
Chetan Bhagat-ன் Five point someone மற்றும் கி.லக்ஷ்மணனின் இந்திய தத்துவஞானம் ஆகிய நூல்கள் ஒரு வாரமாக என் வாசிப்பில் இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம் அபிதான சிந்தாமணி. ஆனால் அது கலைக்களஞ்சியம் என்பதால் கணக்கில் வராது. இவையனைத்தையும் அப்படியே ஓரம்கட்ட வைத்து விட்டு இரண்டு நாள்களாக என்னை தன்னுள் முச்சூடாக இழுத்துக் கொண்டது பத்திரிக்கையாளர் பா.தீனதயாளன் எழுதிய ‘கமல்’ என்னும் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு நூல். கிழக்கு பதிப்பக வெளியீடு.
கமல் என்னுடைய அபிமான நடிகர் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஐம்பது ஆண்டுகளாக...