அத்தியாவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.இது அறியாமல் பேசும் பேச்சு. நுனிபுல்கூட மேயாமல் எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது. வாய்பாய் அரசு அறிமுகப்படுத்திய அரிசி, கோதுமை போன்றஅத்தியாவசிய உணவு பொருளின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை மன்மோகன் சிங் அரசு தூக்கி இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.(காரணம் அப்போது நாட்டில் பண வீக்கம் விண்ணை முட்டி நின்றது). ரீபைண்ட் ஆயில், உருளை கிழங்கு, சர்க்கரை ஆகியவற்றை தவிர வேறு உணவுடன் சம்மந்தப்பட்ட அத்தியாவசிய பொருள் எதுவும் தற்போது டிரேடிங்கில் இல்லை....
மலையாளிகளின் உளவியல் - ஓர் எதிர்வாதம்
மலையாளிகளின் உளவியலை இந்த கடிதம் மூலம் புரிந்துகொள்ளமுடிகிறது.நேரடியாக பாதிக்கப்படும் நாம் இதற்க்காக கோபப்படமுடிகிறதே ஒழிய பரிதாபப்படமுடியவில்லைஇதே மனோபாவத்தையும் அலட்சியத்தையும்தான், நாமும் இங்கே வாழும் இலங்கை தமிழர்கள் குறித்து கொண்டிருக்கிறோம் என்று நான் சொல்வேன். ‘சிலோன் ரிட்டர்ன்’ என்றாலே ஒரு இளக்காரம்தான்.
கேரள கம்பெனியில் இருமுறை பணிபுரிய நேர்ந்திருக்கும் எனக்கு மாறுபாடான அனுபவம் ஏதும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால் பொதுவில் தமிழர்களை ‘பாண்டிங்க’ என்று திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அங்கேயுள்ள அரசு அதிகாரிகளுடன் புழங்க...
ஈழப்போராட்டமும் சர்வதேச இன மோதல்களும்
நிறைய பேர் ஆயிரத்தில் ஒருவன் கதையை ஈழ நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சொன்னார்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை பிரதிபலிக்கும் கதை அம்சம் கொண்ட படம் 300 என்னும் ஆங்கிலப்படம்.300, ஆ.ஒ.தான் என்றில்லை, உலகின் பெரும்பாலான காலனியாதிக்க, ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் இன மோதல்கள் சம்மந்தப்பட்ட கதைகளும் படங்களும் கூட உனக்கு ஈழப் பிரச்சினையைத்தான் ஞாபகப்படுத்தும். அனைத்தின் பின்புலமான காரணங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.சமகாலத்திலேயே ஈழப் பிரச்சினையோடு ஒப்பிடக்கூடியதாக டார்பர், பாலஸ்தீனம், திபெத், ருவாண்டா, கொசோவோ போன்ற பலவற்றைக் குறிப்பிடமுடியும். இவற்றில் கொசோவோவை ஈழத்துடன்...
தமிழ் திரைச்சூழல் - தொடரும் உரையாடல்
எப்பவுமே கதை இல்லையென்றால் பெரிய ஆக்டரோ சின்ன ஆக்டரோ படம் ஓடாது அந்த கதையும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதையாக இருந்தால் மட்டுமே படம் ஹிட்டடிக்கும். உ.ம்: நாடோடிகள். இல்லையென்றால், ஒரு சிறிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டியில் சுருண்டு விடும். கிளாஸிக் கதைகளை பொறுத்தவரை அந்நிலையில்தான் இன்றைய தமிழ் ரசிக சூழல் இருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம்: காஞ்சிவரம். பார்த்த எல்லோராலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் வாங்கிவிட்ட அப்படத்தை தைரியமாக வாங்கி வெளியிட இன்றுவரை எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை. காரணம் அதில் கதை மட்டுமே இருக்கிறது. ’சதை’...
குழந்தைமை
குழந்தைகளைப்பற்றி Janusz Korczak-ன் இக்கருத்துக்களின் மீது நடந்த உரையாடலும் என் சில கருத்துக்களும்:மற்ற கட்டுரைகளைப் போல படித்த உடனே இதற்கு எந்த கருத்தையும் மனதை செலுத்தி எழுதிவிட முடியவில்லை. Janusz Korczak-ன் கருத்துக்களை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் மனம் சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறது. என் குழந்தையிடம் நான் எந்த மாதிரி நடந்துகொள்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் பரிசீலித்து கொண்டிருக்கிறேன்.பல விதமான இஸங்களிலும் பின்நவீனத்துவ கூறுகளிலும் சித்தாந்த சிடுக்குகளிலும் பகலிரவு பாராமல் சிந்தையை செலுத்தி மண்டையை உடைத்துக்கொண்ட பொழுதுகளில், எத்தனை நிமிடங்களை...
Copybook cricketer!
சச்சின்.. 21 வருடங்களாக சர்வதேச போட்டி ஒன்றில் தொடர்ந்து ஒரே உத்வேகத்துடன் விளையாடி வருவது என்பது நினைத்து பார்க்க முடியாத சாதனை. அதிலும் தொடர்ந்து மக்களின் அதீத எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்படி ஆடியாக வேண்டும் என்பது பெரிய நெருக்கடி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார். டென்னிஸ் எல்போ பிரச்சினை ஒன்றைத் தவிர மற்றபடி அவருடைய உடல்திறனையும் மெச்சும்படி பராமரித்து வருகிறார். 50 ஓவர்களும் களத்தில் இருந்து 400 ரன்களுக்கும் ஓடி சலிப்பது என்பது எல்லா 37 வயதுகாரர்களுக்கும் எளிதான காரியம் அல்ல. இவருடன் அறிமுகமாகி...
புராதனங்கள் குறித்த புரிதல் நிலை
இந்த கடித உரையாடல் குறித்த நண்பர்களுடனான உரையாடலில் என் சில கருத்துக்கள்:பொதுவாக பாமர மக்களிடம் எதுவும் தமக்கு நடந்தால் மட்டுமே அதை பற்றி அலறுகிறார்கள்.மற்றவர்கள் துன்பப்படும்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லைபாமர மக்கள் மட்டும்தானா? மெத்த படித்த மேதாவிகள் மத்தியில் மட்டும் நமது புராதனங்கள், சரித்திரங்கள் குறித்தெல்லாம் என்ன பெரிய புரிதல் நிலவுகிறது? தொன்மம் பற்றிய பேச்சு எழுந்தாலே ஏதோ தொழுநோயை கண்டதுபோல் பின்னங்கால் பிடரியில் அடிக்க அல்லவா ஓடுகிறார்கள். வரலாறு என்பது பள்ளியில் பக்கம் பக்கமாய் படிக்க வைத்து கழுத்தறுத்த ஒரு பாடம் என்கிற அளவில்தான்...
Buzzings - 2 (14.02.2010 to 21.02.2010)
என் நண்பன் என்னை வாழ்த்தினான். நான் அவனை வாழ்த்தினேன். காதலர் தினம் இனிதே முடிந்தது. சம்சாரியானதிலிருந்து சங்காத்தங்கள் இப்படித்தான் பரிமாணம் கொண்டிருக்கின்றன.காதல் பரிசு: கடந்த மூன்று நாட்களாக காலை பொழுதில் நான் செய்யும் முதல் வேலை பிட்டு பிட்டாக இப்படத்தை பார்ப்பதுதான். நான் என்ன செய்ய? ஆனி புடுங்க நான் போகும் தேனி பஸ்ஸில் மார்னிங் மார்னிங் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படி வேறு வழியில்லாமல் ஒரே படத்தை திரும்ப திரும்ப பார்க்க நேர்வதிலும் ஒரு நன்மை இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கவனத்தை கதையிலிருந்து மற்ற தொழில் நுட்பங்களின் மீது செலுத்தமுடிகிறது....
முத்திரை சுமக்கும் முதுகுகள்
ஒரு விழிப்புணர்விற்காக எதை பேசினாலும் அது சம்பந்தமான இயக்க முத்திரையை நம்மீது குத்தி விடுகிறார்கள்முத்திரைக்கெல்லாம் பயந்தால் உன் வாழ்க்கையை உன்னால் வாழ்ந்திடவே முடியாது. அடுத்தவர் வாழ்க்கையை நீ வாழும் அவலம்தான் நேரிடும் . “வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ எனும் பழைய அற்புதமான பாடலை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அதெல்லாம் உன்னளவில் நீ உன்னை தெளிவாக வைத்துக்கொள்வதில் மட்டுமே இருக்கவேண்டும். அதாவது சுயத்தை சுத்திகரிப்பு செய்துகொள்வதில் மட்டும். மற்றபடி, குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கும்வரை, லௌகீகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கும்வரை...
வீட்டுத்தோட்டம் - சிறு நினைவு குறிப்பு
Excerpts from the discussion on BT.Brinjal and Home gardeining:பி.டி. கத்தரிக்காயில் மட்டுமா ஆபத்து? தற்கால பூச்சிக்கொல்லி விவசாய முறையே விஷத்தைத்தானே விளைவித்துக் கொண்டு இருக்கிறது. முட்டைகோஸையும், காலிபிளவரையும் அதன் விளை நிலத்தில் சென்று பார்த்தவர்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்தளவுக்கு, காய் ஃபிரெஸ்ஸாக இருக்கவேண்டும் என்று ரசாயனத்தில் முக்கி எடுப்பார்கள். கத்தரிக்காயும் அப்படித்தான்.*திருச்சியில் நான் பணிபுரிந்தபோது என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரது வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே அவரது...
