இரண்டு நாள்கள் முன்பு சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் சுந்தரவன காடுகளை ஒட்டி வாழும் கிராம மக்களின் வாழக்கையைப் பற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள். சுந்தரவனக் காடுகளை பற்றி நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அவை மாங்குரோவ் மரங்களை அதிகளவில் கொண்டிருக்கும் சதுப்பு நிலக் காடுகள். கங்கை நதியின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த காடுகளில்தான் அழிந்து வரும் இனமான வங்காளப் புலிகள் (Royal Bengal Tigers) வசிக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில்...
நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான். ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது....
வானும் மண்ணும்
பொழுது போகாத நேரங்களில், நூல்களும் உடன் சேர்ந்து அலுப்பூட்டும் பொழுதுகளில் இசையை கேட்பதுடன் அதன் வரிகளை கவனமாக கவனித்து ரசிப்பது எனக்கு வாடிக்கை. இக்குழுவின் whats happening சந்துமுனையில் கூட நான் அவ்வாறு பல சிந்துகளை பாடி திரிந்தது உண்டு. லய, சந்த, தாளங்களுக்கு ஏற்ப மெட்டுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இட்டுக் கட்டுவது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைவரக் கூடியதல்ல. கூடி வரப்பெற்றவர்களின் புகழ் எளிதில் அகலக் கூடியதும் அல்ல.
அதனால்தான் ‘அள்ளி தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லி தந்த வானம் தந்தையல்லவா’ என்ற ஒரே...
கார்த்திகை தீபம் - சில நினைவுகள்
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய...
பருவமழை
மழைக்கால மேகங்கள் தங்கள் வாடிக்கைக்கு திரும்பி விட்டனவா, அல்லது கிளைமேட் சேஞ்ச் தமிழகத்துக்கு மட்டும் அளித்துள்ள பாஸிடிவ் எஃபக்டா.., எதுவாகிலும் மேட்டூர் அணை 111 அடியை எட்டும் அளவிற்கு இந்தமுறை பருவமழை கருணை மழை பொழிந்துள்ளது. மகிழ்ச்சி! விவசாயம் செழிக்கட்டும். அதன்போதாவது உணவு பொருள்கள், குறிப்பாக காய்கறிகள் விலை குறையட்டும்.
மழை பொழியும் போதெல்லாம் என் மகள் தனக்கு தெரிந்த ஒரே மழைப்பாடலான rain rain go away-ஐ பாடுகிறாள். நானும் உடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டுதான் இருந்தேன் - மாலனின் இந்த வரிகளை படிக்கும் வரை:
....மழை என்றால் சந்தோஷமான...
கைபோன போக்கில் (4)
Posted:
Friday, November 19, 2010 |
Posted by
no-nononsense
|
Labels:
சமூகம்,
தொழில்நுட்பம்
0
comments
தினமும் ஒரு எழுத்துப் பயிற்சியாக ஒரு மணி நேரம் எதையாவது கைபோன போக்கில் கிறுக்கித் தள்ள வேண்டும் என்று எண்ணிதான் இந்த தொடரை ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் கூட தொடர்ந்து எழுத முடியவில்லை. லௌகீகம் உள்ளிழுத்துக் கொண்டது. இன்றிலிருந்தாவது குறைந்தது ஒரு வாரத்திற்காகவது முடிகிறதா என்று பார்ப்போம்.**சற்று முன்பு லண்டனில் Mcjob செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். 3 மாதமாக வேலையில்லாமல் இருக்கிறாராம். ஸ்காட்லாந்தில் ரெண்டால் நம்பர் பிஸினஸ் ஒன்றுக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், இன்னும்...
கமல் - ரஜினி மோதல் (1981)
அது கமல், ரஜினி இருவருமே கே.பாலாஜி தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினி திருமணமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அது சமயம் திருமணத்தையொட்டி பாலாஜி சினிமா முக்கியஸ்தர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரைபுரண்டோடுவது இயற்கை. மது தந்த மயக்கத்தில் தனி நபர் விமர்சனங்கள் தலை தூக்கின. அது களேபரத்தில் முடிந்தது. அடுத்த நாள் ரஜினி-கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது குமுதம் லைட்ஸ் ஆனில் எழுதப்பட்ட கிசுகிசு:
“ஏழுமலையான்...
