(தொடர்கிறேன் ...)இளையராஜாவை பிடிக்காதவர்களும் தமிழகத்தில் உண்டா? இசையை பொறுத்தவரை அவருடைய அருமை பெருமைகளை விளக்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையில் செவியுள்ளோர் இல்லை. அவரை கேட்டு லயிக்காத ஆளுமில்லை; நாளுமில்லை. அவரும்கூட இதுவரை எந்த விதமான தமிழகப் பிரச்னையிலும் கருத்துச் சொன்னதில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் தமிழ் திரை உலகமே குவிந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மேடையில் கூட அவர் பாதம் பதியவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையிலும் கூட ஒரு கருத்தை கூட உதிர்த்ததில்லை....
அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள்
ரஜினியின் சுகவீனத்தை முன்வைத்து --> வெகுசன பரப்பில் பிரபலமாக இருக்கும் மனிதர்கள் மீது பொதுவாக நன்றி, பெருமை, பக்தி, விசுவாசம், அபிமானம் போன்ற பல வித உணர்ச்சிகள் பொது மக்களிடம் ஏற்படுவதுண்டு. நேதாஜி, பிரபாகரன் போன்றோரின் அர்ப்பணிப்பு மீது நன்றியும், பெருமையும், பாபாஜி, சத்யபாபா போன்றவர்கள் மீது பக்தியும், எஜமானர்களிடம் விசுவாசமும், ரஜினி, டெண்டுல்கர் போன்றோரின் கலை, விளையாட்டுகளின் மீது அபிமானமும்,... அவரவர் ரசனைக்கு ஏற்ப ஏற்படுவது இயல்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள். இவர்களில் யாருக்கு உடல் நலிவடைந்து போனாலும் அவர்களின்...
சிவப்பு சீனா
சமீபமாக சீனாவின் சரித்திரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய மூன்று நூல்களை அடுத்தடுத்து வாசித்து முடித்திருக்கிறேன். மூன்றாவதை - சிவப்பு சீனா (விகடன் பிரசுரம்) - இன்று முடித்தேன். சீனாவின் நீண்ட நெடிய அரசாட்சி வரலாறு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஞ்சூக்களின் அரசாட்சியுடன் முடிவுக்கு வந்தது. சன்-யாட்-சென்னின் புரட்சியாலும் முயற்சியாலும் சீனாவில் குடியரசு பிறந்தது. இந்த நூல் சீனா, மிங் வம்சத்தினரிடமிருந்து மங்கோலியாவை சேர்ந்த அந்நியர்களான மஞ்சூக்களின் கைக்கு எப்படிச் சென்றது என்பதில் இருந்து ஆரம்பித்து, மஞ்சூக்களின் ஆளுகையின் கீழ்...
சின்னக்குத்தூசி

எத்தனையோ ஆளுமையான மனிதர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலே காலத்தை கடத்தி விடுகிறோம். அவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி. திராவிட சித்தாந்தத்தின் அடையாளக் குரல். கலைஞரின் நெருங்கிய சகா. முரசொலியின் முக்கிய எழுத்தாளர். கடைசி காலங்களில் நக்கீரனுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தவர். இவருடைய கட்டுரைகளுக்காகவே சில காலம் நான் தொடர்ந்து நக்கீரன் வாங்கி வந்தேன்.
பெரியாரிடம் குத்தூசி என்று ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார். மிக பிரபலமான விமர்சகர். அவரை அடியொற்றி தன் பெயரை சின்னக்குத்தூசி...
Judgement Day
மூடநம்பிக்கைகளுக்கும், முட்டாள்தனத்துக்கும் நாடு/இடம்/நாகரிகம்/கல்வி/பொருளாதார வளர்ச்சிக்கும் சம்மந்தமில்லை என்பதற்கு நேற்று அமெரிக்க ஆன்மிக கிறுக்கர்களால் எதிர்பார்க்கப்பட்ட ”Judgement Day, May 21” நல்ல எடுத்துக்காட்டு. கடவுளையும், மதத்தையும், அதன் பெயரால் உலவி வரும் மதநம்பிக்கைகளையும், ‘இவர் அப்படி இல்லப்பா’ என்று அடுத்தடுத்து பின்தொடர்ந்து வரும் ஃப்ராடு சாமியார்களையும் நம்பிக் கொண்டு இருக்கும் வரை இதற்கெல்லாம் விடிவே கிடையாது. ஒரு சின்ன விஷயம்தான் - நம்ப அவசியவில்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்பது குறித்து திறந்த மனதுடன் தேடி வாசித்தாலே...
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன் ‘அக்கினிப் பிரவேசம்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார். பின்னர் அதையே விரிவாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் புதினமாக எழுதினார். வெளியான காலத்தில் மிகப் பரவலான விமர்சன பாதிப்பை ஏற்படுத்தி இருந்த கதை அது. சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்தது. பின்னர் பீம்சிங் டைரக்சனில் அதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. என்னுடைய சேகரிப்பில் வெகுகாலமாக இருந்துவந்த அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பை இன்றுதான் ஏற்படுத்திக் கொண்டேன்.புதினமாக எழுத்தில் வெற்றி கண்ட கதையை சினிமாவுக்கான திரைக்கதையாக திருத்தியமைக்கும் பொழுது மூலக்கதையின்...
இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுக பக்கம்தான்
இன்று நடை பயிற்சியின் போது எனக்கு பின்னால் இருவர் பேசியபடியே வந்தனர். “இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுகவுக்குத்தாங்க விழுந்திருக்கு” “அப்படீன்னு சொல்ல முடியாதுங்க.. கலந்தும் இருக்கலாம்” “இல்லீங்க.. திருச்செங்கோடு ஏரியால ஒரு பத்து காலேஜ் பொண்ணுங்களாவது கேட்டிருப்பேன். எல்லோரும் காங்கிரஸுக்கு போட்டதாத்தான் சொன்னாங்க. ஒருத்தர்கூட தேமுதிகன்னு சொல்லலை” “அப்படீங்களா.. சரி நாளைக்கு தெரிஞ்சிடும். பார்ப்போம்” “எக்ஸிட் போல்லாம் சும்மாங்க. அடிச்சு சொல்றேன் பாருங்க. இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுக பக்கம்தான்” அது யாருடா இப்படி அடிச்சு பேசுறது...
கோ - திரை விமர்சனம்
கோ: ஆனந்தையும், ஷங்கரையும் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்இன்று காலை எண்ணியிருந்த வேலையில் இடர் ஒன்று ஏற்பட்டு தள்ளிப்போக, அதனால் கிடைத்திட்ட பொன்னான நேரத்தை சிந்தாமல் சிதறாமல் வீணாக்காமல் தமிழர் கலாச்சாரத்தின்படி திரைப்படம் பார்த்து அதைக் கழிக்கலாமே என்று மேலிடத்திலிருந்து யோசனை வந்தது. அந்த மேலிட மேடத்தையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் எல்.எம்.ஆர் தியேட்டரை 11 மணியளவில் அடைந்தேன்.டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் எங்களையும் சேர்த்து இருபது சொச்சம் பேர் இருந்தார்கள். அதுவும்கூட கோடை விடுமுறை என்பதால்தான் என்று நினைக்கிறேன். [இருபது...
காவியம் கவிதை: பிரமிள்
வேறொரு இழையில் ரிஷி பகிர்ந்து கொண்ட ஒற்றை இறகு கவிதையைப் படித்தவுடன் எனக்கு பிரமிளின் மிகப்புகழ்பெற்ற இறகு கவிதை உடனே ஞாபகம் வந்தது. உலகத்தரமான கவிதை என்று இலக்கிய உலகில் போற்றுப்படுவது அது. காவியம் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச்செல்கிறது. தமிழ் இலக்கிய ஆக்கங்களில் ஆர்வம் காட்ட விழைவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இலக்கிய முகம் பிரமிளுனுடையது. கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரமிள் என்கிற தருமு சிவராமு, இலக்கிய ஆர்வம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு...
தமிழில் எழுதும் போது ...
எதை எழுதினாலும் அதை ஒருமுறை receivers end-ல் இருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்களின் போது அதில் பெரும்பாலும் நாட்டமிருக்காது. ‘எல்லாம் போதும் போதும்..’ என்று அனுப்பிவிடுவோம். அது ஒரு இயல்பான விஷயம். அதை அப்படிப் பார்க்காமல் நமக்கு தேவைப்படும் பயிற்சியை எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நினைக்க வேண்டும். அதன்மூலம் நம்முடைய எழுதுதமிழை இழைத்து இழைத்து மெருகேற்றிக்கொள்ளாலாம். இங்கே நண்பர்களிடையே முடியாவிட்டால் வேறு எங்கும் அந்த சுதந்திரம் கிடைக்காது. அந்நிய மொழி போகட்டும். தாய்மொழியில் தெளிவுபட பேசுவதும்...
அறிவியல் ஆபத்து
இயற்கையை விஞ்சப் பார்க்கும் அறிவியல் ஆபத்துக்கே அதிகம் இட்டுச்செல்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு மாறான துர்மரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலும் மனிதனின் வேலையை எளிமைப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஏதாவது ஒரு இயந்திரம், ரசாயனம், செயற்கை ஆற்றல் சம்மந்தப்பட்டிருக்கும். யோசித்துப் பாருங்கள்.அறிவியலால் உயிர் பிழைச்சது ? அதை விட அதிகம் இல்லையா?அதுவும் உண்மைதான். அறிவியலுக்கு மறுபக்கமும் உண்டு என்பதை சுட்டுவதே என் கூற்றின் நோக்கம். இயற்கையோடு இயைந்த வாழ்வில் மனிதனின் மரணம் இயற்கையாக இருந்தது. இன்று எத்தனை எத்தனை வாகன...
Subscribe to:
Posts (Atom)