அப்படியாக தவிர்க்க இயலாமல் நாம் திறந்த விட்ட சந்தை பொருளாதாரம் எந்த மாதிரியான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது; மற்றும் எந்த மாதியான விளைவுகளை ஏற்படுத்த உள்ளது?
ஆழமாக சென்று அலச வேண்டிய தலைப்பிது. யாருகாவது ஆர்வமும் நேரமும் இருந்தால் பேசலாம். முன்பாக என் சில கருத்துகள் இங்கே சுருக்கமாக.
1. சந்தை பொருளாதாரத்தின் நன்மை தீமைகள் அந்தந்த நாடுகளை பொறுத்தே அமையும். இந்தியாவை பொறுத்தவரை அதன் மக்கள் தொகை காரணமாக சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தி வரும் விளைவை rich get richer and poor get poorer என்னும் பழைய catch phrase எளிதில் விளக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முன்பு இருந்த வாய்ப்புகளை முற்றிலுமாக களைத்து போட்டு இந்த தாராளமயம் நம்மை முதலாளித்துவ சித்தாந்தங்களுக்குள் சிக்கவைத்து விட்டது. இதிலிருந்து வெளிவருவது என்பது தற்கால அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இனி முடியாது. அதனால் இதற்குள் இருந்துகொண்டு என்ன மாதிரியான நன்மைகளை உண்டாக்கிக்கொள்ள முடியும் என்பதை ஆராய வேண்டிய காலகட்டம் இது.
2. சமூக பொறுப்புணர்வுக்கும் சந்தை பொருளாதாரத்திற்குமான தொடர்பு நிலை உறுதிபடுத்தப்பட வேண்டும். பொதுவாக தனியார் மயத்தின் தாத்பர்யம் என்பது Privatizing the Profit, Socializing the Loss என்பதாக இருப்பதை மாற்றியமைக்கும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும். இதற்கு நாம் சீனாவை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். அங்கேயும் தற்சமயம் ஓரளவு தாரளமயமாக்கல் நடந்துகொண்டுள்ளது; ஆனால் எல்லாம் மிக கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே. லாபத்தை மட்டும் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு, பின்னர் ஏதாவது பிரச்னை என்றால் நட்டத்தை பொதுமக்களிடம் விட்டு விட்டு அங்கே எந்த தனியார் நிறுவனமும் ஓடிவிட முடியாது. அரசுக்கு இருக்கும் அந்த பிடிமானம் இங்கே இல்லை என்பது நீண்டகால நோக்கில் சாமானியர்களை பாதிப்பதாக இருக்கும்.
3. நிதி ஆதாரங்களில் ஜாம்பவானாக இருக்கும் அயல்நாட்டு நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் அத்தனை வியாபார வசதி வாய்ப்புகளும், சலுகைகளுடன் உள்ளூர் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான தொழில்முயற்சிகளில் மண்ணின் மைந்தர்கள் இறங்கமுடியும். அரபு நாடுகளை இதற்கு ஒரு முன்மாதியாக கொள்ள முடியும். (அதிலும் ஓட்டைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை).
4. முக்கியமாக, அந்நிய முதலீடு காரணமாக நடுத்தர நிறுவனங்கள் அழிந்து ஏற்படும் monopoly நிலை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். இன்று அதுதான் திறந்து விடப்பட்ட எல்லா துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment