தனியார் பஸ்களை பொறுத்தவரை,
அதிக டிக்கெட் ஏற்ற வேண்டும் என்று இரண்டு சீட்களுக்கும் இடையே போதிய இடைவெளி இன்றி நெருக்கடித்து சீட் போட்டிருப்பார்கள். என்னை போன்ற சற்றே ஸ்தூலமான உடம்பு கொண்டவர்களுக்கும் கால் நீளம் கொண்டவர்களுக்கும் மடக்கி உட்கார்ந்தால் முட்டி பெயர்ந்து விடும்.
எங்கே வேண்டுமானலும் நிறுத்தி டிக்கெட் ஏற்றுவார்கள்.
பெரும்பாலும் தாறுமாறான வேகத்தில் பறப்பார்கள். பயத்தில் அட்ரீனல் சுரந்து சமயத்தில் அடியோடு வற்றியும்கூட விடும்.
எனக்கு ஒரு தனிப்பட்ட பிரச்னை, பாடாவதி குத்துப் பாட்டுக்களை காது சவ்வு கிழியும் ஒரு சத்தத்தில் அலற விடுவார்கள்.
இந்த பிரச்னைகள் பெரும்பாலும் அரசு பஸ்களில் கிடையாது. சீட்களுக்கு இடையில் தாரளமாக இடைவெளி இருக்கும். அதனால் கால் இடிக்காது. சில பஸ்களில் குஷனை ஒத்த ஸ்பான்ஞ் சீட்கள் கூட போட்டிருக்கிறார்கள். டீசலை மிச்சப்படுத்த 60 என்பதை உயர்வேக அளவாக கொண்டிருக்கிறார்கள். அதனால் பயமில்லை. நிறுத்தமுள்ள இடங்களில் மட்டுமே நிற்கும். சிலமுறை பிரேக் டவுன் ஆன கதைகளும் உண்டு. ஆனால் பின்னாலே வரும் மற்ற அரசு பஸ்களில் உடனே டிக்கெட் மாற்றி விட்டு விடுவார்கள்.
0 comments:
Post a Comment