
கதாநாயகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்த்திரைச் சூழலில் எவர் ஒருவர் இயக்குநர்களைப் பின்பற்றி படங்களுக்கான தன் விருப்பப் பட்டியலை(wish list) அமைத்துக் கொண்டிருக்கிறாரோ அவரின் எதிர்பார்ப்பும் சராசரிகளுக்கு அதிகமாகவே இருந்து விடுகிறது. அங்காடித் தெருவைப் பொருத்தவரை எனக்கும் அப்படித்தான் ஆனது. வெயில் படம் மற்றும் அதனைத் தொடர்ந்த அவரின் பேட்டிகளின் மூலமாகவும், சில இலக்கிய கூட்டங்களில் அவரின் பங்கேற்புகள் மூலமாகவும் வசந்தபாலனைப்பற்றிய என் அபிப்ராயங்கள் வெகுவாக உயர்ந்திருந்தன. இப்படத்தில் உடன் ஜெயமோகன் வேறு...