உன்னைப் போல் ஒருவனை முன்வைத்த அரசியல்

Posted: Tuesday, December 29, 2009 | Posted by no-nononsense | Labels: 1 comments
In reply to Pamaran's review on Unnai pol oruvan:இந்த முழு கடிதமும் ஒரு திராபை. படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. பாமரனின் எழுத்து நடை வர வர நொண்டியடிக்கிறது. அதனால்தான் குமுதத்தில் இவர் எழுதிவந்த பத்தியை தூக்கிவிட்டார்கள் போலும்.கமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து கமலை விமர்சிப்பது வெட்டி வேலை. காரணம் “மர்மயோகி’ டிராப் ஆனதால் விழுந்த கால்ஷீட் இடைவெளியை நிரப்ப, கமல் பாலிவுட் கடையிலிருந்து வாங்கிப் போட்டுக் கொண்ட ரெடிமேட் சட்டைதான் இந்த உ.போ.ஒ. நடிகர் ஒருவர் பாதுகாப்பு கேட்கும் அந்த தமாசு காட்சி...
மேலும்...

நீச்சல் கற்ற அனுபவமும் உயிர் தப்பிய கதையும்

Posted: Monday, December 28, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களுடன் தொடரும் மடலாடல்:பாஸ்கரும் நானும் ஒன்றாக சேர்ந்தே நீச்சல் கற்றுக் கொண்டோம். எப்படியென்றால், வீட்டிலிருந்து ஒரு தாம்பு கயிறு எடுத்துக் கொண்டு கொசவம்பட்டியில்(சேந்தமங்கல ரோடு) இருந்த ஒரு கிணற்றுக்குச் செல்வோம். அங்கே கயிற்றை முதலில் ஒருவன் வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றினுள் இறங்கி நீச்சலடிக்கும் போது மேலேயிருந்து மற்றொருவன் அதை கையில் பிடித்துக் கொள்வோம். இப்படியே ஒரு மாதம் விடாமல் அலைந்து கற்றுக் கொண்டோம். அதன் ஆகப்பெரும் பயனை விரைவிலேயே அடைந்தேன். ஒரு ஆடி 18-க்கு மோகனூர் ஆற்றில் நானும் குமரேசனும் (சயின்ஸ் குரூப்) குளித்துக் கொண்டிருந்தபோது...
மேலும்...

2009 - கற்றதும் பெற்றதும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் கொஞ்சம் ஆயாசமாக சாய்ந்தமர்ந்து இந்த ஒரு வருடத்தில் நடந்தவைகளை பரிசீலித்துக் கொள்வதையும் திருத்த வாய்ப்புள்ளவைகளை குறித்துக் கொள்வதையும் ஒரு வழக்கமாகவே செய்துவருகிறேன். கேட்பதற்கு சம்பிரதாய செய்கை போல தோன்றலாம். முழுமையாக இல்லாவிடினும், ஓரளவு இதனால் பலனுண்டு என்பதே இதுவரையான என் அனுபவம். நமது நாளையைப் பற்றி எப்போதும் ஒரு திட்டத்துடன் இருப்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச தெளிவை கொடுக்கிறது. கால் போன போக்கில் விட்டேத்தியாக வாழ்ந்து நிதமும் விதியை நொந்து சோர்ந்தவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் கிடைக்கும்...
மேலும்...

நாமக்கல்லின் இலக்கிய முகம் (1)

Posted: Sunday, December 27, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எனக்கு நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது ஒரு விஷயத்தில் மாளாத பொறாமை உண்டு. அன்று முதல் இன்றுவரை சுந்தரம் ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அ.கா.பெருமாள் போன்ற பல இலக்கிய எழுத்தாளர்களை தமிழுக்கு நல்கிய மாவட்டம் அது. இந்த வரிசையில் உள்ள முதல் மூன்று பெயர்களை தவிர்த்து நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுதல் சாத்தியமில்லை. என் மனதுக்கு நெருக்கமான கவிஞர் தொ.சூசைமிக்கேலும் அதே மாவட்டத்துக்காரர் தான். அது போல், நாமக்கல்லின் இலக்கிய முகம் யாது என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்....
மேலும்...

சொர்க்கமே என்றாலும்..