Buzzings - 1 (10.02.2010 to 13.02.2010)
ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் வாசலில் அரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. பொழுது போகாமல் அங்கேயிருந்த ’அம்மா’வின் திருவாய்மொழி சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டு இருந்தேன். இவரை விட ஒரு சிந்தனை மலடான ஆன்மிகவாதி யாரையும் படித்ததாக நினைவில்லை. இவர் பெண்களை கவர்ந்ததிலும் ஆச்சரியமில்லை!'ப்ரமரம்’ பார்த்துமுடித்தேன். தமிழ் திரைச்சூழல் குறித்து ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த என் குறைந்தபட்ச மிகை மதிப்பீட்டில் இன்னுமொரு செங்கல் உதிர்ந்தது.Plurk-என்ற இன்னொரு SNS-ஐ சோதித்திக்கொண்டு இருக்கிறேன். எத்தனைதான் புதிதாய் வந்தாலும் அத்தனைக்கும் உடனே பயனர் உருவாகிறார்கள்....
திரைநாயகிகள்; திரக்கதா - சில எண்ணங்கள்
Posted:
Wednesday, February 10, 2010 |
Posted by
no-nononsense
|
Labels:
சினிமா,
பெண்ணியம்
0
comments
In reply to the discussion on actresses married life:அதிகம் சம்பாதிக்கும் முன்னணி நடிகைகளைப் பற்றி பிரச்சினையில்லை. ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று பொருந்திப்போகும் வரை உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம். உதாரணமாக ராதிகா, லட்சுமியை சொல்லலாம். ஆனால் கனகா போன்ற மார்க்கெட் நிலையில்லாத நடுவாந்தர நடிகைகளின் நிலைதான் சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே நிர்கதியானது.அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்றத்தன்மையை உணர்வார்கள். பெரிய நடிகைகளைப் போல பரிசோதனை முயற்சிகளில் எல்லாம் அவர்களால் இறங்கமுடியாது. ஒரே வாழ்க்கை; அதுவும் தங்களின்...
இரண்டு கற்களும் சில சொற்களும்
நேற்று அதிகாலை 4 மணி இருக்கும். அடிவயிற்றுக்கும் கீழே உயிர்நிலையில் ஊசி துளைப்பது போல் ஒரு வலி. சிறியதாக ஆரம்பித்து சிறிது நேரத்தில் அடிவயிறு முழுவதும் வலி பரவியது. வலி என்றால் அப்படியொரு கடுமையான வலி. என்னவென்று எனக்கே புரிந்தது - சிறுநீரக கல். ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற வலியால் அவதியுற்று மருத்துவரை நாடியிருந்தேன்.
நம் ஊரில் எல்லா நோய்களுக்கும் எல்லா மருத்துவர்களும் வைத்தியம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். MBBS படித்தவரே ENT பிரச்சினைக்கும் பிரிஸ்கிரிப்ஸன் தருவார். ENT டாக்டரிடமே பல் வலிக்கும், வயிற்று வலிக்கும்(வேறென்ன ஜெலூஸில்தான்)...
காந்திய அரசியல் இயக்கம் - சில சிந்தனைகள்
இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது நான்கு மடல்களுக்கு ஒரு தடவையாவது நாம் அரசியலில் அறம் குறித்தும் அரசியல்வாதிகளின் கை சுத்தம் குறித்தும் பேசி வருகிறோம். பதவிக்காகவும் ஓட்டுக்காகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாத நேர்மையான ஒருவரையாவது இன்றைய அரசியலில் காணமுடிகிறதா என்பதே நமக்கெல்லாம் இருக்கும் ஆதங்கம். அத்தி பூத்தார் போல அப்படி ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தமிழருவி மணியன்.
ஈழப் பிரச்சினையில் எதிர் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் சோனியா விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அதன்மூலம் காங்கிரஸில்...
