“தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத்தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ்தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள் தமக்கென்று முயற்சி செய்யும் தன்னலமற்றவர். பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர். அத்தகையோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது"
புலவர்கள் எதையும் சிறிது மிகைப்படுத்திதான் கவிபுனைவார்கள். அந்த மிகையை மட்டும் குறைத்து விட்டு தேடினாலும் கூட இக்காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் அகப்படுவார்கள் என்று நிச்சமில்லை. நுகர்வு கலாச்சாரம் மக்களின் அடிப்படை குணாம்சத்தில் ஏற்படுத்தியுள்ள பாரிய மாற்றம் இது.
இந்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கடலுக்குள் கலத்தில் செல்லும்போது மாய்ந்து விட்டதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். இதுபோல் சங்ககால புலவர்களின் பட்டப்பெயர்களெல்லாம் சுவாரஸ்யமான காரண கதைகளை கொண்டிருக்கின்றன.
0 comments:
Post a Comment