விடைத்தாள்

Posted: Tuesday, September 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சங்கிலி தொடர் அஞ்சலாக வந்த இந்த மடலை இங்கே பகிர்ந்து கொள்ள தோன்றியது. பரிட்சையில் தெரியாத கேள்விகளுக்கு கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. என்றாலும் இம்மாணவனின் கற்பனை வளம் !!! Click the images to view large size ...
மேலும்...

போருக்குப் பின்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஈழம் சார்ந்த செய்திகளை, குறிப்பாக யாழ்குடா நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதில் எனக்கு ஒரு தனி ஆர்வம். போர் முடிந்த கட்டுப்பாடுகளற்ற ஒரு தளை தளர்ந்த சூழலில் யாழ்பாணத்தின் புதிய கலாச்சார சூழலை அம்மக்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் என்பனவற்றை நிதானித்து வாசித்து வருகிறேன். மக்கள் இந்தியாவின் தாக்கம் மிகுந்த ஒரு நுகர்வு கலாச்சரத்தில் தம் இளம் சமூகத்தினர் திளைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதை உணர முடிகிறது. கலாச்சார சீரழிவு அபாய அலறல்கள் அணு தினமும் ஏதாவது பத்திரிக்கைகளில் கட்டுரைகளாக வெளிவந்தவாறு உள்ளன. இவை இனி...
மேலும்...

தீண்டாமை அரசியல்

Posted: Sunday, September 26, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
http://tamil.allnews.in/news/world/--/180255.html //தீண்டாமை என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றச்செயல் // அதாவது உனக்கு உன் மேல்சாதிக்காரன் செய்வதுதான் தீண்டாமை. நீ உன் கீழ்சாதிக்காரனுக்கு செய்வது இந்த கணக்கில் வராது. இது பிராமணாளில் தொடங்கி அடிதட்டு அருந்ததியரில் முடியும். இதற்கு எந்த சாதிக்காரனும் விதிவிலக்கல்ல. பகுத்தறிவையும் பொதுவுடமையையும் தனக்கான வாழ்க்கை பாதையாக தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. வழக்கம்போலவே அவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கான முக்கியத்துவமும் சமூகத்தில் குறைவே. விளைவு - காலம் மாறினாலும் இதுபோன்ற காட்சிகள்...
மேலும்...

விட்டில் பூச்சி வாழ்க்கை

Posted: Friday, September 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்றைய பேருந்து பயணத்தில் பயணிகளின் களைப்பை போக்கவேண்டி தில்லாலங்கடி படம் போட்டிருந்தார்கள். வழக்கமான மசாலா படம்தான் போல என்று ஏனோ தானோவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சென்டிமெண்ட் காட்சி:  அது - கணவன், மனைவி மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை கொண்ட ஒரு அழகான குடும்பம். குழந்தையின் மீது மிகுந்த அன்பு செலுத்தி செல்லம் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இன்பமான வாழ்க்கைக்கு இடையூறாக அந்த குழந்தைக்கு தீராத வியாதி ஒன்று வந்து விடுகிறது. அதற்கு மருத்துவ செலவு, ஆபரேசன் என்று பெரும்பணம் தேவைப்படுகிறது. யார்...
மேலும்...

சிற்சில குறிப்புகள் (6)

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Dabangg பற்றி படிக்க ஆரம்பித்து அங்கேயிருந்து சல்மானை படிக்க போய் Hum aapke hain koun -ல் வந்து நிற்கிறேன். 1994-ல் சேலம் பிரகாஷ் தியேட்டரில் அப்படத்தை பார்த்த நினைவும், ஒரு மாத காலத்திற்கு ராம்லக்ஷ்மண் இசையில் திளைத்த ஞாபகமும் வந்து நனவிடையில் தோய வைத்து விட்டது. இப்போதே அந்த பாடல்களை கேட்டாக வேண்டும்போல் உள்ளது. இன்றைய இரவுக்கான இசை முடிவாகி விட்டது.  * நாம் நம்மை ஐரோப்பியர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு வருந்துவது எப்போதும் தவறு. காரணம் நாம் அவர்களை விட எல்லா அம்சங்களிலும் ஒரு நூற்றாண்டு பின்தங்கியே முன்னேறி வருகிறோம். அதனால் நாம் எதிர்பார்க்கும்...
மேலும்...

சுட முயலும் பெருமூச்சுகள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடித்து விட்டு இருக்கும் அவகாசத்தில் ஏதாவது எழுதலாமே என்று இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.  நிச்சயமாக அவர் தன் கடமை தவறி எதையும் செய்ய அல்ல. கடமையை செய்யத்தான் இந்த பணம்.  ஆனாலும் கூச்சநாச்சம் எதுவுமின்றி பல்லை இளிக்கிறார் அந்த பெரிய அதிகாரி.  இன்று காலை என்னுடன் பேருந்தில் பயணித்த இரு அரசு அதிகாரிகளின் பேச்சு இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. அகவிலை படி உயர்வு குறித்து பேசிக் கொண்டிருந்தனர். பேச்சில் ஆணவமென்றால் அப்படி ஒரு ஆணவம். அதையெல்லாம்...
மேலும்...

