மிஸ்கின் இப்படி சொல்லி இருப்பது என்பதை விட தொடர்ந்து சொல்லிவருவது என்பதே பொருத்தம். ஒரு வருடம் முன்பு மிஸ்கின் கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு லேண்ட்மார்க்கில் நின்றுகொண்டு அளித்த பேட்டி ஒன்று யூடியூபில் தேடினால் கிடைக்கலாம். அதை பார்த்தால் தெரியும் உ.இகள் பற்றி அதிலும் எவ்வளவு காட்டமாக விமர்சித்திருப்பார் என்று.
“எதையும் படிக்காம அனுபவம் அனுபவம்னு சொல்றான். என்னடா உனக்கெல்லாம் பெரிசா அனுபவம் இருக்கப் போவுது.. ஃப்யில் ஆகி எஙகயாவது ஓட்டல்ல வேலை செஞ்சிருப்ப.. அப்பா கடங்காரனாகியிருப்பான்.. தங்கச்சி ஓடிப் போயிருப்பா.. உனக்கு லவ் ஃபெயிலியர் ஆகியிருக்கும்.. இதுதான் அனுபவமா.. புத்தகங்களை வாசிக்கணும்...” - இந்த ரீதியில் போனது அந்த பேட்டி. அப்போதே எனக்கு இவர் என்ன இப்படி பேசுகிறார் என்று புருவம் உயர்ந்தது.
நீ நேரடியாக ஒருவனை விமர்சிப்பது என்பது வேறு; அதை பொதுதளத்தில் பொதுப்படையாக(இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா) எல்லோரையும் செய்வது என்பது வேறு. உ.இ.களின் எதிர்வினையிலுள்ள தனிப்பட்ட தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவர்களின் கோபக்குரலில் நியாயம் இல்லாமலில்லை என்பதுதான் என் கருத்து. குறிப்பாக சுயஇன்பமே அவர்களின் அனுபவம் என்றெல்லாம் சொன்னது யாருடைய தன்மானத்தையும் சீண்டி பார்ப்பது. எனக்கும் மிஸ்கின் படங்கள் பிடிக்கும். இயக்குநர்களின் படைப்பையும், அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. இவரின் வாய்துடுக்கு அவருக்கே சத்ரு.
அப்புறம் இவர் சாருவால்தான் இப்படி ஆனார் என்பதை விட இருவருக்குள்ளும் உள்ள இணக்கத்திற்கு இனம் இனத்தோட சேர்ந்த கதை காரணமாக இருக்கலாம்:-)
0 comments:
Post a Comment