Dabangg பற்றி படிக்க ஆரம்பித்து அங்கேயிருந்து சல்மானை படிக்க போய் Hum aapke hain koun -ல் வந்து நிற்கிறேன். 1994-ல் சேலம் பிரகாஷ் தியேட்டரில் அப்படத்தை பார்த்த நினைவும், ஒரு மாத காலத்திற்கு ராம்லக்ஷ்மண் இசையில் திளைத்த ஞாபகமும் வந்து நனவிடையில் தோய வைத்து விட்டது. இப்போதே அந்த பாடல்களை கேட்டாக வேண்டும்போல் உள்ளது. இன்றைய இரவுக்கான இசை முடிவாகி விட்டது.
*
நாம் நம்மை ஐரோப்பியர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு வருந்துவது எப்போதும் தவறு. காரணம் நாம் அவர்களை விட எல்லா அம்சங்களிலும் ஒரு நூற்றாண்டு பின்தங்கியே முன்னேறி வருகிறோம். அதனால் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அடுத்த நூற்றாண்டில் ஒருவேளை வரலாம். அல்லது இன்னும் காலம் ஆகலாம்.
எல்லா சிஸ்டமும் மாறுவதற்கான அடிப்படை முதலில் மனிதனின் குறைந்த பட்ச அடிப்படை பொதுபுத்தியில் மாற் றம். அதாவது common sense-ல் மாற்றம். அது எவ்வளவு விரைவில் நடக்க இருக்கிறதோ அவ்வளவு விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்மாற்றங்கள் மற்ற விஷயங்களிலும் ஏற்படும்.
*
இன்று ட்விட்டரில் பரவிய கில்லாடி ஜாவா ஸ்கிரிப்ட் வைரஸ் போல கூகுள் குரூப்புக்கும் ஒரு வைரஸை எழுதப்பட்டால் நல்லது. ஆனால் ட்விட்டர் வைரஸ் கொண்டுபோய் சப்பானிய போர்ன் தளத்தில் விட்ட மாதிரி இல்லாமல் சவீதா அண்ணி மாதியான ஏதாவது கூர்மூக்கு சுரோணித தளத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மூக்கிலும் நாக்கிலும் சப்பை எமக்கு முக்காலும் ஆகாது :-)
0 comments:
Post a Comment