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (இவர் ஒரு மன்னர்) என்னும் சங்க கால புலவர் அக்கால சான்றோர் பெருமக்களைப் பற்றி எழுதிய உரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத்தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ்தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள்...
மேலும்...

தீர்ப்பு அரசியல்

Posted: Wednesday, September 22, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Ayodhya verdict: Bulk SMS, MMS banned: India : India Today Ayodhya verdict: Two-day holiday for Karnataka schools Don't reach any hasty conclusion on Ayodhya verdict: Chidambaram Ahead of Ayodhya verdict, Gujarat appeals for peace Ayodhya crosses its fingers before court verdict etc.. etc.. அயோத்தியா தீர்ப்பு பற்றிய ஹைப் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு போரை எதிர்கொள்ள தயாராவது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்திரிக்கை அதிபர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில நாள்களுக்கு ஊடகங்களின் செய்திகளில்...
மேலும்...

இரு திரைப்பட காட்சிகள்

Posted: Friday, September 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே கவனித்தேன் அதன் அசாத்திய அமைதியை. எல்லோரும் டிவி முன் அமர்ந்து கண்ணிமைக்காமல் ஆனால் கைக்குட்டையால் ஒற்றியபடி அதில் ஓடிய படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்தான் என்று என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது சில விசும்பல்கள் காதை தீண்டின. அப்படி என்ன படம் என்று நானும் சிறிது நேரம் பார்த்தேன். உஸ் அப்பப்பா! எனக்கே கண்ணில் நீர் சொட்டி விட்டது. அம்மா செண்டிமெண்டை பிழிந்து பிழிந்து காட்சிகள் அமைத்திருந்தார் டைரக்டர். நெஞ்சம் கனத்து போனது.  ஒரு காட்சியில் அம்மா ஊரில் இறந்து விட்டது தெரியாமல்...
மேலும்...

இவ்வளவுதான் உலகம்

Posted: Wednesday, September 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/T%20M%20S%20Solo%20Duets/Ivvalavu%20Than%20Ulagam.mp3(Movie: Ulagam ivvavuthaan, Music by Vedha, Singers: TMS, LRE) பொல்லாத உலகத்தில் கல்லாமல் புதுப்பாடம் கற்றேன்..... பொய்யாக வாழ்வோரைப் புகழ்ந்தாடும் கூட்டத்தைக் கண்டேன் சொல்லொன்று செயலொன்று இல்லாத பேர் இங்கு யாரப்பா... சொல்லாமல் விட்டாலோ என் போன்ற முட்டாளும் ஏதப்பா......? இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான் எவ்வளவோ இருந்தாலும்  எப்படித்தான் பார்த்தாலும் இவ்வளவுதான். * சற்று முன் கேட்டு ரசித்த...
மேலும்...

இளமையில் மரணம்

Posted: Thursday, September 9, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
புனரபி ஜனனம் புனரபி மரணம் - மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு (பஜகோவிந்ததில் ஆதிசங்கரர்). இது எல்லா நொடிகளிலும் யாராவது சிலருக்கு நடந்து கொண்டிருப்பதுதான். நமக்கு தெரிந்தவர்களுக்கு நிகழும்போது மட்டும் அதன் வலியை நிதானித்து உணர்கிறோம். முரளியின் ரசிகரல்லாத பலரையும்கூட அவருடைய மரணம் சோகம்கொள்ள வைத்திருப்பதை காணமுடிகிறது. காரணம் வயதுதான். 40-களில் இயற்கை எய்துவதை நம் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மரணம் குறித்து பொதுவில் நாம் போட்டு வைத்திருக்கும் மனக்கணக்குக்கு முரணான இந்த நிகழ்வைக்...
மேலும்...

தோல்விக்கோப்பைக்கான வீர விளையாட்டு

Posted: Wednesday, September 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 1 comments
எழுதலாம் என்று எண்ணியிருந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நேரங்கள் அருகி வருவதாக உணர்கிறேன். ஓரளவு எழுதும் விருப்பமும்கூட.  லௌகீகத்திற்கும் சுயாதீனத்திற்கும் இடையிலான அல்லாடல் இது.  தன்விருப்பங்களுக்கும் சூழ்நிலையின் அழுத்தங்களுக்கும் இடையேயான முடிவில்லா பகடையாட்டம் என்றும் சொல்லலாம்.  சில நேரங்களில் தோல்விக்கோப்பைக்கு நடக்கும் விநோத விளையாட்டாகவும் தோன்றுகிறது. ஆனாலும் சுவாரசியமாகவே ஆடிக் கொண்டிருக்கிறேன்.  வேறு வழியுமில்லை.  கடைசி...
மேலும்...