தோல்விக்கோப்பைக்கான வீர விளையாட்டு

Posted: Wednesday, September 8, 2010 | Posted by no-nononsense | Labels: ,
எழுதலாம் என்று எண்ணியிருந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நேரங்கள் அருகி வருவதாக உணர்கிறேன். ஓரளவு எழுதும் விருப்பமும்கூட. 

லௌகீகத்திற்கும் சுயாதீனத்திற்கும் இடையிலான அல்லாடல் இது. 

தன்விருப்பங்களுக்கும் சூழ்நிலையின் அழுத்தங்களுக்கும் இடையேயான முடிவில்லா பகடையாட்டம் என்றும் சொல்லலாம். 

சில நேரங்களில் தோல்விக்கோப்பைக்கு நடக்கும் விநோத விளையாட்டாகவும் தோன்றுகிறது. ஆனாலும் சுவாரசியமாகவே ஆடிக் கொண்டிருக்கிறேன். 

வேறு வழியுமில்லை. 

கடைசி கட்டம் வரை காயை நகர்த்திதான் ஆகவேண்டும். பாதியில் முடித்துக்கொள்வது வீரனுக்கு அழகல்ல.

ஆனால் வீரமென்பதே பயமில்லாமல் நடிப்பதுதான். 

எதற்கும் என்றும் சாஸ்வதமில்லை எனும்போது எதைக்கண்டு இந்த பயம்? 

மானுட அச்சங்களின் தாத்பரியத்தை கண்டாருமில்லை. கண்டு விண்டாருமில்லை!

###

(இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தேன். உயர்த்தனி அறிவுஜீவித்தனம் சொட்டுகிறது. வார்த்தைகளில் விளையாடி எழுத்தென ஏந்திப் பிடிப்பது இப்படித்தான் போலும்! )

1 comments:

  1. no-nononsense said...
  2. //”வீரமென்பதே பயமில்லாதது மாதிரி நடிப்பதுதான்”

    அவரே காபி அதுல இருந்து நீ காபி அடிக்கிறியா?//

    நற்பொருள் யார்யார் வாயுரைப்பினும் அப்பொருள்
    எடுத்தாள்வது சான்றோர்க்கு இயல்பு - அதை
    காப்பியென்று நகைப்பதும் இறுமாந்து இழிப்பதும்
    பொறாமைக்காரர்களின் மனத்திரிபு.

    :-)

Post a Comment