ஆயிரத்தில் ஒருவன் - நான் முரண்படும் இடங்கள்
நண்பர்களுடனான விவாதத்தின் ஒரு பகுதி:இங்கே இப்படம் பிடிக்கவில்லை என்று சொன்ன அனைவரும் முன்வைத்த காட்சிகளும் கருத்துக்களும் என்னை கன்வின்ஸ் பண்ணவில்லை. ’ஆம்.. அந்த இடத்தில் flaw இருக்கிறது’ என்று ஒப்புக்கொள்ளும் ஒரு குறையைக் கூட இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. மேலும் இப்படத்தை தியேட்டரில் பார்ப்பதில் அனுபவிக்கும் பிரம்மாண்டத்திற்கும் மசமச இண்டர்நெட் டவுண்லோடில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிச்சயமாக எனக்கு பிடித்ததால் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ஒரு கதையை அதன் காட்சிப்படுத்தலை...
அசல்; அஜித் மற்றும் விஜய்
இன்று அலுவலகத்திற்கு எதிரில் உள்ள அஜந்தா-எல்லோரா தியேட்டரில் ‘அசல்’ ரிலீஸ் ஆனது. முதல் நாள் முதல் ஷோவுக்கு வேட்டைக்காரனுக்கு கூடிய கூட்டத்தை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், சரம் சரமாய் பட்டாசு என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் அஜித் ரசிகர்கள். விஜய்-அஜித் இருவருமே அட்டு படங்களைத்தான் தருகிறார்கள். இருந்தும் அஜித் மீது பொதுவில் ஒரு பரிவு இருப்பதற்கு காரணம் அவர் விஜய் போல அரசியல் ஆசையில் பஞ்ச் டயலாக் பேசி படுத்தி எடுப்பதில்லை என்பதாக இருக்கலாம். எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதாகவும்...
இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக தமிழனின் தற்கால மனோபாவமும்
ஈழப் பிரச்சினை காரணமாக தமிழக தமிழன் இந்திய அரசு பற்றி குமைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட கருத்தின்மீது என் உரை:
நண்பர் அழகாக சுருக்கமாக சொல்லி விட்டார். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இது மாதிரி எழுதுபவர்களைப் பார்த்தால் எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. போர் உக்கிரமாக நடந்து வந்த சூழலில், தினமும் பல்லாயிரம் மக்கள் படுகொலையாகி விட்டதாக செய்திகள் தெரிவித்து வந்த நிலையில் நடந்த தேர்தலிலேயே மக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனும்போது, போரெல்லாம் முடிந்து இலங்கையில் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, அதிலும், அத்தேர்தலில்...
தமிழில் பொறியியல் கல்வி - சில கருத்துக்கள்
பொறியியல் கல்வியை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வந்த செய்தியின் மேல் நடந்த உரையாடலில் என் கருத்துக்கள்:இதை ஒரு ஐம்பது வருடங்கள் முன்பு முயற்சி செய்து பார்த்திருக்கலாம். ஒருவேளை பயன்பட்டிருக்கக் கூடும். இப்போது ஏழைகளைத் தவிர யார் வீட்டு பிள்ளை தமிழ் வழியில் கல்வி கற்கிறது - அதற்கு நாம் என்ஜினியரிங் பாடங்களை தமிழில் சொல்லி கொடுக்க?ஏழை வீட்டு பிள்ளைக்கு பயன்படுமே என்றால் எந்த ஏழை இங்கே என்ஜினியரிங்/மெடிக்கல் காலேஜ் பீஸை கட்டும் நிலையில் இருக்கிறான்? அப்படி கட்டுபன் ஏழையாக இருக்க வாய்ப்பில்லை.அதுதான் போகட்டும், அப்படி தமிழில் பாடம்...
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2010
(162)
-
▼
February
(18)
- ஆன்லைன் வர்த்தகமும் விவசாயிகளும்
- மலையாளிகளின் உளவியல் - ஓர் எதிர்வாதம்
- ஈழப்போராட்டமும் சர்வதேச இன மோதல்களும்
- தமிழ் திரைச்சூழல் - தொடரும் உரையாடல்
- குழந்தைமை
- Copybook cricketer!
- புராதனங்கள் குறித்த புரிதல் நிலை
- Buzzings - 2 (14.02.2010 to 21.02.2010)
- முத்திரை சுமக்கும் முதுகுகள்
- வீட்டுத்தோட்டம் - சிறு நினைவு குறிப்பு
- Buzzings - 1 (10.02.2010 to 13.02.2010)
- திரைநாயகிகள்; திரக்கதா - சில எண்ணங்கள்
- இரண்டு கற்களும் சில சொற்களும்
- காந்திய அரசியல் இயக்கம் - சில சிந்தனைகள்
- ஆயிரத்தில் ஒருவன் - நான் முரண்படும் இடங்கள்
- அசல்; அஜித் மற்றும் விஜய்
- இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக தமிழனின் தற்கால மன...
- தமிழில் பொறியியல் கல்வி - சில கருத்துக்கள்
-
▼
February
(18)