சாரு பாலியல் சர்ச்சையை முன்வைத்து

Posted: Sunday, June 26, 2011 | Posted by no-nononsense | Labels: ,
உண்மையில் வினவு என்ன எழுதியுள்ளார்கள் என்பதை முழுமையாக நான் படிக்கவில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடியோ விளக்கமோ அவசியமில்லை. சாரு ஒரு ஸ்த்ரீலோலன் என்பது பலமுறை சந்தி சிரித்த விஷயம். அது இன்று அவரின் விடலை ரசிகர்களுக்கு வேண்டுமானால் புது செய்தியாகவும், கசப்பான உண்மையாகவும் இருக்கலாம். அவரை பல காலமாக அறிந்தவர்களுக்கோ, இலக்கியம் பற்றிய உண்மையான பரிச்சயம் கொண்டவர்களுக்கோ அல்ல. அதனால் சாரு தான் சாட் செய்தாரா என்ற கேள்வியே வலுவற்றது.

’108 குட்டிக் கதைகள்’ என்று சாரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். வழக்கம் போல அதன் கருபொருள் செக்ஸ் தான். (அதை அவர் வேறு வேறு சொற்களில் உன்மத்தம், உருக்கம், காதல் வாதை என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்). அதை எழுதுவதற்கான தான் ’ஃபீல்டு ஒர்க்’ செய்வதாகவும், தன் வயதை குறைத்துச் சொல்லி ஒரு கல்லூரிப் பெண்ணை மடக்கி விட்டதாகவும், அவளை மயக்கி அழைத்து சென்று உடலுறவு கொண்டுவிட்டதாகவும் எழுதியிருந்தார்.

பின்னர் அதனை நீட்டித்து எழுதிதான், காமரூப கதைகள் என்ற நூல் வெளியானது என்று நினைக்கிறேன். அதை நான் இன்னும் படிக்காததால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆக, அந்த உலக எழுத்தாளர் தன் ஆன்மாவை உருக்கி பல காலமாக தந்து கொண்டிருப்பதெல்லாம் இந்த மாதிரி பலான லீலைகளின் டைரி குறிப்புகள் தான். அது இன்று எழுத்தாவதற்கு முன்பே அம்பலப்பட்டிருக்கிறது. சில புதிய வாசகர்களிடையே அதிர்ச்சி அலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சாருவின் முதல் மனைவியின் பெயர் அமரந்தா. அவரும் எழுத்தாளர்தான். நிறைய மார்க்ஸீய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றும் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு சொல்லகூடிய சிலரில் ஒருவராக அவர் இருக்கிறார்.தன் மகள் என்று சாரு சொல்வது இவர்கள் இருவருக்கும் பிறந்ததுதான். அவர் ஏன் பிரிந்து சென்றார் என்பதற்கும் இந்த மாதிரி லீலைகள் தான் காரணம் என்று சொல்வார்கள்.

எழுத்தாளர் மாமல்லனை நீ அறிவாய் என்று நம்புகிறேன். அவர் இந்த விஷயத்தில் சாருவை ஆதரிக்கிறார். ஆனால் அதற்கு அவர் சொல்லும் நியாயங்கள் வேறு. அதனுள் நாம் நுழைய வேண்டாம். அவர் சாரு பற்றி முகநூலில் எழுதியுள்ள ஒரு கருத்தை மட்டும் பார்ப்போம்:

சாரு பொமபளைப் பொறுக்கிங்கறது ஊரறிஞ்ச ரகசியம். ஒரு முறையில்ல இது முதல் முறையும் இல்லே. பலமுறை அவமானப்பட்டிருக்கான். ஆனா பெரிய மனுஷன் வேஷம் கட்டி இணையத்துல ஆடறவன், பொண்டாட்டி வெளிநாடு போனப்போ என்ன பண்ணினான்னு தெரியுமா? இல்லே, இந்தப் பொண்ணைவிடச் சின்னப் பொண்ணு அண்ணன்கூடத் தொணைக்குப் போனா அவளை வேலைக்கு வெச்சிக்கவான்னு கேட்டான். வழிசலைப் பாத்த அந்தப் பொண்ணு, அய்யையோ அவன் பார்வையே சரியில்லைனு சொல்லிடுச்சி, மாட்டிக்க ரெடியா மானக்கெட்டு நிக்கிற சாருவைப் பிடிக்கிறது பெரியவிஷயமில்லே!

இங்கே அவர் வேறு யாரையோ இதில் கோர்த்து விடுகிறார். அநேகமாக ஜெமோவாக இருக்கலாம். இதன்படி, இலக்கிய வட்டத்தில் சாருவைப் பற்றி புழங்கும் கருத்து - மானங்கெட்ட ஆள், பாலியல் ஆசாமி. இன்னும் சொல்லப் போனால் அது ஒரு அசிங்கம். அதன் எழுத்து அதைவிட அசிங்கம். இதுதான் இவர் போன்ற சாருவின் சமகால எழுத்தாளர்களின் கருத்து.

அதனால் >>இது பெரிய பிரச்னை ஆகும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் இலக்கிய உலகில் ஒருசிலரைத் தவிர யாரும் வாய் திறக்கவே இல்லையே? ஆச்சர்யமாக உள்ளது !!!<< என்னும் உன் ஆச்சரியம் அநாவசியம். அவரை இலக்கிய எழுத்தாளராகவே யாரும் அங்கீகரிப்பதில்லை.

சாருவின் எழுத்து நடை வசீகரமானது. எந்த subject குறித்தும் அவரால் மிக சுவாரசியமாக எழுத முடியும். சுஜாதாவுக்கு அடுத்து அந்த திறமையை நான் சாருவிடமே காண்கிறேன். மற்றபடி, அவருடைய ஆக்கங்களுக்கான இலக்கிய இடத்தை காலம் தீர்மானிக்கும்.

மற்றவர்கள் தொட அஞ்சும் பாலியல் கருபொருள்களை அவர் தைரியமாக தொட்டு எழுதுகிறார் என்ற அளவில் அவர் முக்கியமானவர். ஆனால், அதற்காக வெளியேயும் ‘தொட்டு’ அவமானப்பட்டுக் கொள்வதுதான் சமயத்தில் சந்தி சிரித்துவிடுகிறது.

அவருடைய cult followers பற்றியெல்லாம் நான் பேசவே விரும்பவில்லை. அவர்களுக்கு இலக்கியமும் தெரியவில்ல, சாருவும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் வந்ததும் வருந்தக்கூடும். அது அவர்கள் பிரச்னை.

நாம் நம் அளவில் தெளிவாக இருந்து, அல்லன விலக்கி நல்லன நாடி வாசிப்பது ஒரு வாசகனாக நாம் கைகொள்ள வேண்டிய பக்குவம்.

0 comments:

Post a Comment