தமிழ் இணையம்

Posted: Monday, June 20, 2011 | Posted by no-nononsense | Labels:
தமிழ் இணையம்.

தமிழில் இண்டர்நெட் பிறந்த 1996-2000 கால கட்டங்களில் நான் இணையத்தில் இல்லை. ஆனால், அது தவழ்ந்து இன்று மீசை அரும்ப தொடங்கியுள்ள கடந்த பத்தாண்டு காலங்களில் அதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நடந்துள்ள ஒவ்வொரு நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஈழம், இலக்கியம், நட்பு, வக்கிரம், ஆபாசம், காதல், காமம், குழு அரசியல்... என்று இக்குறுகிய கால கட்டத்தில் பல நிகழ்வுகள் கடந்து சென்றுவிட்டன. அவைகளின் வீச்சும், விளைவுகளும் நமக்கு வெளியுலக அனுபவத்தில் கிடைத்திட சாத்தியமே இல்லாதவை. சொல்லி விளங்க வைக்க முடியாதவை.

எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கான மானசீக குருவையை இங்கேதான் கண்டறிந்தேன். என் இணைய செயல்பாட்டை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொண்டு, தினமும் எத்திக்காவது சென்று எதையாவது தேடி படிக்கும் ஆர்வம் எனக்குள் ஏற்படவும் - அவரின் ஆளுமையின் மீது நான் கொண்ட பிரமிப்புதான் காரணம். மேலும் சிலர் என்னை தீவிரமாக பாதித்திருக்கிறார்கள். எல்லாமே என்னளவில் பேரனுபவங்கள். என்றாவது பதிந்து வைக்க வேண்டும்.


இன்று கிளம்பிய சாரு சர்ச்சையை தொடர்ந்து இதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

0 comments:

Post a Comment