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களுடனான மடலாடலின் ஓரிடத்தில் விகுதியில் ஒற்றுமை கொண்டு ஒன்றை புதிதாக முயற்சித்து பார்த்தேன். இன்னும் பயிற்சி தேவை என்பது எனக்கே புரிகிறது: செய்தி 1: இந்த வார ஜூ.வி:கூலாகச் சிரித்த கழுகார், "உம்மையும் வாசகர்களையும் விட்டு நான் எங்கே போகப் போகிறேன். ஆனால், இடைத்தேர்தல் வெற்றிச் செய்தி வந்த களிப்போடு முதல்வர்தான் பெங்களூரு கிளம்பிவிட்டார். அங்கேகூட ஓய்வெல்லாம் கிடையாதாம். 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தின் கதை - வசனத்தை வேகமாக முடிக்கப் போகிறாராம். ஒரு வாரம் தங்குகிறார். முதல்வருக்கு முன்பாகவே அவரது துணைவி...
மேலும்...

பாலியல் எழுத்துக்கள் ஒரு பார்வை

Posted: Saturday, December 26, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாலியல் கதைகள் குறித்து நண்பனுடனான உரையாடலின் ஒரு பகுதி:எந்த புத்தகம் என்று கேட்பதிலிருந்து நீ ஏராளமாகப் படித்திருக்கிறாய் என்பது புலனாகிறது. ஏதோ முன்பு ஒருமுறை ஜேப்பியார் பற்றி பேச்சு வரும்போது நண்பர் ஒருவர் சொன்ன தகவலைத்தான் பகிர்ந்து கொண்டேன். அதற்காக புள்ளி விவரமெல்லாம் கேட்பது அநியாயம் ;-)) எனக்கு இந்த வகையறாவில் மருதம் என்கிற ஒரு புத்தகத்தின் பெயர் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அதுதான் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு பிறகு உன்னைப் போல ஏராளமாக இல்லாவிட்டாலும், தாராளமாக நானும் கொஞ்சம் படித்து தள்ளியதில், பெயரெல்லாம் மறந்துவிட்டது....
மேலும்...

தண்டட்டி கருப்பாயி

Posted: Tuesday, December 22, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
அந்திசாய இன்னும் நேரம் இருந்தது. இருந்தும் ஏனோ இன்று சீக்கிரமே இருட்டிவருவது போல ஒரு உணர்வு. மெல்ல கதவுக்கு வெளியே தலையை நீட்டியவன் மழை வருமா என்று அன்னாந்து வானம் பார்த்தேன். மனைவி, குழந்தை சகிதம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. செஞ்சாந்தை அள்ளி தெளித்தாற் போல சிவந்திருந்தது கீழ்வானம். இப்போதைக்கு தூறலுக்குகூட வாய்ப்பில்லை.“மேல மட்டும் பாத்தா பத்தாது. அக்கம் பக்கமும் கழுத்த திருப்பி பாரு. அந்த கொள்ளி கண்ணு கெழவி கண்ணுல உழாமப் போனாலே எல்லாம் நல்லா நடக்கும்”என்னடா இது இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று நினைத்தேன். ஆரம்பித்துவிட்டது. நாங்கள் வெளியே செல்கிறோம்...
மேலும்...

நடிகர்களின் அரசியல் ஆசை

Posted: Sunday, December 20, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
பாகவதர் / எம்ஜிஆர் / ரஜினி / விஜய் / அஜித் -- என்று எல்லா காலத்திலும் யாருக்காவது இப்படிப்பட்ட பக்தர்கள்(can't call them just fans) இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லை, மேலை-கீழை நாடு என்று அனைத்து நாட்டு கலாச்சாரத்திலும் இருப்பதுதான். கட் அவுட்டும் பாலாபிஷேகமும் தான் நம்மை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது.நடிகராக இருக்கும்வரை எல்லாமே சரிதான். ஆனால் அரசியல் என்று வரும்போது நிறைய eligible criteria's முளைத்துவிடும். உதாரணமாக ஒருவேளை நாளை விஜய் அரசியலில் இறங்கினால் அப்போது...
மேலும்...

டிக்கெட் எடு.. கொண்டாடு..!

