இரு திரைப்பட காட்சிகள்

Posted: Friday, September 17, 2010 | Posted by no-nononsense | Labels:
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே கவனித்தேன் அதன் அசாத்திய அமைதியை. எல்லோரும் டிவி முன் அமர்ந்து கண்ணிமைக்காமல் ஆனால் கைக்குட்டையால் ஒற்றியபடி அதில் ஓடிய படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்தான் என்று என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது சில விசும்பல்கள் காதை தீண்டின. அப்படி என்ன படம் என்று நானும் சிறிது நேரம் பார்த்தேன். உஸ் அப்பப்பா! எனக்கே கண்ணில் நீர் சொட்டி விட்டது. அம்மா செண்டிமெண்டை பிழிந்து பிழிந்து காட்சிகள் அமைத்திருந்தார் டைரக்டர். நெஞ்சம் கனத்து போனது. 

ஒரு காட்சியில் அம்மா ஊரில் இறந்து விட்டது தெரியாமல் அவளுக்கு புடவை அனுப்புகிறான் வெளிநாட்டில் வேலையில் இருக்கும் அவர் மகன். அந்த புடவை சரியாக அம்மா பாடையில் கிடத்தப்படும்போது போஸ்ட்மேனால் கொண்டு வந்து தரப்படுகிறது. அதை பார்த்து குடும்பமே அழுது புலம்பி அந்த புடவையை அம்மா பிரேதத்தின் மீது சாற்றுகிறார்கள். என் வீட்டில் விசும்பல்கள் வெடித்து ஒப்பாரி சத்தமே கேட்க ஆரம்பித்து விட்டது. இதற்கும் மேல் தாங்காமல் இடத்தை காலி செய்துவிட்டு உலாத்த சென்று விட்டேன். அப்பப்பா! சென்டிமெண்ட் காட்சி எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! இப்படி ஒரு 

படம்: பாண்டி

*

நான் வழக்கமாக வேலைக்கு செல்லும் கீழக்கரை பஸ்ஸில் தினமும் ஏதாவது படம் ஓடுவது வழக்கம். பூம் டிவி போலல்லாமல் வேறு வேறு படங்களை போடுவதால் எப்போதும் அந்த பஸ் மாமூல் கிராக்கிகள் அனைவரின் விருப்பத்துக்குரியது. இன்று அதில் போடப்பட்டிருந்த படம் வேல். ஆக்சன் என்னும் பெயரில் பக்கம் பக்கமாக வசனங்களும் சவால்களுமாக காட்சிகள் சென்று கொண்டிருந்தன. எல்லாம் பார்த்த மாதிரியே இருந்தது. இதைத்தான் அப்படியே கதாநாயகனுக்கு காக்கி சட்டை மாட்டி, திரைக்கதையில் சில மேல்பூச்சு வேலைகள் செய்து களத்தை சென்னை என்று ஆக்கி சிங்கம் ஆக்கியிருந்தார் ஹரி. சரியான உல்டா மன்னனாக இருப்பார் போலும் என்று நினைத்து கொண்டேன். 

0 comments:

Post a Comment