//தீண்டாமை என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றச்செயல் //
அதாவது உனக்கு உன் மேல்சாதிக்காரன் செய்வதுதான் தீண்டாமை. நீ உன் கீழ்சாதிக்காரனுக்கு செய்வது இந்த கணக்கில் வராது. இது பிராமணாளில் தொடங்கி அடிதட்டு அருந்ததியரில் முடியும். இதற்கு எந்த சாதிக்காரனும் விதிவிலக்கல்ல. பகுத்தறிவையும் பொதுவுடமையையும் தனக்கான வாழ்க்கை பாதையாக தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. வழக்கம்போலவே அவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கான முக்கியத்துவமும் சமூகத்தில் குறைவே. விளைவு - காலம் மாறினாலும் இதுபோன்ற காட்சிகள் மாறுவதில்லை. தனக்கான மனசமாதானத்தை கடவுளிலும் மதத்திலும் சாதிமுறை சடங்குகளிலும் தேடும் வரை மாறவும் மாறாது.
0 comments:
Post a Comment