Posted: Friday, December 18, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எங்கள் அலுவலகத்தில் உதவியாளராக 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுடைய சின்சியாரிட்டி காரணமாக அவன்மேல் எனக்கு எப்போதும் தனிப் பிரியம் உண்டு. என்னுடைய மேஜையில் இருந்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரின் நடவடிக்கைகளையும் எளிதாக கவனிக்க முடியும். இன்று காலையில் இருந்து பார்க்கிறேன், இவன் மட்டும் கொஞ்சம் பதட்டமாக, ஜன்னலில் ஒரு கண்ணும், sms இல் ஒரு கண்ணுமாக காணப்பட்டான். கூப்பிட்டதைக்கூட இரண்டொருமுறை கவனிக்கவில்லை. அடுத்தமுறை அவன் ஜன்னலில் நின்று நோட்டம் விடும்போது நானும் அருகிலிருக்க நேர்ந்ததால் என்னவென்று எட்டிப் பார்த்தேன். விஷயம் புரிந்துவிட்டது.எங்கள்...
மேலும்...

நேற்று இல்லாத மாற்றம்

Posted: Thursday, December 17, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ஒரு காலத்தில் பஸ்ஸில் பயணிப்பது(நன்றி: சுஜாதா) என்றால் எட்டிக்காய் கசப்புதான். அருகில் இருக்கும் பரமத்தியில் மேட்ச் என்றாலேகூட ’பைக்கில் அழைத்துச் சென்றால்தான் ஆச்சு’ என்று ஜபர்தஸ்த் காட்டுவேன். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பஸ் பயணங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டன. காலப் போக்கில் பழகியும் விட்டன. எந்த ஒரு பயணத்திலும் உற்று நோக்க ஒரு நூறு விஷயங்களாவது இருக்கின்றன என்பது என் அனுபவம். அது சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம்; அல்லது ஜன்னலுக்கு வெளியே கடந்து செல்லும் காட்சிப் பொருள்களாகவும் இருக்கலாம், எல்லாமே ஏதோ ஓர் உள்ளுறை செய்தியின் சமிக்ஞைகள்...
மேலும்...

படிப்பதும் படிக்க விரும்புவதும்

Posted: Wednesday, December 16, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரண்டு நாட்களாக க.நா.சு வின் ’பொய்த்தேவு’ கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. க.நா.சுவின் விமர்சன கட்டுரைகளை நிறைய படித்துள்ளேன். கணையாழியில் அவர் போட்டுவந்த டாப் டென் நூற் பட்டியல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஆனால், அவர் புதினங்கள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. பொதுவாக என் வாசக தேர்வுகள் அபுனைவாகவே(non-fiction) இருக்கும். அதில் படிக்க குறித்து வைத்துள்ளதையே இன்னும் படித்துமுடிக்க முடியாமல் இருப்பதால், புனைவுகள் பக்கம் நான் செல்வதே இல்லை. என்றாலும், பாலாஜி போன்ற தீவிர புனைவிலக்கிய ஆர்வலர்களுடன் உரையாட நேரும்போது...
மேலும்...

புதுப் படங்களின் ஓபனிங் மற்றும் வசூல் வியூகம்

Posted: Sunday, December 13, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
Excerpts from a conversation with my friend on Cinema release and collection strategy:ஒரு நடிகரின் படம் வெளியாவதற்கு முன்பே அது நக்கலுக்கும், நையாண்டிக்கும் ஆளாவது டி.ராஜேந்தருக்கு பிறகு விஜயின் படங்கள் தான் என்று நினைக்கிறேன். விஜய் romantic comedy மட்டும் செய்து கொண்டிருந்தவரை இந்நிலை இல்லை (விஜயின் ‘வசீகரா’ எனக்கு மிகவும் பிடித்தப் படம்).சன் டிவியின் விளம்பர பலத்தில் வேட்டைக்காரன் ஓரளவு லாபகரமாக ஓடிவிட வாய்ப்பிருக்கிறது. அதை நம்பித்தான் ரெகார்டு பிரேக் விலைக்கு (ரூ 20.4 லட்சம்) நாமக்கல்லிலே கூட பெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் சிவாஜியே 16...
மேலும்...

ஊழலை ஒழித்தல் மற்றும் ஒரு நல்ல தலைவரின் தேவை

Posted: Friday, December 11, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My comment in a discussion on curruption in Indian politics:நிச்சயமாக ஓரிரவில் ஒரு சட்டம் போட்டு இதையெல்லாம் ஒழித்துவிட முடியாதுதான். அப்படி முடியுமென்றால் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களும், அதைக் கட்டிக்காக்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையும், அதன் போலீஸார்களுமே போதுமே. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள்தான் அதிகம் வாங்குகிறார்கள் என்பதுதான். இங்கு வேலியே பயிரை மேய்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? லஞ்சம் வாங்குபவனுக்கு, நான் ஒருவன் திருந்துவதனால் இந்த உலகம் திருந்திவிடப் போகிறதா என்னும் அலட்சிய மனோபாவம். அதில் உண்மையும் இல்லாமலில்லை. அம்மணமாக...
மேலும்...

