Ayodhya verdict: Bulk SMS, MMS banned: India : India Today
Ayodhya verdict: Two-day holiday for Karnataka schools
Don't reach any hasty conclusion on Ayodhya verdict: Chidambaram
Ahead of Ayodhya verdict, Gujarat appeals for peace
Ayodhya crosses its fingers before court verdict
etc.. etc..
அயோத்தியா தீர்ப்பு பற்றிய ஹைப் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு போரை எதிர்கொள்ள தயாராவது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்திரிக்கை அதிபர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில நாள்களுக்கு ஊடகங்களின் செய்திகளில் தணிக்கையை எதிர்பார்க்கலாம். எஸ்.எம்.எஸ்கள் மொத்தமாக அனுப்புவது தடை செய்யப்பட்டு விட்டது. ரயில்களில், கோவில்களில், மசூதிகளின் அருகே சோதனைகள் செய்யப்படுகின்றன. ஒரு மாநில அரசு மொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறையே அறிவித்து விட்டது.
இவர்களெல்லாம் எதனை எதிர்பார்க்கிறார்கள்? ஒரு உள்நாட்டு கலவரம்? இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இந்து - முஸ்லிம் இன மோதல்? என்னுடைய கணிப்பில் தீர்ப்பு முஸ்லிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்னொரு குஜராத் கலவரம்?
இந்நேரம் இந்து தீவிரவாத அமைப்புகளும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் தங்கள் மூளையை கூர்தீட்டி இளைஞர்களை தயார் செய்துகொண்டு இருப்பார்கள் - யார் யாரை முதலில் தாக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலே ஒரு தற்காப்பு ஆயத்தங்களுக்காக.
அல்லது இதுதான் சமயம் என்று மனதில் தனலென எரியவிட்டிருக்கும் மத வன்மத்தை செயலில் காட்ட, பழைய கணக்கை பழி தீர்த்துக்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
எதுவாகிலும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு பதட்டம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகிறது. இப்பதட்டமே அநாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாறி அதன் காரணமாக ஒரு கலவரத்துக்கு வித்திடாதவரை நல்லது.
வரும் வெள்ளி நல்ல வெள்ளியாக கடப்பதாக என்று காந்தி தினமும் பிரார்த்தித்து வந்ததுபோல “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்று மனதிற்குள் ஒருமுறை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment