நண்பர்களுடனான மடலாடலின் ஓரிடத்தில் விகுதியில் ஒற்றுமை கொண்டு ஒன்றை புதிதாக முயற்சித்து பார்த்தேன். இன்னும் பயிற்சி தேவை என்பது எனக்கே புரிகிறது:
செய்தி 1: இந்த வார ஜூ.வி:
கூலாகச் சிரித்த கழுகார், "உம்மையும் வாசகர்களையும் விட்டு நான் எங்கே போகப் போகிறேன். ஆனால், இடைத்தேர்தல் வெற்றிச் செய்தி வந்த களிப்போடு முதல்வர்தான் பெங்களூரு கிளம்பிவிட்டார். அங்கேகூட ஓய்வெல்லாம் கிடையாதாம். 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தின் கதை - வசனத்தை வேகமாக முடிக்கப் போகிறாராம். ஒரு வாரம் தங்குகிறார். முதல்வருக்கு முன்பாகவே அவரது துணைவி ராஜாத்தி அம்மாள் ஹாங்காங்கிளம்பி விட்டார். முதல்வரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் ஜோர்டான்பறந்துவிட்டார். முதல்வரின் நிழலான உதவியாளர் சண்முகநாதனோ தன் மகளைப் பார்க்க மலேசியா சென்றிருக்கிறார். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியும்கூட, முதல்வர் இல்லாத நேரம்தான் தனக்கும் சற்று ரிலாக்ஸ் என்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சுற்றுலா போயிருக்கிறார். தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும்கூட குடும்பத்தோடு புத்தாண்டைக் கொண்டாடுவது வெளிநாட்டில்தானாம்!"
செய்தி 2:
TPN மதுரை போய்விட்டார். சரவணன் நாமக்கல் போய்விட்டார். மாது கோவைபோய்விட்டார். காவியம் படைக்கும் நோக்கில் அன்பு காவியனின் தந்தை (சி.சக) அடிக்கடி காணாமலே போகிறார். அநேகமாக அண்ணன் ஜெய்குமார் கூட குமாரகம் போனாலும் போவார் (இந்த வருசம் புத்தாண்டு கொண்டாட பிரிட்னி ஸ்பியர்ஸ் அங்கேதான் வர்றாராமே.. ).
“ஏண்டா செக்குமாடாட்டம்
சுத்தி சுத்தி வாராட்டி
நீயும் எங்கிட்டாச்சும்
கெளம்புனாதான் என்ன?”
சுத்தி சுத்தி வாராட்டி
நீயும் எங்கிட்டாச்சும்
கெளம்புனாதான் என்ன?”
“அட போ மக்கா..
அங்கிட்டு இங்கிட்டு
எங்கிட்டு சுத்தினாலும்
கால் ஓஞ்சதும் - மாடு
கட்டுதாரைக்குத்தான்
வந்தாவணும்
கருக்கல்ல எழுந்துபுட்டு
காபிதண்ணி குடிச்சிபோட்டு
கிரிக்கெட் விளையாடிபோட்டு
ஆத்துதண்ணில முக்கிபுட்டு
அம்மா-கையில தின்னுபுட்டு
கம்ப்யூட்டர்ல மொக்கைபோட்டு
பி.டி-ல ரூமபோட்டு
பீர்புட்டிய தூக்கிபோட்டு
கூடி கும்மாளம்போட்டு
புரோட்டாவ சைடிஷ்போட்டு
கைநக்க தின்னுபுட்டு
வெத்தலைய வாயில்போட்டு
நல்லபிள்ள வேஷம்போட்டு
நாத்தத்தை தொரத்திபுட்டு
பொறவாசல்ல கட்டில்போட்டு
”சொர்க்கமே என்றாலும்....”
இளையராஜா பாட்டபோட்டு
கண்மூடி தூக்கம் போட்டு - இப்படி
சொந்தஊர்ல போட்டுபோட்டு
தாக்கற இந்த ஜாலிஜாட்டு
பீட்டர் மேல பீட்டர் உட்டு
துட்டு மேல துட்டுபோட்டு
வேகேஷன் உதார் உட்டு
போற எடத்துல கெடைக்குமாலே
என் செவத்தமூதி கைநாட்டு!”
(நீதி: ஆடமாட்டாத சிறுக்கிக்கி மேட கோணலாம்)
0 comments:
Post a Comment