நாமக்கல் கலெக்டரின் பணிகளில் பங்கெடுத்தல் - ஓர் பார்வை

Posted: Wednesday, December 9, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
My viewpoints on helping collectors initiatives by funding it and so on: ஊருக்கு உபகாரம் செய்ய ஒருவர் இருக்கிறார் என்றதும் அவருக்கு தோள் கொடுக்க ஓடோடி வரும் நல்லுள்ளங்களுக்கு என் வந்தனங்கள். இக்கடிதத்தை படித்ததிலிருந்து நாமக்கல் கலெக்டர் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியும் கூட செய்தியாகி இருக்கிறார் என்பது தெரிகிறது. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யென பெய்யும் மழை என்பது இதுதானோ?! நிற்க. நீங்கள் துவங்க நினைக்கும் இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்ன என்பது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கடிதத்தின் தொனியில் இருந்து அது...
மேலும்...

கழைக்கூத்து

Posted: Monday, December 7, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
”வயிற்றுக்காக மனுசன் இங்கேகயிற்றில் ஆடுறான் பாருஆடி முடிச்சி இறங்கி வந்தாஅப்புறந்தாண்டா சோறு..”நல்லநேரம் திரைப்படத்தில் எம்ஜிஆர் கழைக்கூத்தாடியபடி ஆடிப்பாடும் இப்பாடல் என் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் வரும் யானைகள் காட்டும் வித்தையையும் நாகேஷின் சேஷ்டைகளைக் காட்டி பமுறை சோறு ஊட்டியிருக்கிறோம். குழந்தைகளுக்கு மட்டுமா, கழைக்கூத்து நமக்கும் கூட பிரமிப்பைத் தரவல்லது. கயிற்றில் பேலன்ஸ் செய்து நடப்பதும், சிறிய வளையம் ஒன்றில் இருவர் உள்ளேச் சென்று வெளியே வருவதும் எல்லோராலும் எளிதில் செய்யக் கூடிய காரியம் அல்ல. எனக்கு இதைப் பார்க்கும்போதெல்லாம்...
மேலும்...

"Paa" வேட்டைக்காரன் | மோகனூர் - வேலூர் காவிரி கரைகள்

Posted: Friday, December 4, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
So, ‘Paa’ proves to be an excellent film and you’ll surely enjoy watching it. Verdict: Highly recommended- ‘பா’ படத்திற்கு இப்படி விமர்சனம் எழுதியிருக்கிறது ஒரு இணையதளம் (IndiaGlitz). தேடிப் படித்த அனைத்து விமர்சனங்களுமே படத்தை பாராட்டித் தள்ளி இருக்கின்றன. டிவிடி கிடைக்க எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகுமென நினைக்கிறேன். எதற்கும் டோரண்ட்களில் தேடிப் பார்க்க வேண்டும். அமிதாப் கடந்த பத்தாண்டுகளில் நடித்துள்ள வித்தியாசமான காதா பாத்திரங்களில் ஒன்றையாவது ஏற்று நடிக்க நம் ஊர் சூப்பர் ஸ்டார்கள் முன் வருவார்களா என்பது...
மேலும்...

கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Tuesday, December 1, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்று கார்த்திகை தீபம் என்று நினைவேயில்லை. வேலை முடிந்து ச.பே.புதூரில் பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க நடக்கத்தான் வீடெங்கும் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் அணிவகுப்பைக் கண்டேன். ஒருவேளை தீபாவளியே தானோ என்னும் அளவிற்கு அவ்வப்போது பட்டாசு சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. வீட்டிற்கும் வந்ததும் என் வருகைக்காக தயாராக இருந்த என் மகளுடன் தீபாவளி முடிந்து மிச்சம் மீதியிருந்த பட்டாசுகளை கொளுத்தி முடித்தேன். இப்பொழுது என்னைத் தவிர அனைவரும் விளக்குப் போட கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள்.கார்த்திகை தீபத்தை நம் ஊரில் கூம்பு என்றுதான் பொதுவாக அழைப்பார்கள். ச.பே.புதூர்...
மேலும்...