அப்பா டக்கர்!

Posted: Monday, June 20, 2011 | Posted by no-nononsense | Labels:

சமீப காலமாக பலரும் ‘அப்பா டக்கர்’ என்பதை ரொம்ப மகிழ்ச்சியுடன் விரும்பி பயன்படுத்துவதை கவனிக்கிறேன். ‘இவரு பெரிய அப்பா டக்கரு’, ‘நீ பெரிய அப்பா டக்கர் டா.. உன்கிட்டயெல்லாம் மோத முடியுமா’.. ரீதியில் அவற்றின் பயன்பாடு உள்ளது. அதாவது ”பெரிய பு...ங்கி” என்னும் அர்த்தத்தில். ஆனால் அதுதானா, அதன் சரியான அர்த்தம்?

டக்கர் தெரியும். டாப் டக்கர்-ம் தெரியும். இதென்ன அப்பா டக்கர்?

ஒரிஜினல் சென்னைவாசி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன். மெட்ராஸ் தமிழில் அவர் வித்தகர். அந்த உச்சரிப்பை கேட்கவே அவரிடம் விரும்பி உரையாடுவதுண்டு. அவர் சொன்ன விளக்கத்தை நாட்டு மக்கள் நலன் கருதி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1. டக்கர் ஃபிகர் - அழகான பெண்.


டாப் டக்கர் ஃபிகர் - ரொம்ப அழகான பெண்.


அப்பா டக்கர் ஃபிகர் - அதெல்லாம் ‘அப்பா டக்கர்’ ஃபிகர் டா.. நாமெல்லாம் நெனச்சி கூட பார்க்க முடியாது. (சற்றே வயிற்றெரிச்சலுடன் சொல்வது)


2. iPhone4 -லாம் அப்பா டக்கர் போன் டா... நமக்கு அதெல்லாம் எட்டாக்கனி!

ஆக, சற்றே பொறாமையுடன் வயிற்றெரிச்சலுடன் சொல்லப்படுவதுதான் அப்பா டக்கர்.


அது இப்போது வேறு பல அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.


மொழி ஆராய்ச்சி என்பது மிகவும் சுவாரசியமான துறை என்பதை மணிப்பிரவாள நடை குறித்து தேடி தெரிந்து கொண்ட சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தளவுக்கு எல்லாம் சிரமப்பட்டுக்கொள்ள வேண்டாம். குறைந்த பட்சம் நம் சொல்வங்கியை பெருக்கிக் கொள்ளவாவது நிறைய படிக்கலாம். அஃதொன்றும் அப்படியெல்லாம் அப்பா டக்கர் வேலையல்ல! :-)

0 comments:

Post a Comment