மம்மி டாடி
காலையில் அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இடையூறாக திடீரென்று வெடித்து கிளம்பியது என் மகளின் அழுகுரல். ‘ரம்பஸ்கி கடிச்சிருச்சி..’ என்று ஒரே அழுகை. அது வேறு ஒன்றுமில்லை, கொசு கடித்திருக்கிறது. உடனே எந்திரனில் வரும் ரங்கூஸ்கி கொசு அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உடனே ரோபோ போடு என்று அடுத்த அடம். ரோபோ என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் படமும், ரஜினி, ஐஸ்வர்யா ராய் பெயர்களும் அவள் ரசனைக்கு அத்துபடி.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும்...
படித்தால் மட்டும் போதுமா?
மிஸ்கின் இதேபோல் உதவி இயக்குநர்களை விமர்சித்ததை இன்னொரு பேட்டியிலும் பார்த்திருக்கிறேன். புத்தகம் அதிகம் படிப்பவர்கள் அதை சொல்லி பெருமைபட்டுக் கொள்வதை விட படிப்பார்வம் இல்லாதவர்களை படிக்க ஊக்குவிப்பதிலேதான் அதிக விருபபார்வம் கொண்டிருப்பார்கள். இப்படி விமர்சிப்பதில் அல்ல. மிஸ்கினும் நிறைய படிக்கக் கூடியவர் தான். சொல்லப்போனால் இவர் அளவுக்கு இலக்கியம் படித்தவர்கள் எழுத்தாளர்களிலேயே கூட அதிகம் இருக்க மாட்டார்கள். அதற்கு அவரின் ‘மிஸ்கின்’ என்னும் புனைபெயரே அத்தாட்சி. ஆனால் அதிகம் படிப்பவர்களுக்கு இயல்பாக ஏற்படும் நிறைகுடம் தளும்பா அடக்கம் இவருக்கு இன்னும்...
கைபோன போக்கில் (3)
ஐந்து வருடங்களாக வைத்திருந்த செல்போன் எண்ணை என் அசிரத்தையால் கோட்டை விட்டு விட்டேன் என்பது இன்றைய நாளின் சோகமான சங்கதி. திருச்சியிலிருந்து கம்பெனி மாறி தற்போது பணியாற்றும் கம்பெனியில் சேர்ந்ததும் இங்கே ஒரு சிம் பயன்படுத்தக் கொடுத்தார்கள். ஒரு மொபைல் போனே எனக்கெல்லாம் எதேஷ்டம் என்பதால் இன்னொன்றை கழற்றி வைத்து விட்டேன். இருந்தாலும் எண்ணை விட்டு விடக் கூடாதேயென அவ்வபோது இயக்கி பார்த்துவிட்டு வைத்து விடுவேன். சில மாதங்களாக அதை செய்ய மறந்து போனதில் நம்பர் கையை விட்டு போய், தற்சமயம் அதை வேறு ஒரு சகமனிதர் வாங்கி...
கோவை என்கௌன்டர்
இரண்டு குழந்தைகள் பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதில் குற்றம்சாட்டப்பட்டவர் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறித்துமான உரையாடல்:செய்திமூலம்: http://www.deccanchronicle.com/chennai/kovai-kids%E2%80%99-killer-shot-dead-cops-road-811//மக்களின் ஆதரவும் இதற்கிருப்பதாக சித்தரிப்பதில்//சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லமுடியாது. கோவை மக்களின் அமோக ஆதரவு இந்த என்கௌன்டருக்கு உண்டு என்பதே நிஜம். கோவையில் வசிக்கும் என் தோழி ஒருவரிடம் சம்பவம் நடந்த அன்றும், போலிமோதல் கொலை (encounter) நடந்த இன்றும் இது குறித்து உரையாடியிருந்தேன்....
Subscribe to:
Posts (Atom)