் வடிவில் ஒரு ஹிட்லர், வீட்டுக்கு ஆட்டோ வருது, வீரப்பன் பேட்டி: ‘அவ எவளோ சசிகலாவோ புசிகலாவோ.. ஹஹ்ஹஹ்ஹா!..’ வீரத்தமிழன் வீரப்பனே சொல்லிட்டார்.. இனி பொறுப்பதற்கில்லை, ஜெயலலிதாவை தோற்கடிக்க கருணாநிதிக்கு போடு ஓட்டு - *2001உழவர் சந்தை, மினிபஸ்.. இத்யாதி இத்யாதி எல்லாம் போரா இருக்கு.. கையில் பணப்புழக்கமே இல்லை. இந்த ஆள் வந்தாலே இப்படித்தான். சரி, ஒரு சேஞ்சுக்கு மாத்திப் போடுவோம். இப்ப,கருணாநிதியை தோற்கடிக்க ஜெயலலிதாவுக்கு போடு ஓட்டு. *2006ம்ம்..அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்/சேர்ப்பு. கலர் கலரா ரேசன் கார்டு, மழைநீர்...
மேலும்...

சிதறல் மொழிகள்

Posted: Tuesday, January 18, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
மரணத்தின் வெகு அருகில் சென்று மீளும்போது அது வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையை முற்றிலுமாக புதுப்பித்துவிடும். புதிய சில ஞானங்கள் பிறக்கும். முன்பை விட மனம் முதிர்ச்சியடைந்துவிட்டதாக தோன்றும். எல்லாமே ஒரு அனுபவம் தான். எஞ்சியிருக்கும் நாட்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதற்கு அதிலிருந்து ஏதாவது பாடம் கிடைத்திருந்தால் நன்...
மேலும்...

மனதின் சமநிலை குறித்து ஓர் உரையாடல்

Posted: Sunday, January 16, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நான்: என் மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவக்கூடிய உன்னதமான மனிதர்கள் குறித்தான தேடலை அநேகமாக என்னிடம் அப்படி ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை எனும்படியான என்னை அவதானிப்போரின் நினைப்புகளுக்கிடையே செய்துவருகிறேன். புத்தகத்தின் உறையை மட்டுமே பார்த்து உள்ளடக்கத்தை முடிவு செய்யும் உலகைப்பற்றி ஒருநாளும் எனக்கு கவலையில்லை.தோழர்: மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள மனிதர்களின் வரலற்றை விட இன போராட்டங்கள் பற்றிய வரலாறு சரியான தேர்வாக இருக்கும் என்பது என் கருத்து.நான்: மன சமநிலைக்கு தேவை மன அமைதி. அந்த அமைதிக்குத் தேவை உள்ளத்தை எழுச்சி கொள்ளச் செய்யும் விஷயங்களில்...
மேலும்...

வால்கா முதல் கங்கை வரை

Posted: Wednesday, January 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
”வால்கா முதல் கங்கை வரை” புத்தகத்தின் 600 பக்கங்களில் 400 வரை படித்தாகிவிட்டது சொன்னபடியே நிற்கிறாய் அதற்குத் தக. மிக்க மகிழ்ச்சி..! நூலை முழுமையாக வாசித்த பிறகு மீண்டும் ஒரு முழுமையான கருத்துரையை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன். சாதி பாகுபாடு சாதி பாகுபாடு மற்றும் புரோகிதம் போன்ற ஆரியர்களின் இன்றைய பழக்கவழக்கங்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதல்ல அவற்றை அவர்கள் இந்திய தொல்குடிகளிடமிருந்தே (ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ காலகட்டத்தில்) பெற்றுக்கொண்டார்கள் என்ற செய்தி எனக்கு புதியது. இந்த நூல் அடிப்படையில் ஒரு புனைவு என்பதால் ஆரியர்...
மேலும்...

முடிவற்ற முடிவான இலக்கு

Posted: Monday, January 10, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலக்கின்றி ஓர் பயணம் - ஓர் இடத்தில் இப்படி ஒரு வரியை படித்த கணம் முதல் அதைச் சுற்றியே சிந்தனை மையம் கொள்கிறது. இலக்கு இல்லாமல் பயணங்கள் சாத்தியமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஒன்று இலக்கை நீ நிர்ணயிக்கிறாய். அல்லது அப்பயணமே நிர்ணயித்து, காட்டாற்றின் வெள்ளத்தில் மிதந்து செல்லும் தக்கையென உன்னையும் தன்னுடன் பயணிக்க வைக்கிறது. எல்லோருக்கும் முடிவான முடிவே அதன் முடிவு. வேறு வார்த்தையில் சொல்லப் போனால் இலக்கு. புரியாதவர்களுக்கு இன்னும் எளிமை படுத்திச் சொல்ல வேண்டுமானால் ‘மரணம்’. மரணத்தை ஒன்று நீ தழுவுகிறாய் அல்லது அது உன்னைத் தழுவுகிறது. எல்லா...
மேலும்...

எது சுற்றுலா?

Posted: Saturday, January 8, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
அது ஒரு தனியாத ஆசை ஒரு வித்தியாசாமான சூழலில் நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டும்(மது அருந்திக்கொண்டு)உங்கள் பயணம். உங்கள் விருப்பம். உங்கள் ஆசை - இதில் நான் யார் கருத்துச் சொல்ல. இருந்தாலும், அவ்வளவு தூரம் சென்று ஆகும் மட்டையை இங்கேயே ஆகிக்கொள்ளலாமே? கூட்டம் சேர்ந்து போய் ரூம் போட்டு ரம் போட்டு சைட் ஸீயிங் போய் நோட்டம் விட்டு பராக்கு பார்ப்பதுதானா சுற்றுலா? சுற்றுலா எப்படிச் செல்ல வேண்டும்? எந்த ஊருக்குப் போகிறோமோ அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் என்ன, அங்கே வரலாற்றின் சாட்சிகளாக இன்னும் மீதம் இருக்கும் தடயங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள்,...
மேலும்...

அமைதிப் பூங்கா தானோ!

Posted: Tuesday, January 4, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இன்று வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்து வழக்கம்போல் செய்திகளின் குவியல்களை அகழ ஆரம்பித்தவனின் கவனத்தை மூன்று கொலைகள் கவர்கின்றன.1. சற்று முன்னர் ரிஷி இங்கே பகிர்ந்து கொண்டிருந்த - மனு வாங்கிக் கொண்டிருந்த பீகார் எம்.எல்.ஏ ஒரு பெண்ணால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி. இது பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தை எனக்கு நினைவுபடுத்தியது. அதிலும் இதேபோலத்தான் தன்னை ஏமாற்றிய அரசியல்வாதி கணவன் ராஜேஷை சரிதா மனு வாங்கும் கூட்டத்தில் குத்திக் கொல்வார். http://j.mp/gpQTqQ 2. இரண்டாவது, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபின் கவர்னர்...
மேலும்...

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM)

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
quality product doesn't need this kind of cheap(cheat) marketing...I haven't used any amway products so far:-) so I cannot talk about the quality... I had very bad experience(pestering) from this kollai kumbal in US..Here is my experience.. I was in the retail store(Walmart) to purchase some items , talking with my friend in tamil.... One person slowly came to me with smile and asked "Are you from chennai and studied in this college?" if I am talking in tamil, obviously I must be some where from tamil...
மேலும்...